5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IPL 2025: ரோஹித் உட்பட இந்த வீரர்கள் வெளியேற்றமா..? ஐபிஎல்லில் நடக்கப்போகும் அதிரடி!

IPL teams: கடந்த ஏலத்தின்போது ஒரு அணியால் 4 வீரர்கள் மட்டுமே வைக்க முடியும் என்ற விதி இருந்த நிலையில், வருகின்ற ஏலத்தில் இருந்து 5 வீரர்கள் தக்க வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ரைட் டு மேட்ச் கார்டு உட்பட அதிகபட்சமாக ஆறு வீரர்களை தக்கவைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதிக்கும் என்று நம்பப்படுகிறது. எனினும், சில அணிகள் 8 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்குமாறு கோரி வருகின்றன. அப்படி 6 வீரர்கள் தக்கவைக்கப்பட்டால் மீதமுள்ள வீரர்கள் தானாகவே விடுவிக்கப்பட்டதாக கருதப்படுவார்கள்.

IPL 2025: ரோஹித் உட்பட இந்த வீரர்கள் வெளியேற்றமா..? ஐபிஎல்லில் நடக்கப்போகும் அதிரடி!
ஐபிஎல் நட்சத்திர வீரர்கள்
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 16 Oct 2024 12:42 PM

ஐபிஎல் அடுத்த சீசனுக்கான ஏற்பாடுகள் மிக விரைவில் தொடங்கவுள்ளது. பிசிசிஐ விரைவில் ஒரு அணி எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற விதியை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏலத்தின்போது ஒரு அணியால் 4 வீரர்கள் மட்டுமே வைக்க முடியும் என்ற விதி இருந்த நிலையில், வருகின்ற ஏலத்தில் இருந்து 5 வீரர்கள் தக்க வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ரைட் டு மேட்ச் கார்டு உட்பட அதிகபட்சமாக ஆறு வீரர்களை தக்கவைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதிக்கும் என்று நம்பப்படுகிறது. எனினும், சில அணிகள் 8 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்குமாறு கோரி வருகின்றன. அப்படி 6 வீரர்கள் தக்கவைக்கப்பட்டால் மீதமுள்ள வீரர்கள் தானாகவே விடுவிக்கப்பட்டதாக கருதப்படுவார்கள். இந்த நேரத்தில் இதுபோன்ற சூழ்நிலையில், பல அணிகளில் இருந்து பல முக்கிய வீரர்கள் வெளியேற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எந்தவொரு அணியில் இருந்து இதுவரை யாரும் விடுவிக்கப்படவில்லை என்றாலும், இந்த முறை குறிப்பிட்ட அணியில் இருந்து எந்தெந்த முக்கிய வீரர்கள் வெளியேற்றப்பட இருக்கிறார்கள் என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம்.

ALSO READ: MS Dhoni: சம்பளம் பாதியாக குறைப்பு.. ஐபிஎல் 2025ல் தோனி வாங்கபோகும் சம்பளம் இவ்வளவுதானா..?

ரோஹித் சர்மா:

ஐபிஎல் 2025க்கு முன் வெளியிடப்படும் வீரர்களில் பட்டியலில் முதல் வீரராக தற்போதைய இந்திய அணியின் கேப்டனும், முன்னாள் மும்பை இந்தியன்ஸ் கேப்டனுமான ரோஹித் சர்மா பெயர் உள்ளது. கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாக நியமிக்கப்பட்டார். இந்த சீசனில் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதையடுத்து, ரோஹித் சர்மா இந்த முறை விடுவிக்கப்பட்டு ஏலத்திற்கு செல்வார் என்று தெரிகிறது. இப்படி நடந்தால், ரோஹித் சர்மா வேறு அணியில் விளையாடுவதை காணலாம்.

கே.எல்.ராகுல்:

ரோஹித் சர்மாவுக்கு அடுத்த இடத்தில் கே.எல்.ராகுல் பெயர் இந்த பட்டியலில் பேசப்பட்டு வருகிறது. கே.எல்.ராகுல் தற்போது லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இவரது தலைமையில்கீழ் அந்த அணியால் கடந்த சில சீசன்களாக எதுவும் செய்ய முடியவில்லை. அதேபோல், கே.எல்.ராகுல் டெஸ்ட், ஒருநாள் அணியில் இடம் பிடித்தாலும், இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை. கே.எல்.ராகுலின் தனிப்பட்ட ஆட்டமும் டி20 வடிவத்தில் சொல்லும்படியாக இல்லை. இதனால், கே.எல்.ராகுல் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், கே.எல்.ராகுல் மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

பாஃப் டு பிளெசிஸ்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலி கேப்டனாக இருந்த போதிலும் சரி, பாப் டு பிளெசிஸ் கேப்டனாக இருந்த போதிலும் சரி, அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமை பொறுப்பு தற்போது பாஃப் டு பிளெசிஸிடம் உள்ளது. அவருக்கு தற்போது சுமார் 40 வயது இருக்கும். மெகா ஏலம் மூன்று வருடங்கள் என்பதால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத நிலையில் ஆர்சிபி அணி இவரைத் தங்களோடு வைத்துக் கொள்ளுமா என்பது சந்தேகம்தான். அதன் அடிப்படையில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு அணி புதிய கேப்டனை தேடலாம்.

ALSO READ: On This Day In 2007: கம்பீரின் அசத்தல் பேட்டிங்.. தோனி மாஸ்டர் மைண்ட்.. 2007 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற நாள் இன்று!

கிளென் மேக்ஸ்வெல்:

டி20யில் அதிரடிக்கு பெயர் போன கிளென் மேக்ஸ்வெல் பெயரும் இந்த பட்டியலில் உள்ளது. இப்போதும், மேக்ஸ்வெல் பெங்களூரு அணியில் இருந்து வெளியேறினால் ஏலத்தில் எடுக்க பல அணிகள் போட்டியிடும். கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் மேக்ஸ்வெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதன் காரணமாக, பெங்களூரு அணி இவரை வெளியேற்றலாம் என்று தோன்றுகிறது. க்ளென் மேக்ஸ்வெல்லின் மதிப்பு ரூ. 14 கோடியாகும். இந்த தொகைக்கு இரண்டு வீரர்களை பெங்களூரு அணியால் வாங்க முடியும். ஒருவேளை வருகின்ற டிசம்பர் மாதம் பெங்களூரு அணியில் இருந்து மேக்ஸ்வெல் வெளியேறினால் எந்த அணி அவரை ஏலத்தில் எடுக்கும் என்பதை பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Latest News