IPL Retention 2025: தீபாவளியன்று இரட்டை வெடி.. தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிடும் ஐபிஎல் அணிகள்..! - Tamil News | IPL 2025 Retention Prediction list of these Players for IPL Retention, know details in tamil | TV9 Tamil

IPL Retention 2025: தீபாவளியன்று இரட்டை வெடி.. தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிடும் ஐபிஎல் அணிகள்..!

IPL 2025 Retention: ஐபிஎல்லில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியின் அதிகபட்சமாக 6 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும். ஒரு அணி 6 வீரர்களுக்கு குறைவாக தக்கவைத்து கொண்டால், ஏலத்தின்போது அந்த அணி ஆர்.டி.எம் மூலம் வெளியிட்ட வீரரை மீண்டும் தங்கள் அணியில் எடுத்துக்கொள்ளலாம்.

IPL Retention 2025: தீபாவளியன்று இரட்டை வெடி.. தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிடும் ஐபிஎல் அணிகள்..!

ஐபிஎல் கேப்டன்கள் (Image: twitter)

Published: 

31 Oct 2024 12:06 PM

இந்தியர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று (அக்டோபர் 31ம் தேதி) இரட்டிப்பு மகிழ்ச்சியை பெற இருக்கின்றனர். முதலாவது இன்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இரண்டாவது, ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 அணிகளும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட வேண்டும். இதன் கடைசி தேதி இன்றுடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து, ஐபிஎல் 2025 சீசனுக்கான ஏலம் இந்த ஆண்டு நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் நடைபெறலாம்.

ALSO READ: On This Day 2005: இலங்கைக்கு எதிராக ருத்ர தாண்டவம்.. 183 ரன்கள் அடித்து மிரட்டிய எம்.எஸ்.தோனி!

முக்கிய விதிகள்:

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐபிஎல் அணிகள் தக்கவைத்து கொள்வது தொடர்பான புதிய விதிகளை வெளியிட்டது. அதன்படி, ஐபிஎல்லில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியின் அதிகபட்சமாக 6 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும். ஒரு அணி 6 வீரர்களுக்கு குறைவாக தக்கவைத்து கொண்டால், ஏலத்தின்போது அந்த அணி ஆர்.டி.எம் மூலம் வெளியிட்ட வீரரை மீண்டும் தங்கள் அணியில் எடுத்துக்கொள்ளலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இப்போது அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் உள்ளார். அந்தவகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே/ரச்சின் ரவீந்திரா மற்றும் மதிஷா பத்திரனா ஆகியோரை தக்க வைத்து கொள்ளலாம்.

ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை.

மும்பை இந்தியன்ஸ்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போன்று மும்பை இந்தியன்ஸ் அணியும் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. மும்பை அணி இந்த முறை கேப்டன் ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தக்கவைத்து கொள்ளலாம். இது தவிர, இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகியோரை வெளியேற்றியபின், ரைட் டு மேட்ச் மூலம் ஏலத்தில் எடுக்கலாம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை ஐபிஎல் வரலாற்றில் 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கேகேஆர் அணி தனது கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை விடுவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், ரிங்கு சிங், ஷர்ஷித் ராணா மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரை தக்க வைக்கலாம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், ஹென்ரிச் கிளாசன் மற்றும் அபிஷேக் சர்மாவை தக்க வைத்து கொள்ளலாம். விக்கெட் கீப்பர் கிளாசனுக்கு ரூ.23 கோடியும், கம்மின்ஸூக்கு ரூ. 28 கோடியும், அபிஷேக் சர்மாவுக்கு ரூ.14 கோடிக்கும் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ரைட் டு மேட்ச் அடிப்படையில் டிராவிஸ் ஹெட் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டியை மீண்டும் அணியில் எடுக்கலாம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மீண்டும் கேப்டன் பதவியை விராட் கோலிக்கு கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விராட் கோலி, முகமது சிராஜ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரை தக்கவைத்துகொண்டு கேப்டன் ஃபாப் டி பிளெசிஸ், கேமரூன் கிரீன், டாம் கர்ரன் ஆகியோரை விடுவிக்கலாம். ரைட் டூ மேட்ச் அடிப்படையில் ரஜத் படிதார் அணியில் இணையலாம்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், அஸ்வின் ஆகியோரை தக்க வைக்கலாம். ரியான் பராக் ரைட் டு மேட்ச் அடிப்படையில் உள்ளே வரலாம். அவேஷ் கான், ஷிம்ரோன் ஹெட்மியர், ட்ரெண்ட் போல்ட் மற்றும் ரோவ்மேன் பவல் போன்ற நட்சத்திர வீரர்கள் வெளியேறலாம்.

ALSO READ: Virat Kohli: இன்னும் ஒரு இன்னிங்ஸ்.. புதிய உலக சாதனை படைக்கவிருக்கும் விராட் கோலி!

குஜராத் டைட்டன்ஸ்:

குஜராத் டைட்டன்ஸ் அணியானது கேப்டன் சுப்மன் கில், ரஷித் கான், முகமது ஷமி, சாய் சுதர்சன் ந்மற்றும் ராகுல் தெவட்டியா ஆகியோரை தக்க வைக்கலாம். உமேஷ் யாதவ், கேன் வில்லியம்சன், விருத்திமான் சாஹா, நூர் முகமது, டேவிட் மில்லர் ஆகியோரை விடுவிக்கலாம்.

டெல்லி கேப்பிடல்ஸ்:

டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ய், குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோரை தக்க வைக்கலாம். ஆஸ்திரேலிய இளம் பேட்ஸ்மேன் ஜேக்- பிரேச்சர் மெக்குர்க் தக்கவைக்கப்பட்ட பட்டியலில் வெளிநாட்டு வீரர்களில் ஒருவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் கே.எல்.ராகுலை விடுவிக்கலாம். இவருக்கு பதிலாக நிக்கோலஸ் பூரனை கேப்டனாக நியமிக்கலாம். அந்தவகையில், பூரன், ரவி பிஷ்னோய், க்ருனால் பாண்டியா, ஆயுஷ் படோனி, மயங்க் யாதவ் ஆகியோரை தக்கவைக்கலாம்.

பஞ்சாப் கிங்ஸ்:

பஞ்சாப் கிங்ஸ் இந்த முறை அர்ஷ்தீப் சிங், ஷஷாங்க் சிங், அசுதோஷ் ஷர்மா ஆகியோரை தக்க வைக்கலாம். கேப்டன் ஷிகர் தவான், சாம் கர்ரன், ஹர்ஷல் படேல், ஜானி பேர்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ், ராசா, ஜிதேஷ் சர்மா, ரபாடா, ல்விங்ஸ்டன் ஆகியோரை விடுவிக்கலாம்.

இஞ்சி ஏன் உணவில் சேர்க்க வேண்டும்?
அதிகம் இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்!
தீபாவளி நாளில் செய்யக்கூடாத விஷயங்கள்..!
எண்ணெய் அதிகம் இழுக்காமல் வடை சுடுவது எப்படி?