IPL 2025: தக்கவைத்த பிறகு எந்த அணியிடம் எவ்வளவு தொகை..? கல்லா கட்ட போகும் ஏலம்!
IPL 2025 Retention: ஐபிஎல் 2025 சீசனில் பங்கேற்கும் 10 அணிகளும் தற்போது மொத்தமாக 47 வீரர்களை தக்கவைத்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைத்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா 5 வீரர்களை தக்கவைத்துள்ளன.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐபிஎல் 2025 சீசனில் பங்கேற்கும் 10 அணிகளும் தற்போது மொத்தமாக 47 வீரர்களை தக்கவைத்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைத்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா 5 வீரர்களை தக்கவைத்துள்ளன.
அதேநேரத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 வீரர்களையும், பஞ்சாப் அணி 2 வீரர்களையும் தக்கவைத்துள்ளன. அந்தவகையில், தற்போது எந்தெந்த அணிகள் எவ்வளவு பணத்தை வைத்துள்ளது. இவ்வளவு தொகையுடன் ஏலத்திற்கு செல்லும் என்ற விவரத்தை இங்கே பார்ப்போம்.
ALSO READ: IPL 2025: எம்.எஸ்.தோனி ஆதரவு.. சென்னை அணியில் ரிஷப் பண்ட்..? ரெய்னா கொடுத்த அப்டேட்!
அணி தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியல்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹென்ரிக் கிளாசென், பாட் கம்மின்ஸ், அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரை தக்கவைத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன், யாஷ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜுரெல், ஷிம்ரோன் ஹெட்மியர், சந்தீப் சர்மா ஆகியோரை தக்கவைத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட், மதிஷா பத்திரனா, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி ஆகியோரை தக்கவைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ்:
மும்பை இந்தியன்ஸ் அணி ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா மற்றும் திலக்வர்மா ஆகியோரை தக்கவைத்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரிங்கு சிங், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங் ஆகியோரை தக்க வைத்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தலால் ஆகியோரை தக்கவைத்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ்:
பஞ்சாப் கிங்ஸ் அணி ஷஷாங்க் சிங், பிரபாசிம்ரன் ஆகியோரை மட்டுமே தக்க வைத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ்:
டெல்லி கேப்பிடல்ஸ் அணி அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல் ஆகியோரை தக்கவைத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ்:
குஜராத் டைட்டன்ஸ் அணி ரஷித் கான், ஷுப்மான் கில், சாய் சுதர்ஷன், ராகுல் தெவாடியா, ஷாருக்கான் ஆகியோரை தக்க வைத்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ஆயுஷ் படோனி ஆகியோரை தக்கவைத்துள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள அணிகள் இந்த வீரர்களை எல்லாம் தக்கவைத்துள்ள நிலையில், மீதம் இவ்வளவு இருக்கும் இவ்வளவு தொகையை கொண்டே மீதமுள்ள வீரர்களை அணியில் எடுக்கும். ஒரு அணி 20 முதல் 25 வீரர்களை தங்கள் அணியில் வைத்திருக்க வேண்டும்.
ஐபிஎல் அணிகள் கைகளில் வைத்திருக்கும் தொகை:
- பஞ்சாப் கிங்ஸ் – ரூ. 110.5 கோடி
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ரூ. 83 கோடி
- டெல்லி கேப்பிடல்ஸ் – ரூ. 73 கோடி
- குஜராத் டைட்டன்ஸ் – ரூ. 69 கோடி
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ. 69 கோடி
- சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ. 55 கோடி
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ. 51 கோடி
- மும்பை இந்தியன்ஸ் – ரூ. 45 கோடி
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ. 45 கோடி
- ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ. 41 கோடி
ஏலத்தில் களமிறங்கும் நட்சத்திர வீரர்கள் யார் யார்..?
ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், முகமது சிராஜ், கிளென் மேக்ஸ்வெல், ஃபாஃப் டு பிளெசிஸ், கேமரூன் கிரீன், வில் சால்ட், பில் வார்னர், குயின்டன் டி காக், மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட்,டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம்.