5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IPL 2025: கிளாசனுக்கு அதிக தொகை.. டிராவிஸ் ஹெட் நிலைமை..? வெளியான ஹைதராபாத் தக்கவைப்பு பட்டியல்..!

IPL Retention: காவ்யா மாறனுக்கு சொந்தமான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில், அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் ஆகியோரை 23 கோடிக்கு தக்க வைக்காமல், தென்னாப்பிரிக்கா விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசனை அதிக தொகை கொடுத்து தக்கவைத்துக்கொண்டதாக தெரிகிறது.

IPL 2025: கிளாசனுக்கு அதிக தொகை.. டிராவிஸ் ஹெட் நிலைமை..? வெளியான ஹைதராபாத் தக்கவைப்பு பட்டியல்..!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Image: PTI)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 17 Oct 2024 14:37 PM

ஐபிஎல் 2025 சீசனுக்கு முன் நடைபெறவுள்ள ஏலம் வருகின்ற நவம்பர் மாதம் இறுதியில் பிசிசிஐ நடத்தலாம் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் 2025 ஏலம் தொடங்குவதற்கு முன் அனைத்து அணிகளும் வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தேதிக்குள் பிசிசிஐக்கு தங்கள் தக்கவைப்பு பட்டியலை சமர்பிக்க வேண்டும். ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் மற்றும் பல முக்கிய வீரர்கள் அணி மாறுவது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த பட்டியலை வெளியிடுவதற்கு முன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பற்றி ஒரு பெரிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த சீசனில் இரண்டாம் இடத்தை பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஒரு வீரரை தக்கவைக்க ரூ. 23 கோடியை செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எந்த வீரரை தக்க வைத்தது என்ற விவரத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: HBD Anil Kumble: தாடை உடைந்தும் பவுலிங்.. சுழல் சூறாவளி.. அனில் கும்ப்ளே செய்த சம்பவங்கள்..!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

காவ்யா மாறனுக்கு சொந்தமான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில், அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் ஆகியோரை 23 கோடிக்கு தக்க வைக்காமல், தென்னாப்பிரிக்கா விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசனை அதிக தொகை கொடுத்து தக்கவைத்துக்கொண்டதாக தெரிகிறது. இது நடந்தால் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொடுத்து வாங்கும் இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஹென்ரிச் கிளாசன் பெறுவார். தற்போது, கடந்த 2024 ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுத்த மிட்செல் ஸ்டார்க் முதல் இடத்தில் உள்ளார். கடந்த 2024 ஐபிஎல் சீசனில் ஹென்ரிச் கிளாசன் ரூ.5.25 கோடி சம்பளம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ: Diwali Sweets Recipes: இன்னும் 2 வாரத்தில் தீபாவளி.. வீட்டிலேயே சுவையான பால் பணியாரம், ஜிலேபி செய்வது எப்படி?

பாட் கம்மின்ஸ்:

ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸை தக்க வைத்துக் கொள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில், கடந்த சீசனில் அதிரடியாக விளையாடி இந்திய அணியில் இடம்பிடித்த அபிஷேக் ஷர்மா, மூன்றாவது வீரராக தக்கவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அபிஷேக் ஷர்மாவை ஹைதராபாத் அணி ரூ. 14 கோடிக்கு தக்க வைத்து கொள்ளலாம். இப்போது ரூ.14 கோடிக்கு அவரைத் தக்க வைத்துக் கொண்டால், அவரது சம்பளம் வித்தியாசத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக அதிகரிக்கப் போகிறது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அபிஷேக் சர்மா 204 ஸ்டிரைக் ரேட்டில் 484 ரன்கள் குவித்து அதிகபட்சமாக 42 சிக்சர்களை அடித்திருந்தார். அதேசமயம் டிராவிஸ் ஹெட், கிளாசன் மற்றும் அபிஷேக் ஷர்மா என்ற இந்த இரண்டு வீரர்களை விட 191.55 ஸ்டிரைக் ரேட்டில் 567 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், டிராவிஸ் ஹெட்யே ஹைதராபாத் அணி 10 முதல் 12 கோடிக்குதான் தக்கவைத்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதேபோல், சமீபத்தில் இந்திய அணியில் இடம்பிடித்து வங்கதேசத்திற்கு எதிரான டி20யில் கலக்கிய நிதீஷ் குமார் ரெட்டியை 8 முதல் 12 கோடிக்குள் தக்கவைத்துக்கொள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முடிவு செய்ததாக கூறப்படுகிறது. மீதமுள்ள வீரர்களை தக்கவைத்துக்கொள்வது குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இதுவரை எந்தவொரு அப்டேட்யையும் வெளியிடவில்லை. அதேபோல், ரிஷப் பந்த், அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் டெல்லி கேபிடல்ஸில் தக்கவைக்கப்படுவது உறுதி என்று கூறப்படுகிறது.

வீரர்களை எந்த அடிப்படையில் ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும்..?

  • முதல் வீரருக்கு ரூ.18 கோடி
  • இரண்டாவது வீரருக்கு ரூ.14 கோடி
  • மூன்றாவது வீரருக்கு ரூ.11 கோடி
  • நான்காவது வீரருக்கு ரூ.18 கோடி
  • ஐந்தாவது வீரருக்கு ரூ.14 கோடி
  • ஆறாவது வீரருக்கு ரூ.4 கோடி (அன்கேப்ட்)

Latest News