IPL 2025 Mega Auction: ஐபிஎல் ஏலத்தில் 13வயது கிரிக்கெட் வீரர்.. எகிறும் எதிர்பார்ப்பு.. யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி..?
Vaibhav Suryavanshi: கடந்த 2023ம் ஆண்டு பீகார் அணிக்காக ரஞ்சி போட்டியில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி, அதன்பின்னர் பீகார் கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்த ரந்தீர் வர்மா 19 வயதுக்குட்பட்ட ஒருநாள் போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் முச்சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 மெகா ஏலம் நடைபெறுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. வருகின்ற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் 2025 பதிப்பிற்கான பதிவு செய்யப்பட்ட 574 வீரர்களின் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. இந்த பட்டியலில் 366 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் வைபவ் சூர்யவன்ஷியும் ஒருவர். 13 வயது கிரிக்கெட் வீரரானவைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் ஏல வரலாற்றில் இளம் வீரர் என்ற பெயரை பதிவு செய்துள்ளார்.
இடது கை பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் ஏலத்திற்கான தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பட்டியலில் 491வது இடத்தில் உள்ளார். இந்த ஆண்டு ஜனவரி 2024ம் ஆண்டு பீகார் அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்த இவர், 19 வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணிக்காக டெஸ்ட் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி அற்புதமாக செயல்பட்டார். இந்தநிலையில், யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி என்பதை இங்கே பார்க்கலாம்.
ALSO READ: India T20 schedule 2025: இந்திய அணியின் அடுத்த டி20 தொடர் எப்போது? எந்த அணிக்கு எதிராக?
யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி..?
வைபவ் சூர்யவன்ஷி பீகாரை சேர்ந்த கிரிக்கெட் வீரர். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி பிறந்தார். தனது 5 வயதில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட தொடங்கிய வைபவ், 12 வயதில் முதல்தரப் போட்டியில் களமிறங்கினார். அதாவது, ரஞ்சி டிராபி, ஹேமந்த் டிராபி, கூச் பெஹார் டிராபி மற்றும் வினு மன்கட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இது தவிர, வைபவ் சூர்யவன்ஷி 13 வயதிற்குள் இந்திய 19 வயதுக்குட்பட்ட அணியிலும் இடம் பிடித்திருந்தார்.
🚨 13 YEAR OLD VAIBHAV SURYAVANSHI IS THE YOUNGEST TO BE SHORTLISTED…!!! 🚨 pic.twitter.com/91uuXmzQRc
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 15, 2024
கடந்த 2023ம் ஆண்டு பீகார் அணிக்காக ரஞ்சி போட்டியில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி, அதன்பின்னர் பீகார் கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்த ரந்தீர் வர்மா 19 வயதுக்குட்பட்ட ஒருநாள் போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் முச்சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இதை தொடர்ந்து, கடந்த மாதம், ஆஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட அணிக்கு எதிராக 64 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். இதில், 58 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம், 19 வயதுக்குட்பட்ட டெஸ்டில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார்.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட வினு மங்காட் போட்டியில் வைபவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சண்டிகரில் நடைபெற்ற போட்டியில் வைபவ் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் குவித்தார். இதில், ஒரு சதம் மற்றும் மூன்று அரை சதங்கள் உள்பட 393 ரன்கள் எடுத்தார்.
இதுவரை 13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி மொத்தம் 49 சதங்களை அடித்துள்ளார். இந்த அதிரடி ஆட்டத்தின் பலனாக தற்போது வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் ஏல பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவரை எந்த அணி வருகின்ற நவம்பர் 24 அல்லது 25 அன்று ஏலத்தில் எடுக்கும் என்பதை பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.
🚨 13 Year Old Vaibhav Suryavanshi from Bihar is the Youngest to be shortlisted for IPL 2025 Mega Auction 🚨 pic.twitter.com/mPtkW4Xac5
— Sports Culture (@SportsCulture24) November 15, 2024
இம்மாத இறுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் இந்திய அணி வருகின்ற நவம்பர் 30ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடுகிறது. இதில், வைபவ் சூர்யவன்ஷி தனது சிறப்பான ஆட்டத்தால் மனம் கவர முயற்சிப்பார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன்:
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பங்கேற்ற அதிக வயதான வீரர் என்ற பெருமையை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார். இதுவரை 991 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவம் கொண்ட ஆண்டர்சன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். இப்போது, 42 வயதான ஆண்டர்சன் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக தனது பெயரை ஏலத்தில் பதிவு செய்துள்ளார்.