IPL 2025: மீண்டும் ஐபிஎல்லில் ராகுல் டிராவிட்.. பலே திட்டத்துடன் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்!

Rahul Dravid: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாக ராகுல் டிராவிட் செயல்பட்டார். இவர் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சிறப்பாக கொண்டு சென்றார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 46 போட்டிகளில் விளையாடியுள்ள டிராவிட், 7 அரைசதங்களுடன் 1276 ரன்கள் குவித்துள்ளார்.

IPL 2025: மீண்டும் ஐபிஎல்லில் ராகுல் டிராவிட்.. பலே திட்டத்துடன் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்!

rahul dravid

Published: 

23 Jul 2024 11:22 AM

ராகுல் டிராவிட்: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிகாலம் முடிந்தநிலையில், அவருக்கு பதிலாக தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். ராகுல் டிராவிட்டின் பயிற்சியின்கீழ் சமீபத்தில் இந்திய அணி, டி20 உலகக் கோப்பையை வென்றது. இதையடுத்து, ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க பல்வேறு பணிகள் முயற்சி மேற்கொண்டு வருகிறது. கொல்கத்தா அணியில் மேனேஜராக இருந்த கவுதம் கம்பீர், இந்திய அணிக்கு சென்றார். இதன் காரணமாக, ராகுல் டிராவிட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Also read: IPL 2025: மெகா ஏலத்திற்கு முன் 3 கேப்டன்கள் விடுவிப்பு..? குட்பை சொல்லப்போகும் அணிகள்..!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளருக்கும், ராகுல் டிராவிட்டுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீண்டும் ராகுல் டிராவிட்டை தலைமை பயிற்சியாளராக நியமிக்க ஆர்வமாக உள்ளது. இது தொடர்பாக பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டு, இறுதி கட்டத்தில் உள்ளன. இந்த சூழலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராகுல் டிராவிட்டின் கிரீன் சிக்னலுக்காக காத்திருக்கிறது. எனவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருப்பாரா என்பது குறித்த தெளிவான தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளது.

முன்னாள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாக ராகுல் டிராவிட் செயல்பட்டார். இவர் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சிறப்பாக கொண்டு சென்றார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 46 போட்டிகளில் விளையாடியுள்ள டிராவிட், 7 அரைசதங்களுடன் 1276 ரன்கள் குவித்துள்ளார்.

அதன் பிறகு, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வழிகாட்டியாக பணியாற்றினார். இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முன்னாள் வீரர்களில் ஒருவரை தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க மீண்டும் ஆர்வம் காட்டி வருகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தற்போதைய பயிற்சியாளர் யார்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார பணியாற்றி வருகிறார். முன்னதாக, குமார் சங்கக்கார பயிற்சியாளர் பதவிக்கு நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 2021ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநராக சங்கக்காரா நியமிக்கப்பட்டார்.

அதே ஆண்டில், ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தலைமை பயிற்சியாளர் பதவியை விட்டு வெளியேறியதால், குமார் சங்கக்கார ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக பணியாற்றத் தொடங்கினார்.

Also read: Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கின் பாதுகாப்பில் இரண்டு இந்திய நாய்கள்.. வரலாற்றில் இதுவே முதல் முறை!

குமார் சங்கக்கார தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2022ல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதேபோல், கடந்த ஐபிஎல் 2024ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியும் அசத்தியது.

தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்தியாவின் வெற்றிகரமான பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டை தலைமை பயிற்சியாளராக நியமிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி ஐபிஎல் சீசன்-18ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ராகுல் டிராவிட் மீண்டும் இணைவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!