5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IPL 2025: 5 ஐபிஎல் அணிகளுக்கு புதிய கேப்டன்கள்.. சூடுபிடிக்கப்போகும் ஏலம்..!

IPL 2025 Retention: கடந்த சீசனின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2024ல் இருந்து வெளியேறியது. அன்று முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புதிய கேப்டனை தேடி வருகிறது.

IPL 2025: 5 ஐபிஎல் அணிகளுக்கு புதிய கேப்டன்கள்.. சூடுபிடிக்கப்போகும் ஏலம்..!
ஐபிஎல் அணிகள்
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 06 Nov 2024 12:46 PM

ஐபிஎல் 2025ல் பங்கேற்கும் 10 அணிகளும் மெகா ஏலத்திற்கு முன்பாக, தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியிட்டது. அதன்படி, மொத்தம் 46 வீரர்களை 10 அணிகள் தக்க வைத்துள்ளனர். மேலும், விடுவிக்கப்பட்ட வீரர்களில் 5 கேப்டன்களும் இடம் பெற்றிருந்தது அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. அதன்படி, அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளின்போது 5 அணிகளுக்கு புதிய கேப்டன்களை நாம் காணலாம்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) சீசன் 18ல் 5 அணிகள் கேப்டன்சியை புதிய வீரர்களுக்கு கொடுப்பது உறுதி. அந்தவகையில், விடுவிக்கப்பட்ட அந்த கேப்டன்கள் யார் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ALSO READ: ICC Champions Trophy 2025: இந்திய ரசிகர்களை கவர பாகிஸ்தான் புதிய யுக்தி.. சாம்பியன் டிராபியில் பங்கேற்குமா இந்திய அணி?

ஃபாப் டு பிளெசிஸ்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாப் டு பிளெசிஸை அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று சீசன்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கேப்டனாக டு பிளெசிஸ் செயல்பட்டு வந்தார். தற்போது டுபிளெசிஸ் அணியில் இருந்து வெளியேறியதால் அடுத்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை புதிய கேப்டன் ஒருவர் வழிநடத்தலாம் அல்லது விராட் கோலியே மீண்டும் கேப்டனாக பதவி ஏற்கலாம்.

கடந்த சீசனின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2024ல் இருந்து வெளியேறியது. அன்று முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புதிய கேப்டனை தேடி வருகிறது.

கே.எல்.ராகுல்:

2022 முதல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்பாக கே.எல்.ராகுலை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தக்கவைக்காமல் விடுவித்தது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தக்க வைப்பு பட்டியலுக்கு முன்பு கே.எல்.ராகுலை ரூ. 18 கோடியை தக்கவைத்து கொள்ள முன்வந்தார். ஆனால், கே.எல்.ராகுல்தான் இந்த வாய்ப்பை நிராகரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஐபிஎல் 2025ல் எல்எஸ்ஜி அணியை நிக்கோலஸ் பூரன் வழிநடத்த வாய்ப்புள்ளது.

ரிஷப் பண்ட்:

ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏற்கனவே இந்த அணியின் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயரை குறிவைக்கலாம்

டெல்லி அணியில் ரிஷப் பண்ட் பிரிந்ததன் மூலம் கடந்த 9 ஆண்டுகளாக அணிக்கும் பண்டுக்கும் இடையே இருந்த உறவு முறிந்தது. 2016 ஆம் ஆண்டு டெல்லிக்காக ஐபிஎல்லில் அறிமுகமான பண்ட், அதன் பின்னர் இந்த உரிமையின் ஒரு பகுதியாக இருந்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர்:

கடந்த மார்ச் மாதம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்ற ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். எனவே, ஐபிஎல் 2025ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய கேப்டன் தேர்வு செய்யப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கடந்த 2022ம் ஆண்டு 12.25 கோடிக்கு ஷ்ரேயாஸை ஐயரை வாங்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 2022ம் ஆண்டில் முதல் சீசனில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 2023ம் ஆண்டு காயம் காரணமாக விளையாடவில்லை. ஐபிஎல் 2024 மீண்டும் கேப்டனாக களமிறங்கி, சாம்பியன்பட்டத்தை வென்று கொடுத்தார் ஷ்ரேயாஸ் ஐயர். அறிக்கையின்படி, ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் 2025ல் அதிக சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது.

ALSO READ: IND vs NZ: சர்ச்சையான சிராஜ் பேட்டிங் ஆர்டர்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் நைட் வாட்ச்மேன் என்றால் என்ன..?

ஷிகர் தவான்:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து ஷிகர் தவான் ஓய்வு பெற்றார். இதையடுத்து, பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் ஐபிஎல்லில் இருந்து விடை பெற்றார். எனவே, இனி வரும் சீசன்களுக்கு பஞ்சாப் கிங்ஸ் புதிய கேப்டனை தேடும்.

ஷிகர் தவான் ஐபிஎல் 2024 இல் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணிக்காக விளையாட இருந்தார், ஆனால் அவர் காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். காயம் காரணமாக இந்த சீசனில் தவான் வெளியேறியதால் சாம் கர்ரான் கேப்டனாக செயல்பட்டார்.

Latest News