IPL Mega Auction: ஐபிஎல் மெகா ஏலத்தில் 1574 கிரிக்கெட் வீரர்கள்.. எந்த நாட்டைச் சேர்ந்த எத்தனை பேர் பங்கேற்பு?
IPL 2025: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதில், மொத்தம் 1574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதில், 1165 இந்திய வீரர்களும், 409 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். இந்திய வீரர்கள் 48 கேப்டு வீரர்களும் (அனுபவம் வாய்ந்த வீரர்கள்), 1117 அன்கேப்டு வீரர்களும் (புதிய வீரர்கள்) உள்ளனர்.
இந்தியன் பிரீமியர் லீக் 18வது சீசனுக்கான வீரர்கள் ஏலத்திற்கான தேதியை நேற்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் வருகின்ற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் ஜெட்டா நகருக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 31ம் தேதி ஐபிஎல் 2025ல் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.
ALSO READ: IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம் எப்போது..? இடம், தேதியை அதிரடியாக அறிவித்த பிசிசிஐ!
விடுவிக்கப்பட்ட சில வீரர்களில் நட்சத்திர வீரர்கள் சிலர் இருந்தது அதிர்ச்சியையும், ஆர்ச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. ஏலத்தில் பங்கேற்கும் 10 அணிகளுக்கு மொத்தம் 204 வீரர்கள் தேவையாக உள்ளது. ஆனால், ஏலத்தில் மொத்தமாக இதுவரை 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில், 409 வெளிநாட்டு வீரர்களும் அடங்கும். அந்தவகையில், ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த நாட்டு வீரர்கள் எத்தனை பேர் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர் என்பதை இங்கே பார்ப்போம்.
ஐபிஎல் சீசனானது கடந்த 2008ம் ஆண்டு முதல் தொடங்கி, தற்போது வரை 17 சீசன்கள் விளையாடப்பட்டுள்ளன. இதில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதில், மொத்தம் 1574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதில், 1165 இந்திய வீரர்களும், 409 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். இந்திய வீரர்கள் 48 கேப்டு வீரர்களும் (அனுபவம் வாய்ந்த வீரர்கள்), 1117 அன்கேப்டு வீரர்களும் (புதிய வீரர்கள்) உள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட 409 வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 91 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.
தென்னாப்பிரிக்கா:
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வீரர்கள் அதிக எண்ணிக்கையிலான பெயர்களை பதிவு செய்துள்ளனர். அதாவது மொத்தம் 91 வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.
ஆஸ்திரேலியா:
இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். ஐபிஎல் பல வீரர்களுக்கு நல்ல எதிர்காலத்தை தந்துள்ளது என்பதால், ஆஸ்திரேலியாவை சேர்ந்த 76 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இங்கிலாந்து:
இங்கிலாந்து இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. வருகின்ற மெகா ஏலத்திற்கு பங்கேற்பதற்காக இங்கிலாந்தை சேர்ந்த 52 வீரர்கள் பெயரை பதிவு செய்துள்ளது. இந்தாண்டு ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ்:
ஐபிஎல் மெகா ஏலத்தில் 39 நியூசிலாந்து வீரர்களும், வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த 33 வீரர்களும் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான்:
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு ஆப்கானிஸ்தானை சேர்ந்த 29 வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். இதில், எத்தனை வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இலங்கை:
எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு இலங்கை வீரர்கள் அதிக அளவில் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். அதன்படி ஐபிஎல் மெகா ஏலப் பட்டியலில் 29 இலங்கை வீரர்களின் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து:
ஐபிஎல் மெகா ஏலத்தில் இம்முறை வங்கதேச வீரர் 13 பேரும், நெதர்லாந்தை சேர்ந்த 12 வீரர்களும் தங்கள் பெயரை பதிவு செய்திருப்பது சிறப்பு. அதை தொடர்ந்து, அமெரிக்கா நாட்டை சேர்ந்த 10 வீரர்கள், அயர்லாந்து நாட்டை 9 வீரர்களும் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
இவர்களை தவிர, ஜிம்பாப்வேயில் இருந்து 8 வீரர்கள், கனடாவில் இருந்து 4 வீரர்கள், ஸ்காட்லாந்தில் இருந்து 2 வீரர்கள், இத்தாலி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருந்து தலா ஒரு வீரர்கள் மெகா ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.
ALSO READ: IPL 2025: 5 ஐபிஎல் அணிகளுக்கு புதிய கேப்டன்கள்.. சூடுபிடிக்கப்போகும் ஏலம்..!
கடந்த 17 ஐபிஎல் சீசனில் இத்தாலி நாட்டை சேர்ந்த வீரர் ஒருவர், ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளது இதுவே முதல் முறையாகும். அந்த இத்தாலி வீரர் தாமஸ் டிராகா. இவர் இத்தாலி அணிக்காக இதுவரை 4 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்லார். மேலும், குளோபல் டி20 கனடா லீக்கில் பிராம்ப்டன் வுல்வ்ஸ் அணிக்காகவும் தாமஸ் டிராகா விளையாடினார்.