5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IPL 2025: எம்.எஸ்.தோனி ஆதரவு.. சென்னை அணியில் ரிஷப் பண்ட்..? ரெய்னா கொடுத்த அப்டேட்!

Rishabh Pant: டெல்லி கேப்பிட்டல்ஸ் ரூ.16.5 கோடிக்கு அக்சர் படேலையும், ரூ.13.25 கோடிக்கு குல்தீப் யாதவையும், ரூ.10 கோடிக்கு டிரஸ்டன் ஸ்டப்ஸையும், ரூ.4 கோடிக்கு அபிஷேக் போரலையும் தக்க வைத்துள்ளனர். இருப்பினும், ஐபிஎல் 2025ல் டெல்லி அணியின் கேப்டன் யார் என்பது குறித்து அந்த அணி இதுவரை தெரிவிக்கவில்லை.

IPL 2025: எம்.எஸ்.தோனி ஆதரவு.. சென்னை அணியில் ரிஷப் பண்ட்..? ரெய்னா கொடுத்த அப்டேட்!
எம்.எஸ்.தோனி – ரிஷப் பண்ட் (Image: PTI)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 06 Nov 2024 12:48 PM

ஐபிஎல் 2025க்கான தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அனைத்து அணிகளும் நேற்று வெளியிட்டன. தீபாவளியன்று வெளியான இந்த பட்டியலில் சில ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளிவந்தது. ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் போன்ற நட்ச்சத்திர வீரர்களை டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விடுவித்துள்ளன. இதையடுத்து, வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் பண்ட் மற்றும் கே.எல்.ராகுலை எடுக்க பல்வேறு அணிகள் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தக்கவைப்பு அறிவிக்கப்பட்ட உடனே ஒரு சில அணிகள் இந்த இரண்டு வீரர்களை விலைக்கு வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. அந்தவகையில், ரிஷப் பண்ட்-ஐ வாங்குவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுலை வாங்குவதற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

ALSO READ: IND vs NZ: பும்ரா ஏன் மூன்றாவது டெஸ்டில் இல்லை? அதிர்ச்சி தகவல் கொடுத்த பிசிசிஐ!

ரெய்னா சொன்ன ரகசியம்:

தோனியின் மிக நெருங்கிய நண்பரும், முன்னாள் சிஎஸ்கே வீரருமான சுரேஷ் ரெய்னா பண்ட் விரைவில் சென்னையின் மஞ்சள் ஜெர்சியை அணிவார் என்று தெரிவித்டஹர். இதுகுறித்து ஜியோ சினிமாவில் பேசிய சுரேஷ் ரெய்னா, “சமீபத்தில் டெல்லியில் எம்.எஸ்.தோனியை சந்தித்தேன். பண்ட் அப்போது எங்கள் உடன் இருந்தார். விரைவில் மஞ்சள் நிற ஜெர்சி அணிந்த ஒருவரை நீங்கள் பார்க்கலாம்” என்று தோனி என்னிடம் கூறினார்.

சுரேஷ் ரெய்னா அளித்த இந்த தகவலை அடுத்து, தோனியே பண்ட்-டுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திடம் பேசியதாக கூறப்படுகிறது. தக்கவைப்பு வட்டியல் வெளிவருவதற்கு முன்பே, பண்ட் தோனி விளையாடும் சிஎஸ்கே அணியில் இணைய போவதாக பல செய்தி நிறுவனங்கள் தெரிவித்தனர். எனினும், இதில் எந்தளவு உண்மை உள்ளது என்று அடுத்த மாதம் நடைபெறும் மெகா ஏலத்தில் தெரிய வரும்.

டெல்லியில் இருந்து வெளியேறிய ரிஷப் பண்ட்:

2016ம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ரிஷப் பண்ட் ஐபிஎல்லில் அறிமுகமானார். கடந்த 2024ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் டெல்லி அணிக்காக விளையாடிய ரிஷப் பண்ட், தற்போது அந்த அணியில் இருந்து பிரிந்துள்ளார். நீண்ட காலமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரிஷப் பண்ட், கடந்த 2021ம் ஆண்டு முதல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக பதவி வகித்து வருகிறார். அதாவது, 2021 ஆம் ஆண்டில் ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதற்குப் பிறகு, அவர் ஐபிஎல் 2023 க்கு முன் கார் விபத்தில் சிக்கிய பண்ட், ஒரு வருட ஓய்வுக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் 2024ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் களமிறங்கினார். பண்ட் கேப்டனாக அணிக்கு திரும்பினாலும் டெல்லி அணி 2024 ஐபிஎல் சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இதையடுத்து, டெல்லி புது கேப்டனை தேடுவதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் வாழ்க்கை:

ரிஷப் பண்ட் இதுவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 111 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 35.31 சராசரி மற்றும் 148.93 ஸ்ட்ரைக் ரேட்டில் 3284 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 1 சதமும் 18 அரை சதமும் அடங்கும்.

ALSO READ: IPL Retention 2025: 3 கேப்டன்கள் உட்பட 6 நட்சத்திர வீரர்கள்.. வெளியேற்றப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

டெல்லி கேபிட்டல்ஸ் தக்கவைத்த வீரர்கள்:

டெல்லி கேப்பிட்டல்ஸ் ரூ.16.5 கோடிக்கு அக்சர் படேலையும், ரூ.13.25 கோடிக்கு குல்தீப் யாதவையும், ரூ.10 கோடிக்கு டிரஸ்டன் ஸ்டப்ஸையும், ரூ.4 கோடிக்கு அபிஷேக் போரலையும் தக்க வைத்துள்ளனர். இருப்பினும், ஐபிஎல் 2025ல் டெல்லி அணியின் கேப்டன் யார் என்பது குறித்து அந்த அணி இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால், ஐபிஎல் 2025ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அக்சர் படேலை கேப்டனாக நியமிக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Latest News