Irani Cup: போட்டி டிரா! 27 ஆண்டுகளுக்குப் பிறகு.. இரானி கோப்பையை கையில் ஏந்திய மும்பை..! - Tamil News | Irani Cup 2024 match ends in a draw & Mumbai win the trophy by virtue of taking first-innings lead | TV9 Tamil

Irani Cup: போட்டி டிரா! 27 ஆண்டுகளுக்குப் பிறகு.. இரானி கோப்பையை கையில் ஏந்திய மும்பை..!

Published: 

05 Oct 2024 17:33 PM

Mumbai: முதலில் பேட் செய்த மும்பை அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது நாளில் கேப்டன் அஜிங்க்யா ரஹானே 86 ரன்களுடனும், சர்பராஸ் கான் 54 ரன்களுடனும் இன்னிங்ஸை தொடங்கினர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 97 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க, சர்பராஸ் கான் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதன் காரணமாக மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்பிற்கு 537 ரன்கள் எடுத்தது.

Irani Cup: போட்டி டிரா! 27 ஆண்டுகளுக்குப் பிறகு.. இரானி கோப்பையை கையில் ஏந்திய மும்பை..!

மும்பை (Image: twitter)

Follow Us On

மும்பை அணி 15வது முறையாக இரானி கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்தது. லக்னோ உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையே நடந்த போட்டி டிராவில் முடிந்தது. இந்தநிலையில், முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. மும்பை அணி கடைசியாக கடந்த 1997ம் ஆண்டு இரானி கோப்பையை வென்றது. இதையடுத்து 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த சாம்பியன் பட்டத்தை மும்பை அணி வென்றுள்ளது. இப்போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக அஜிங்க்யா ராஹேனேவும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டும் தலைமை தாங்கினர்.

ALSO READ: Washington Sundar Birthday Special: காது கேளாமை.. சிறுவயதில் வாட்டிய வறுமை.. ஆல்ரவுண்டராக ஜொலிக்கும் வாஷிங்டன் சுந்தரின் பயணம்..!

முதல் இன்னிங்ஸ்:

முதலில் பேட் செய்த மும்பை அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது நாளில் கேப்டன் அஜிங்க்யா ரஹானே 86 ரன்களுடனும், சர்பராஸ் கான் 54 ரன்களுடனும் இன்னிங்ஸை தொடங்கினர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 97 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க, சர்பராஸ் கான் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதன் காரணமாக மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்பிற்கு 537 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக சர்பரா கான் 222 ரன்கள் எடுக்க, ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வந்த ரெஸ்ட் ஆஃப் இந்தியா 416 ரன்கள் எடுத்தது. ரெஸ்ட் ஆஃப் இந்தியாவில் அதிகபட்சமாக அபிமன்யு ஈஸ்வரன் 191 ரன்களும், துருவ் ஜூரல் 93 ரன்கள் எடுத்திருந்தனர். மும்பை தரப்பில் ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியான் தலா 3 விக்கெட்களை வீழ்த்திருந்தனர். இதன்மூலம், மும்பை அணி 121 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 78 ஓவர்களில் 329 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதில், மும்பை வீரர் தனுஷ் கோட்டியான் 150 பந்துகளில் 114 ரன்கள் குவித்தார். ஐந்தாவது நாள் முடிவில் ரெஸ்ட் ஆஃப் இந்திய அணியால் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடியாத காரணத்தினால் ஆட்டம் டிராவில் முடிந்தது. ஒரு அமர்விற்கும் குறைவான நேரத்தில் 451 ரன்களை துரத்த முடியாத சூழலை அறிந்த ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானேவுடன் கை குலுக்கினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் மும்பை அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ALSO READ: Watch Video: மறுக்கப்பட்ட ரன் அவுட்.. வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹர்மன்ப்ரீத்.. இந்திய போட்டியில் நடந்தது என்ன?

சர்பராஸ் கான் ஆட்ட நாயகன்:

இரானி கோப்பை இறுதி போட்டியில் இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

கடந்த ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ரெஸ்ட் ஆஃப் இந்தியா அதிகபட்சமாக இதுவரை 30 முறை இரானி கோப்பையை வென்றுள்ளது. அதே நேரத்தில், மும்பை அணி 15 முறை வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த தனுஷ் கோட்டியான் யார்..?

மும்பை அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்தது. இதன் போது தனுஷ் 150 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 10 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 114 ரன்கள் குவித்தார். மேலும், ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக 27 ஓவர்களில் 101 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தனுஷ் கோட்டியன் இதுவரை 30 முதல் தர போட்டிகளில் விளையாடி 88 விக்கெட்டுகள் மற்றும் 1451 ரன்களும் எடுத்துள்ளார். இதில், 2 சதங்களும், 13 அரை சதங்களும் அடங்கும். ஆட்டமிழக்காமல் 120 ரன்கள் எடுத்ததே அவரது சிறந்த ஸ்கோர். அஸ்வின் எதிர்காலத்தில் ஓய்வு பெற்றால், அவருக்கு மாற்று வீரராக தனுஷ் கோட்டியான் வரலாம் என்று கூறப்படுகிறது.

குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
Exit mobile version