IPL 2025 Schedule: மார்ச் 14 முதல் ஐபிஎல் ஆரம்பம்.. இறுதிப் போட்டி எப்போது..? வெளியான அட்டவணை!
IPL 2025: பிசிசிஐ அடுத்த மூன்று சீசன்களுக்கான தேதிகளை ஒரே நேரத்தில் அறிவித்துள்ளது. இதன்படி, ஐபிஎல் 2025 வருகின்ற மார்ச் 14ம் தேதி தொடங்கும் என்றும், இறுதிப் போட்டியானது மே 25ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐபிஎல் 2025 போட்டிகளின் முழு அட்டவணை பின்னர் வெளியிடப்பட இருக்கிறது.
இந்தியன் பிரீமியர் லீக் 2025 எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துவிட்டது. அதன்படி, பிசிசிஐ அடுத்த மூன்று சீசன்களுக்கான தேதிகளை ஒரே நேரத்தில் அறிவித்துள்ளது. இதன்படி, ஐபிஎல் 2025 வருகின்ற மார்ச் 14ம் தேதி தொடங்கும் என்றும், இறுதிப் போட்டியானது மே 25ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐபிஎல் 2025 போட்டிகளின் முழு அட்டவணை பின்னர் வெளியிடப்பட இருக்கிறது. அதே நேரத்தில் 2026 சீசன் மார்ச் 15 முதல் மே 31 வரை விளையாடப்படும் என்றும், அதேசமயம் 2027 சீசன் மார்ச் 14 முதல் மே 30 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை 74 போட்டிகள்:
2025 ஐபிஎல் 18வது சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறவுள்ளன. கடந்த சீசனிலும் இதே அளவிலான போட்டிகளே நடந்தன. இருப்பினும், வருகின்ற 2026 மற்றும் 2027ல் போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று தெரிகிறது. புதிய சுழற்சிக்கான டெண்டர் ஆவணத்தில், ஒவ்வொரு சீசனிலும் வெவ்வேறு எண்ணிக்கையிலான போட்டிகளை ஐபிஎல் குறிப்பிட்டுள்ளது. கடந்த 2023 மற்றும் 2024ல் 74 போட்டிகளும், 2025 மற்றும் 2026ல் 84 போட்டிகளும், இந்த ஒப்பந்தத்தின் கடைசி ஆண்டில் அதாவது 2027ல் 94 போட்டிகளும் நடந்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐபிஎல் 2024 மெகா ஏலம்:
ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் பிசிசிஐ இந்த தகவலை மின்னஞ்சல் மூலம் அனைத்து உரிமையாளர்களுக்கு அனுப்பியுள்ளது. அதன்படி, அடுத்த மூன்று பதிப்புகளின் ஆரம்பம் மற்றும் முடிவு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளதுடன் முழுமையான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த மூன்று சீசனில் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் முழு அட்டவணை மட்டும் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
ஐபிஎல் 2025க்கான மெகான ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 574 வீரர்கள் பட்டியலில், 81 பேர் அடிப்படை விலையான ரூ. 2 கோடியாக உள்ளனர். அதேசமையம் 27 வீரர்களின் அடிப்படை விலை ரூ. 1.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர, ரூ.1.25, 1.27 லட்சம், 50 லட்சம், 40 லட்சம் மற்றும் 30 லட்சம் அடிப்படை விலை கொண்ட வீரர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
🚨🚨🚨 BREAKING: BCCI discloses IPL dates for next three seasons
IPL 2025 – March 14 to May 25
IPL 2026 – March 15 to May 31
IPL 2027 – March 14 to May 30@vijaymirror has all the details here https://t.co/ZFoS4yP7mh#IPLAuction #ipl pic.twitter.com/6CchvBS2CV— Cricbuzz (@cricbuzz) November 22, 2024
இந்தமுறை ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல் போன்ற அனுபவ வீரர்கள் களம் காண்கின்றனர். இவர்கள் அனைவரும் ரூ.2 கோடி அடிப்படை விலை உள்ளனர். அதேநேரத்தில், வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் பட்லர், டேவிட் வார்னர், ஜேம்ஸ் ஆண்டர்சன், டிரெண்ட் போல்ட் போன்ற நட்ச்சத்திர வீரர்களும் களம் இறங்குகின்றனர்.
சாம்பியன் டிராபி:
இம்முறை சாம்பியன்ஸ் டிராபி முடிந்தவுடன் ஐபிஎல் போட்டிகள் தொடங்க இருக்கிறது. 2025 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் வருகின்ற பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறுகிறது. அதாவது சாம்பியன்ஸ் டிராபி முடிந்த 5 நாட்களில் 2025 ஐபிஎல் சீசன் தொடங்க இருக்கிறது. ஐபிஎல் தொடரின் கடைசி சீசன் கடந்த மார்ச் 23ம் தேதி தொடங்கியது. ஆனால் இம்முறை போட்டி 9 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்குகிறது. போட்டிகளின்போது அணிகளுக்கு அதிகபட்ச நேரத்தை வழங்குவதே இதற்கு ஒரு பெரிய காரணம் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் ஐபிஎல் முடிந்து சில நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் விளையாட இந்திய அணியும் வலுவான போட்டியாளராக இருப்பதால், வீரர்களுக்கு ஓய்வளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் தொடர் ஜூன் 18 முதல் 19 வரை நடைபெறவுள்ளது.