MS Dhoni: ஐபிஎல் 2025ல் விளையாட ஆர்வம் காட்டாத தோனி.. விரைவில் ஓய்வு அறிவிப்பா..? - Tamil News | ipl retention 2025 MS Dhoni Not Confirmed To Play CSK remains uncertain ahead of IPL 2025 | TV9 Tamil

MS Dhoni: ஐபிஎல் 2025ல் விளையாட ஆர்வம் காட்டாத தோனி.. விரைவில் ஓய்வு அறிவிப்பா..?

Published: 

26 Sep 2024 22:39 PM

IPL 2025: ஐபிஎல் 2024ல், எம்எஸ் தோனி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடினார். அந்த சீசன் முழுவதும் தோனி முழங்கால் காயத்தால் அவதிப்பட்ட போதிலும் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டிங் செய்து அசத்தினார். விக்கெட் கீப்பங்கில் 20 ஓவர்கள் முழுமையாக தோனி நின்றாலும், பேட்டிங்கில் கடைசி 2 ஓவர்களில் மட்டுமே களமிறங்கினார். வரவிருக்கும் ஐபிஎல் 2025 சீசனில் தோனி பங்கேற்பது குறித்து இப்போது சந்தேகம் உள்ளது. புதிய ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேயின் வழிகாட்டியாக தோனி பொறுப்பேற்கக்கூடும் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 / 6சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுகொடுத்த எம்.எஸ்.தோனி, வரவிருக்கும் ஐபிஎல் 2025 சீசனில் பங்கேற்பாரா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. வரும் சீசனில் விளையாடுவது குறித்து தோனியிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை என்று சிஎஸ்கே வட்டாரம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 / 6

பிளேயர் தக்கவைப்பு கொள்கை தொடர்பான சமீபத்திய தகவலின்படி, ஐபிஎல்லில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளும் ஐந்து வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். அதன்படி 4 இந்திய வீரர்களையும், 1 வெளிநாட்டு வீரரையும் அணி நிர்வாகம் தக்கவைத்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

3 / 6

ஐபிஎல் 2024 இல், எம்எஸ் தோனி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடினார். அந்த சீசன் முழுவதும் தோனி முழங்கால் காயத்தால் அவதிப்பட்ட போதிலும் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டிங் செய்து அசத்தினார். விக்கெட் கீப்பங்கில் 20 ஓவர்கள் முழுமையாக தோனி நின்றாலும், பேட்டிங்கில் கடைசி 2 ஓவர்களில் மட்டுமே களமிறங்கினார்.

4 / 6

வரவிருக்கும் ஐபிஎல் 2025 சீசனில் தோனி பங்கேற்பது குறித்து இப்போது சந்தேகம் உள்ளது. புதிய ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேயின் வழிகாட்டியாக தோனி பொறுப்பேற்கக்கூடும் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் உரிமையாளரின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் அதை மறுத்து, மீண்டும் ஒரு வீரராக தனது அணிக்காக 'தல' களம் இறங்குவார் என்று தெரிவித்தார்.

5 / 6

புதிய சீசனுக்கான தக்கவைப்பு விதிகள் குறித்து பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, பும்ரா உள்ளிட்ட வீரர்களை தக்கவைத்து கொண்டதாக தெரிகிறது.

6 / 6

ஐபிஎல் 2025 சீசனுக்கு சீசனுக்கு முன்னதாக ஒரு மெகா ஏலம் நவம்பர் அல்லது டிசம்பரில் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த ஏலத்தில் பல வீரர்களின் பரிமாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், பல அணிகள் கேப்டன்சியிலும் மாற்றங்களை சந்திக்கலாம். மெகா ஏலம் தொடர்பான விதிகளை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us On
Related Stories
IND vs BAN T20 Squad: புதுமுகமாக உள்ளே வந்த மயங்க் யாதவ்.. வங்கதேசத்துக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு..!
IPL Retention Rule Explainer: ஐபிஎல் 2025ல் எத்தனை வீரர்கள் தக்க வைக்கலாம்..? என்னென்ன புதிய விதிகள் அறிமுகம்..? முழு விவரம் இங்கே!
Musheer Khan Car Accident: சாலை விபத்தில் தந்தையுடன் சிக்கிய முஷீர் கான்.. சிகிச்சை தர மும்பை கொண்டுபோகும் பிசிசிஐ!
On This Day in 2018: வலியுடன் கடைசி வரை போராடிய கேதர் ஜாதவ்.. 6 ஆண்டுக்குமுன் இதே நாளில் இந்திய அணி ஆசிய சாம்பியன்!
IND vs BAN 2nd Test Day 2: இந்தியா vs வங்கதேச டெஸ்டின் 2வது நாள் ரத்தா..? போட்டிக்கு நடுவே மழை ஆடப்போகும் ஆட்டம்!
Watch Video: அனைத்து விதமான கிரிக்கெட்டில் ஓய்வு.. சக வீரர் அளித்த கௌரவத்துடன் அழுதுகொண்ட வெளியேறிய பிராவோ!
ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
Exit mobile version