5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IPL 2025: ஐபிஎல் மெகா ஏலம்தான் கடைசி.. இந்த இந்திய வீரர்கள் ஓய்வை அறிவிக்கலாம்..!

Retirement: ஐபிஎல் மெகான் ஏலத்திற்கு முன்பு எந்த வீரர்கள் வெளியேற போகிறார்கள், எந்த கேப்டன் வெளியேற போகிறார், சென்னை அணியின் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா என்ற கேள்விகள் எழுந்து வருகிறது. மெகா ஏலத்தின் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தநிலையில், இந்த மெகா ஏலத்திற்கு முன்பாக ஒரு சில வீரர்கள் ஓய்வு பெற அதிக வாய்ப்புள்ளது. அந்த வீரர்கள் யார் யார் என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம்.

IPL 2025: ஐபிஎல் மெகா ஏலம்தான் கடைசி.. இந்த இந்திய வீரர்கள் ஓய்வை அறிவிக்கலாம்..!
கோப்பு புகைப்படம்
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 22 Aug 2024 14:16 PM

ஐபிஎல் 2025: டி20 உலகக் கோப்பை, இலங்கை தொடர் நடந்து முடிந்தாலும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பார்வை அனைத்து ஐபிஎல் 2025 சீசன் மேல் உள்ளது. வருகின்ற டிசம்பர் மாதம் ஐபிஎல் 2025 மெகா ஏலம் மும்பையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த ஏலத்திற்கு முன்பாக ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதில், எந்த வீரர்கள் வெளியேற போகிறார்கள், எந்த கேப்டன் வெளியேற போகிறார், சென்னை அணியின் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா என்ற கேள்விகள் எழுந்து வருகிறது. மெகா ஏலத்தின் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தநிலையில், இந்த மெகா ஏலத்திற்கு முன்பாக ஒரு சில வீரர்கள் ஓய்வு பெற அதிக வாய்ப்புள்ளது. அந்த வீரர்கள் யார் யார் என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம்.

ALSO READ: IPL 2024: ஐபிஎல் 2025ல் மீண்டும் விளையாடப்போகும் தோனி! பிசிசிஐ பக்கா பிளான்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

பியூஸ் சாவ்லா:

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்களை எடுத்தவர் பட்டியலில் பியூஸ் சாவ்லா இரண்டாவது இடத்தில் உள்ளார். சாவ்லாவுக்கு தற்போது, 35 வயதுதான் ஆகிறதுதான் என்றாலும், அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன் வர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஐபிஎல் போக மற்ற நாட்களில் பியூஸ் சாவ்லா, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது கிடையாது. பியூஸ் சாவ்லாவின் உடற்தகுதியும் இப்போது முன்பு போல் இல்லை. கடந்த ஐபிஎல் 2024ல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த பியூஸ் சாவ்லா, இந்த முறை விடுவிக்கப்படலாம். இதையடுத்து, மெகா ஏலத்தில் எந்த அணியும் பியூஸ் சாவ்லாவை எடுக்கவில்லை எனில், உடனடியாக அவர் தனது ஓய்வு முடிவை அறிவிக்கலாம்.

அமித் மிஸ்ரா:

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்கள் எடுத்தவர் பட்டியலில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, நான்காவது இடத்தில் உள்ளார். இதுவரை அமித் மிஸ்ரா 162 ஐபிஎல் போட்டிகலில் விளையாடி 174 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். கடந்த 2024 ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக களமிறங்கி, ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். தற்போது மிஸ்ராவுக்கு 41 வயதாகிறது. இவரும் பியூஸ் சாவ்லா போன்று, தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை. இதனால், மெகா ஏலத்திற்கு முன்பு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இவரை விடுவிக்கலாம். இதன்பின், மெகா ஏலத்தில் இவரை யாரும் வாங்கவில்லை என்றால், அமித் மிஸ்ரா தனது ஓய்வை அறிவிக்கலாம். அதன் பிறகு, முழுமையாக ஓய்வு பெற்று லெஜெண்ட்ஸ் லீக் போன்ற போட்டிகளில் களமிறங்கலாம்.

ALSO READ: Jay Shah: ஐசிசியின் புதிய தலைவராக ஜெய் ஷா..? விலகும் பார்க்லே.. வெளியான டாப் அப்டேட்..!

ஷிகர் தவான்:

ஒரு காலத்தில் இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கி எதிரணி பந்துவீச்சாளர்களை கதறவிட்டவர் ஷிகர் தவான். கடந்த ஐபிஎல் 2024ல் பஞ்சாப் அணியின் கேப்டனாக களமிறங்கினார். தொடர்ந்து ஆரம்ப சில போட்டிகளில் விளையாடி மோசமாக ஸ்ட்ரைக் ரேட்டுடன் வலம் வந்தார். அதன் தொடர்ச்சியாக, காயம் அடைந்த அவர் முழு போட்டியிலும் வெளியே அமர்ந்திருந்தார். ஷிகர் தவானும் இப்போது உள்ளூர் கிரிக்கெட் மற்றும் மற்ற போட்டிகளில் விளையாடுவது கிடையாது. அதேபோல், டெல்லியின் ஒரு அணியை வாங்கிய அவர், டெல்லி பிரீமியர் லீக்கில் ஒரு வீரராகவும் விளையாடவில்லை. இத்தகைய சூழ்நிலையில், மெகா ஏலத்தில் எந்த அணியும் ஷிகர் தவானை வாங்கவில்லை என்றால், அவர் தனது ஓய்வு முடிவை அறிவிக்கலாம்.

Latest News