Yuvraj Singh: கோரிக்கை வைத்த கில்.. குஜராத் அணியின் பயிற்சியாளராக களமிறங்கும் யுவராஜ் சிங்..?
Gujarat Coach: யுவராஜ் சிங் சில மாதங்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் குஜராத் டைட்டன்ஸ் பயிற்சிக் குழுவில் ஒரு பகுதியாக இருக்க விரும்புவதாக கூறினார். இந்த நிலையில், விரைவில் குஜராத் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம். யுவராஜ் சிங்குக்கு இதற்கு முன்பு பயிற்சி கொடுத்த அனுபவம் கிடையாது. ஆனால், சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு சிறுவயது முதல் பயிற்சி கொடுத்தார். இதையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் வைத்த கோரிக்கை காரணமாகவே, யுவராஜ் சிங் அணிக்கு வர ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் 2025: ஐபிஎல் 2024 முடிந்து சில மாதங்களே ஆன நிலையில், தற்போது ஐபிஎல் 2025 தொடர்பான பல விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஐபிஎல்லை பொறுத்தவரை வீரர்கள் இரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறுவது ஒன்றும் புதியது கிடையாது. அதேபோல், பயிற்சியாளர்களும் அவ்வபோது இரு அணியில் இருந்து மற்றொரு அணிகளுக்கு செல்வார்கள். ஐபிஎல் 2024ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மேனேஜராக இருந்து, அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்ற கவுதம் கம்பீர், தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்றார். இதையடுத்து, இவரது வெற்றிடத்தை நிரப்ப கொல்கத்தா அணி புதிய பயிற்சியாளரை தேட வேண்டும். இதேபோல், தற்போது குஜராத் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஆஷிஷ் நெஹ்ராவும், அணியில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இவருக்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராக இந்திய அணியின் ஜாம்பவான் யுவராஜ் சிங் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
Also read: IPL 2025: மீண்டும் ஐபிஎல்லில் ராகுல் டிராவிட்.. பலே திட்டத்துடன் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஐசிசி பிராண்ட் அம்பாசிடர்:
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டாக இருந்த யுவராஜ் சிங், பயிற்சியாளராக மீண்டும் ஐபிஎல்லில் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2024ல் ஐசிசியின் பிராண்ட் அம்பாசிடராக யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து யுவராஜ் சிங் தலைமையின் கீழ், பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா, உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது.
பயிற்சியாளராக யுவராஜ் சிங்:
ஐபிஎல் 2025ல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் அல்லது வழிகாட்டியாக யுவராஜ் சிங்கை காணலாம். குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் இயக்குனர் விக்ரம் சோலங்கி ஆகியோர் அடுத்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாக அணியில் இருந்து வெளியேறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. யுவராஜ் சிங் சில மாதங்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் குஜராத் டைட்டன்ஸ் பயிற்சிக் குழுவில் ஒரு பகுதியாக இருக்க விரும்புவதாக கூறினார். இந்த நிலையில், விரைவில் குஜராத் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம். யுவராஜ் சிங்குக்கு இதற்கு முன்பு பயிற்சி கொடுத்த அனுபவம் கிடையாது. ஆனால், சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு சிறுவயது முதல் பயிற்சி கொடுத்தார். இதையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் வைத்த கோரிக்கை காரணமாகவே, யுவராஜ் சிங் அணிக்கு வர ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது.
குஜராத் டைட்டன்ஸ்:
ஐபிஎல் 2022 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சிவிசி கேபிடல் வாங்கியது. ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான கேப்டன்சி மற்றும் ஆஷிஷ் நெஹ்ராவின் பயிற்சியின் கீழ், குஜராத் அணி முதல் சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஐபிஎல் 2023 இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்து, குஜராத் அணி இரண்டாம் இடம் பிடித்தது. 2024 ஐபிஎல்லில் ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றதால், சுப்மன் கில்லுக்கு குஜராத் அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஆனால், ஐபிஎல் 2024ல் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. ஐபிஎல் 2025க்கு முன் மெகா ஏலம் நடத்தப்பட உள்ளது. முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் பங்குகளை சிவிசி கேபிடல் விற்பனை செய்வதாக செய்திகள் வெளியாகின. அணியை வாங்கும் போட்டியில் அதானி குழுமம் முன்னணியில் இருப்பதாகவும், பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் பிப்ரவரி 2025க்குப் பிறகு நடக்கலாம் என்றும் தெரிகிறது. இப்படி ஒருவேளை நடந்தால் ஐபிஎல் 2025ல் குஜராத் அணி முற்றிலும் புதிய அணியாக களமிறங்கும்.
Also read: IPL 2025: மெகா ஏலத்திற்கு முன் 3 கேப்டன்கள் விடுவிப்பு..? குட்பை சொல்லப்போகும் அணிகள்..!