IPL 2025: ஐபிஎல்லில் முக்கிய வீரரை கழட்டி விடப்போகும் மும்பை இந்தியன்ஸ்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Mumbai Indians: சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐயின் வான்கடே அலுவலகத்தில் ஐபிஎல் அதிகாரிகள் மற்றும் அணி உரிமையாளர்களுக்கு இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில அணிகளின் உரிமையாளர்கள் தங்கள் அணியை சேர்ந்த அனுபவமிக்க வீரர்களை விடுவிக்க போவதாக அதிர்ச்சிகர தகவல்கள் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த செய்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய ஒரு வீரரும் விடுவிக்கப்பட இருக்கிறார்.

IPL 2025: ஐபிஎல்லில் முக்கிய வீரரை கழட்டி விடப்போகும் மும்பை இந்தியன்ஸ்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஹர்திக் பாண்டியா

Updated On: 

12 Nov 2024 16:03 PM

ஐபிஎல் 2025: கடந்த ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அடுத்த ஐபிஎல் சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இப்போதிலிருந்து தொடங்கியது. ஐபிஎல் 2025 போட்டிக்கான மெகா ஏலம் வருகின்ற டிசம்பர் மாதம் இறுதியில் நடக்க இருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன்பாக ஐபிஎல் விளையாடும் 10 அணிகளும் 4 வீரர்களை மட்டுமே, தக்கவைத்து கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்கவேண்டும். இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐயின் வான்கடே அலுவலகத்தில் ஐபிஎல் அதிகாரிகள் மற்றும் அணி உரிமையாளர்களுக்கு இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில அணிகளின் உரிமையாளர்கள் தங்கள் அணியை சேர்ந்த அனுபவமிக்க வீரர்களை விடுவிக்க போவதாக அதிர்ச்சிகர தகவல்கள் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த செய்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய ஒரு வீரரும் விடுவிக்கப்பட இருக்கிறார்.

ALSO READ: IPL 2025: மீண்டும் ஐபிஎல்லில் ராகுல் டிராவிட்.. பலே திட்டத்துடன் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்!

மும்பை இந்தியன்ஸ் அணியானது தங்கள் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை விடுவிக்கப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024க்கு முன்பு ஹர்திக் பாண்டியாவை மீண்டும் தங்கள் அணியில் சேர்த்து கேப்டனாக நியமித்தது. அப்போது, ரோஹித் சர்மாவிடம் கேப்டன் பதவியை ஹர்திக் பாண்டியாவுக்கு கொடுத்ததால், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் ஹர்திக் மீதும், அணி நிர்வாகத்தின் மீதும் கோபத்தை வெளிப்படுத்தினர். ரசிகர்கள் நினைத்தபடியே, ஐபிஎல் 2024ல் மும்பை இந்தியன்ஸ் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. இந்தநிலையில், ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை அணி விடுவிக்க போகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.

யாரை தக்க வைக்க போகிறது மும்பை இந்தியன்ஸ்..?

கிடைத்த தகவலின்படி, மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை தக்க வைக்க விரும்புகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி நிர்வாகம் ஒருவேளை விடுவித்தால், அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்படலாம். ஏனென்றால், தற்போது இந்திய டி20 அணியின் முழுநேர கேப்டனாக சூர்யகுமார் யாதவ் உள்ளார். இத்தகைய சூழ்நிலையில், சூர்யகுமார் யாதவ் தலைமையின்கீழ், ரோஹித் சர்மா விளையாடுவதில் பிரச்சனை இருக்காது.

சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட வீரர்கள் தக்கவைக்கப்பட்டால், திலக் வர்மாவும் வெளியேறக் கூடும். இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இப்போது ஒரு புதிய அணியை தயார் செய்ய விரும்புகிறது என்பதில் சந்தேகமில்லை.

ALSO READ: IPL 2025: மெகா ஏலத்திற்கு முன் 3 கேப்டன்கள் விடுவிப்பு..? குட்பை சொல்லப்போகும் அணிகள்..!

விதிகளில் மாற்றம் இல்லையா..?

ஐபிஎல் விதிகளின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலத்தை நடத்தும். அதன்படி, 2021க்கு பிறகு வருகின்ற டிசம்பரில் மீண்டும் மெகா ஏலம் நடக்கவுள்ளது. இந்த சூழ்நிலையில், ஐபிஎல் 2025 போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் ஒரு வெளிநாட்டு வீரர் உள்பட தலா நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைக்க அனுமதிக்கப்படும். எனினும், இம்முறை தக்கவைக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பிசிசிஐயோ, ஐபிஎல்லோ இதுவரை எதுவும் கூறவில்லை. ஆனால் தற்போது 5 வீரர்கள் தக்கவைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை 5 வீரர்கள் என்று அறிவிக்கப்படால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தக்கவைத்துக்கொள்ள விரும்பும்.

இரவில் தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள்..!
வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா?
தினசரி நெய் சாப்பிட்டால் என்ன ஆகும்? ஏன் சாப்பிட வேண்டும்?
நடிகை டாப்ஸி பன்னுவின் வொண்டர்ஃபுல் ஆல்பம்