IPL Retention Player List 2025: மீண்டும் எம்.எஸ்.தோனி களம்.. பண்ட், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் வெளியே! வெளியான தக்கவைப்பு பட்டியல்! - Tamil News | IPL Retention 2025: Complete list of csk rcb kkr mi lsg dc srh gt pbks rr retained players in tamil | TV9 Tamil

IPL Retention Player List 2025: மீண்டும் எம்.எஸ்.தோனி களம்.. பண்ட், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் வெளியே! வெளியான தக்கவைப்பு பட்டியல்!

IPL Players Retention: மகிழ்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்எஸ் தோனி ஐபிஎல் 2025ல் விளையாடுவார் என்பதுதான். அதேசமயம் டெல்லி கேப்பிடல்ஸ் ரிஷப் பண்ட்டையும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேஎல் ராகுலையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயரையும் விடுவித்துள்ளது.

IPL Retention Player List 2025: மீண்டும் எம்.எஸ்.தோனி களம்.. பண்ட், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் வெளியே! வெளியான தக்கவைப்பு பட்டியல்!

எம்.எஸ்.தோனி - ரிஷப் பண்ட் - ஷ்ரேயாஸ் ஐயர் (Image: PTI)

Updated On: 

31 Oct 2024 18:38 PM

ஐபிஎல் 2025 சீசனில் பங்கேற்கும் அனைத்து 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், மகிழ்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்எஸ் தோனி ஐபிஎல் 2025ல் விளையாடுவார் என்பதுதான். அதேசமயம் டெல்லி கேப்பிடல்ஸ் ரிஷப் பண்ட்டையும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேஎல் ராகுலையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயரையும் விடுவித்துள்ளது. இந்திய கேப்டனும், முன்னாள் மும்மை இந்தியன்ஸ் கேப்டனுமான ரோஹித் சர்மா உட்பட 5 வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்துள்ளது. விராட் கோலி, ரஜத் படிதார் மற்றும் யாஷ் தயாள் உள்ளிட்ட மூன்று வீரர்களை மட்டுமே பெங்களூரு தக்கவைத்துள்ளது. பஞ்சாப் அணி 2 வீரர்களை மட்டுமே தக்க வைத்துள்ளது.

ALSO READ: Watch Video: டெஸ்ட் கிரிக்கெட்டில் அபூர்வ நிகழ்வு.. முதல் பந்திலேயே 10 ரன்கள்.. வங்கதேசத்திற்கு அடித்த ஆஃபர்!

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் ஷர்மா – ரூ 16.30 கோடி
ஜஸ்பிரித் பும்ரா – ரூ 18 கோடி
சூர்யகுமார் யாதவ் – ரூ 16.35 கோடி
ஹர்திக் பாண்டியா – ரூ 16.35 கோடி
திலக் வர்மா – ரூ 8 கோடி

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருதுராஜ் கெய்க்வாட் – ரூ. 18 கோடி
மதிஷா பதிரனா – ரூ. 13 கோடி
ஷிவம் துபே – ரூ. 12 கோடி
ரவீந்திரா ஜடேஜா – ரூ. 18 கோடி
எம்.எஸ். தோனி – ரூ. 4 கோடி

டெல்லி கேப்பிடல்ஸ்:

அக்சர் பட்டேல் – ரூ. 16.5 கோடி
குல்தீப் யாதவ் – ரூ. 13.25 கோடி
ஸ்டப்ஸ் – ரூ. 10 கோடி
அபிஷேக் போரல் – ரூ. 4 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐந்து வீரர்களைத் தக்கவைத்துள்ளது.  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஹென்ரிச் கிளாசனை ரூ.23 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் என்ற சாதனையையும் கிளாசன் பெற்றார்.

பாட் கம்மின்ஸ் – ரூ. 18 கோடி
அபிஷேக் சர்மா – ரூ. 14 கோடி
நிதிஷ் குமார் ரெட்டி – ரூ. 6 கோடி
ஹென்ரிச் கிளாசன் – ரூ. 23 கோடி
டிராவிஸ் ஹெட் – ரூ. 14 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 வீரர்களை தக்கவைத்துள்ளது. கடந்த சீசனில் கேப்டனாக இருந்து கொல்கத்தா அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ரிங்கு சிங் – ரூ. 13 கோடி
வருண் சக்கரவர்த்தி – ரூ. 12 கோடி
சுனில் நரைன் – ரூ. 12 கோடி
ஆண்ட்ரே ரஸ்ஸல் – ரூ. 12 கோடி
ஹர்ஷித் ராணா – ரூ. 4 கோடி
ரமன்தீப் சிங் – ரூ. 4 கோடி

பஞ்சாப் கிங்ஸ்:

ஷஷாங்க் சிங் – ரூ. 5.5 கோடி
ப்ரப்சிம்ரன் சிங் – ரூ. 4 கோடி

குஜராத் டைட்டன்ஸ்:

ரஷித் கான் – ரூ. 18 கோடி
சுப்மன் கில் – ரூ. 16.5 கோடி
சாய் சுதர்சன் – ரூ. 8.5 கோடி
ராகுல் தெவாட்டியா – ரூ. 4 கோடி
ஷாரூக் கான் – ரூ. 4 கோடி

ராஜஸ்தான் ராய்ல்ஸ்:

ராஜஸ்தான் ராயல்ஸ் 6 வீரர்களை தக்கவைத்துள்ளது. அனுபவ சுழற்பந்து வீச்சாளர்களான யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் என இருவரையும் அணி விடுவித்துள்ளது.

சஞ்சு சாம்சன் – ரூ. 18 கோடி
யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ரூ. 18 கோடி
ரியான் பராக் – ரூ. 14 கோடி
ஷிம்ரன் ஹெட்மயர் – ரூ. 11 கோடி
துருவ் ஜூரல் – ரூ. 14 கோடி
சந்தீப் சர்மா – ரூ. 4 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3 வீரர்களை மட்டும் தக்கவைத்துள்ளது. கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல்-ஐ விடுவித்துள்ளது.

விராட் கோலி – ரூ. 21 கோடி
ரஜத் படிதார் – ரூ. 11 கோடி
யாஷ் தயாள் – ரூ. 5 கோடி

ALSO READ: On This Day 2005: இலங்கைக்கு எதிராக ருத்ர தாண்டவம்.. 183 ரன்கள் அடித்து மிரட்டிய எம்.எஸ்.தோனி!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

நிக்கோலஸ் பூரன் – ரூ. 21 கோடி
மயாங்க் யாதவ் – ரூ. 11 கோடி
ரவி பிஷ்னோய் – ரூ. 11 கோடி
மொஷின் கான் – ரூ. 4 கோடி
ஆயுஷ் படோனி – ரூ. 4 கோடி

லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் கே.எல்.ராகுலை தக்கவைக்கவில்லை.

அதன்படி, டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போன்ற அணிகள் தங்கள் கேப்டன்களை விடுவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 ஆண்டுக்கான FD - தனியார் வங்கிகளின் வட்டி விகிதங்கள்!
லிப்ஸ்டிக் பயன்படுத்துவதில் இவ்வளவு ஆபத்துக்கள் உள்ளதா?
மஸ்காரா பயன்படுத்தும் நபரா நீங்கள்? - ஜாக்கிரதை!
செரிமானத்திற்கு உதவும் சிறந்த உணவு வகைகள்!