MS Dhoni: மீண்டும் வரும் எம்.எஸ்.தோனி.. தக்கவைப்பு பட்டியல் தயார்.. குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்..!
IPL 2025: கடந்த 2023ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, இத்துடன் தோனி ஓய்வு பெறுவார் என்று நம்பப்பட்டது. ஆனால், ரசிகர்களின் கோரிக்கையின் பேரில், கடந்த 2024 ஐபிஎல் சீசனிலும் தோனி மீண்டும் விளையாடினார். அந்த சீசனில் தோனி கேப்டனாக இல்லாமல் கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு விட்டுகொடுத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடினார்.
எம்.எஸ்.தோனி ஐபிஎல் 2025ல் விளையாடுவாரா இல்லையா என்ற கேள்வி கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முன்னாள் கேப்டன் தோனி, அடுத்த சீசனிலும் விளையாட இருப்பதாகவும், இதனை தோனியே அறிவித்துள்ளார். தோனியை தொடர்ந்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதனும் இதனை உறுதி செய்துள்ளார். இதையடுத்து, தொடர்ந்து 18வது ஐபிஎல் சீசனில் தோனி களமிறங்குவார் என்பது உறுதியாகி விட்டது.
ALSO READ: David Warner Birthday: வாழ்நாள் தடை.. 4 ஐசிசி கோப்பை.. கிரிக்கெட்டில் வார்னரின் ஏற்றத்தாழ்வுகள்!
இணையத்தில் வைரலான வீடியோ ஒன்றில் பேசிய எம்.எஸ்.தோனி, “என்னால் முடிந்தவரை இந்த விளையாட்டை அனுபவிக்க விரும்புகிறேன். நீங்கள் கிரிக்கெட்டை ஒரு தொழில்முறை விளையாட்டாக பார்க்க தொடங்கும்போது, அதை ஒரு விளையாட்டாக அனுபவிப்பது கடினமாகிவிடும். ஐபிஎல்லில் விளையாடும் 3 மாதங்களுக்காக, மீதமுள்ள 9 மாதங்கள் எனது உடற்தகுதியை பராமரிக்கிறேன்.” என்று தெரிவித்தார். இதன்மூலம், ஐபிஎல் 2025ல் பெரிய அளவிலான சம்பளத்தை எதிர்பாராமல் தோனி களமிறங்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து, சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், “தோனி விளையாட தயாராக இருந்தால், நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். ஏனென்றால் இதுதான் எங்களது விரும்புகிறோம். தோனியின் வீடியோ இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், அவர் தனது வாழக்கையில் மீதமுள்ள ஆண்டுகளிலும் கிரிக்கெட்டை அனுபவில்ல விரும்புவதாக கூறுகிறார்” என்று தெரிவித்தார்.
MSD to play the upcoming years as long as he can 💛😁#MSDhoni𓃵 pic.twitter.com/zrDvmknpC6
— CricXtasy (@CricXtasy) October 27, 2024
இருப்பினும் வருகின்ற அக்டோபர் 28ம் தேதிக்குள் அதாவது நாளைக்குள் தனது முடிவை அறிவிக்க வேண்டும். இதற்கு பிறகுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகிகள் பிசிசிஐ தக்கவைப்பு பட்டியலை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவுக்கு ஒரு நாள் முன்னதாக அதாவது அக்டோபர் 31 ஆம் தேதி தனது முடிவை அறிவிக்கும்.
கேப்டன்ஷியை வேண்டாம் என்ற தோனி:
கடந்த 2023ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, இத்துடன் தோனி ஓய்வு பெறுவார் என்று நம்பப்பட்டது. ஆனால், ரசிகர்களின் கோரிக்கையின் பேரில், கடந்த 2024 ஐபிஎல் சீசனிலும் தோனி மீண்டும் விளையாடினார். அந்த சீசனில் தோனி கேப்டனாக இல்லாமல் கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு விட்டுகொடுத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடினார். இருப்பினும், கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது இடத்தை பிடித்து, பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாமல் வெளியேறியது.
ALSO READ: IND vs NZ: 12 ஆண்டுகளுக்கு பிறகு! சொந்த மண்ணில் தொடரை இழந்த இந்திய அணி.. நியூசிலாந்து அபாரம்!
ஐபிஎல் 2025 தோனியின் சம்பளம் எவ்வளவு..?
வருகின்ற ஐபிஎல் 2025 சீசனில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினால், அன் கேப்டு வீரராக விளையாடுவார். இதன் காரணமாக, தோனிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சம்பளமாக ரூ. 4 கோடி மட்டுமே வழங்கும். ஐபிஎல் 2025 சீசன் மெலா ஏலத்திற்கு முன்பு பழைய விதியை பிசிசிஐ மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதியின்படி, ஒரு வீரர் 5 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலோ அல்லது 5 ஆண்டுகளாக விளையாடாமல் இருந்திருந்தாலோ அவர் அன் கேப்டு வீரராகவே விளையாடுவார். அந்தவகையில், தோனி மட்டுமல்லாது, அமித் மிஸ்ரா, பியூஸ் சாவ்லா உள்ளிட்ட வீரர்கள் அன் கேப்டு வீரராகவே விளையாட வேண்டும்.
He is coming back 🦁#CSK #MSDhoni𓃵 #ThalaDhoni pic.twitter.com/xkY4rINVkd
— True msd (@true_msd) October 27, 2024
தோனி சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
இந்திய அணிக்காக எம்.எஸ்.தோனி இதுவரை 350 ஒருநாள், 98 டி20 மற்றும் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 108 அரைசதங்கள் மற்றும் 16 சதங்களுடன் 17, 266 ரன்கள் எடுத்துள்ளார். தோனி தலைமையின்கீழ் இந்திய அணி டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன் டிராபி என மூன்று ஐசிசி பட்டங்களை வென்றுள்ளது. மேலும், ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.