IPL 2025 Retention: தோனிக்காக முக்கிய வீரர்களை வெளியேற்ற திட்டமா? பிசிசிஐ முடிவுக்காக காத்திருக்கும் சிஎஸ்கே!

MS Dhoni: ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ்.தோனி மற்றொரு சீசனில் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், ஒரு வெளிநாட்டு வீரர் உள்பட 5 தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சிஎஸ்கே தயாரித்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், இதில் தோனி குறித்தான முக்கிய முடிவும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

IPL 2025 Retention: தோனிக்காக முக்கிய வீரர்களை வெளியேற்ற திட்டமா? பிசிசிஐ முடிவுக்காக காத்திருக்கும் சிஎஸ்கே!

எம்.எஸ்.தோனி (Image: PTI)

Updated On: 

27 Sep 2024 10:24 AM

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) பங்கேற்கும் 10 அணிகளின் உரிமையாளர்கள் வரவிருக்கும் மெகா ஏலத்திற்கான தங்கள் தக்கவைப்பு பட்டியலை இறுதி செய்ய தயாராகி வருகின்றனர். இருப்பினும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்று அழைக்கப்படும் பிசிசிஐ மெகா ஏலம் மற்றும் தக்கவைக்கும் வீரர்கள் தொடர்பான விதிகளை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. பிசிசிஐ எப்போது தக்கவைப்பு கொள்கையின் விதிகளை வெளியிடும் என்று அனைத்து ஐபிஎல் உரிமையாளர்கள் உள்பட இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் தக்கவைப்பு கொள்கையை பிசிசிஐ வெளியிடும் என்று நம்பப்படுகிறது.

ALSO READ: Watch Video: ’இங்க ஆளு இல்லை நிப்பாட்டுங்க’- வங்கதேசத்திற்கு பீல்டிங் செட் செய்த ரிஷப் பண்ட்..!

எம்.எஸ்.தோனி:

ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ்.தோனி மற்றொரு சீசனில் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், ஒரு வெளிநாட்டு வீரர் உள்பட 5 தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சிஎஸ்கே தயாரித்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், இதில் தோனி குறித்தான முக்கிய முடிவும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

RevSportz இன் அறிக்கையின்படி, மெகா ஏலத்திற்கு முன்னதாக தக்கவைக்க விரும்பும் 5 வீரர்களின் பட்டியலை சென்னை சூப்பர் கிங்ஸ் தயாரித்துள்ளது. இதில், ரைட் டு மேட்ச் உட்பட ஆறு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள பிசிசிஐ அனைத்து ஐபிஎல் உரிமையாளர்களையும் அனுமதிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இன்னும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தக்கவைப்பு பட்டியலில் உள்ள ஐந்து வீரர்களில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதிஷா பத்திரனா மற்றும் எம்.எஸ்.தீனி ஆகியோர் அடங்குவர். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், தக்கவைத்து கொள்ளும் பட்டியலில் தீபக் சஹார், டெவான் கான்வே, டேரில் மிட்செல், மகிஷா தீக்‌ஷனா ஆகிய நட்சத்திர வீரர்களில் பெயர்கள் இடம்பெறவில்லை. 2025 ஐபில் சீசனுக்கு பிறகு தோனி விளையாட மாட்டார் என்று தெரிந்தும், சென்னை நிர்வாகம் தனது சில சிறந்த வீரர்களை சேர்க்காமல் தைரியமான முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சிஎஸ்கே வைத்த கோரிக்கை:

அன் கேப்டு என்னும் பழைய விதிய மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று வென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகிகள் பிசிசிஐக்கு ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களை அணியின் இடம் பெறாத வீரர்களாக தக்கவைத்து கொள்ள உரிமையை சிஎஸ்கே நிர்வாகம் கேட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக குறித்து பிசிசிஐ இதுவரை தனது முடிவை அறிவிக்கவில்லை. எம்.எஸ்.தோனியை அன் கேப்ட் பிளேயர் பிரிவில் வைத்தால் குறைவான சம்பளத்தை வழங்க முடியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்துகொண்டால் மிகக்குறைந்த சம்பள பிரிவில்தான் தக்கவைக்கப்படுவார் என்பது உறுதி.

ALSO READ: Ravichandran Ashwin: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய வரலாறு படைத்த அஸ்வின்.. அணிவகுத்த பல்வேறு சாதனைகள்!

பழைய விதி என்ன..?

ஐபிஎல்லில் அப்போதைய விதிகளில்படி, 5 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள், கேப்டு இல்லாத வீரர்களாக கருத அனுமதிக்கப்பட்டனர். இந்த விதி கடந்த 2008ம் ஆண்டு தொடங்கி 2021ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. பின்னர் இந்த விதியை யாரும் பெரிதாக பயன்படுத்தாத காரணத்தில் நிறுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன நிலையில், தோனியை கேப் செய்யப்படாத வீரராக கருத வேண்டும் என்று சிஎஸ்கே விரும்புகிறது. அதன்படி, மீண்டும் சென்னை அணிக்காக தோனி விளையாட வந்தால், சிஎஸ்கே 6வது கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கும். இம்பேக்ட் வீரர் விதியை பயன்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் தோனியை அவ்வப்போது களமிறக்கலாம். இருப்பினும், பிசிசிஐ வகுத்து விரைவில் வெளியிட இருக்கும் தக்கவைப்பு கொள்கையை பொறுத்து தோனி விளையாடுவாரா இல்லையா என்பது தெரியும்.

வெற்றிகரமான கேப்டன்:

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. கடந்த ஆண்டு இளைஞர்களுக்கு வழிவிடும் நோக்கில் மகேந்திர சிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை வழங்கினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது எம்.எஸ்.தோனி தலைமையில் 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் பட்டத்தை வென்றுள்ளது.

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!