Watch Video: ஆள் இல்லாமல் தவித்த தென்னாப்பிரிக்கா.. பீல்ட்டிங்கில் களம் இறங்கிய பேட்டிங் பயிற்சியாளர்!
JP Duminy: ஜே.பி.டுமினி ஒரு வலது கை சுழற்பந்து வீச்சாளர் மற்றும் இடது கை பேட்ஸ்மேன் ஆவார். தென்னாப்பிரிக்கா அணிக்கு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி என மூன்று வடிவங்களிலும் சிறந்த ஆல்ரவுண்டராக செயல்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்காக ஜே.பி.டுமினி இதுவரை 46 டெஸ்ட், 199 ஒருநாள் மற்றும் 81 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒட்டுமொத்தமாக 199 ஒருநாள் போட்டிகளில் 5117 ரன்களும், 46 டெஸ்டில் 2103 ரன்களும், 81 டி20 போட்டிகளில் 1934 ரன்களும் எடுத்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், அயர்லாந்து அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இருப்பினும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா தோற்றிருந்தாலும், பீல்டிங் பற்றாக்குறையால் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் பயிற்சியாளர் களமிறங்கியது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு, சர்வதேச போட்டியில் அரிதாகவே நடந்துள்ளது.
ALSO READ: Dipa Karmakar Retirement: இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் திடீர் ஓய்வு..!
சமீப காலமாக, கிரிக்கெட் உடலில் பல வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இதில், இந்தியா உட்பட பல அணிகளின் முக்கிய வீரர்களும் அடங்கும். ஆனால், பல வீரர்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் களம் இறங்கியதையும் நாம் பார்த்திருப்போம். இதில், பெரும்பாலான பாகிஸ்தான் வீரர்களின் பெயர்களும் அடங்கும். ஆனால், இந்த முறை மிகவும் விசித்திரமான இன்று நடந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு வீரர், பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு மீண்டும் தனது அணிக்காக களமிறங்கினார். ஆனால், அவர் ஆசையாக விளையாடவில்லை, கட்டாயத்தின் காரணமாக உள்ளே வந்தார்.
யார் அந்த வீரர்..? என்ன நடந்தது..?
அயர்லாந்து – தென்னாப்பிரிக்கா அணிக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. இங்கு, வெப்பநிலை அதிகமாக இருந்த காரணமாக களத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா பீல்டர்கள் கடும் அனல் வீசியதால் நீரிழப்பு பற்றாக்குறையால் அவதிப்பட்டனர். தென்னாப்பிரிக்கா அணிக்கு அயர்லாந்து அணிக்கு எதிராக 13 வீரர்களை மட்டுமே வைத்திருந்தது. மீதமுள்ள வீரர்களை டி20 லீக் விளையாட தென்னாப்பிரிக்காவிற்கு சென்றனர். மேலும், சில வீரர்கள் காயம் காரணமாக வீடு திரும்பியுள்ளனர். அபுதாபி வெப்பநிலையில் தென்னாப்பிரிக்கா அணியை சேர்ந்த 13 வீரர்கள் சோர்வடைந்தனர். அபுதாபியில் நிலவிய அதீத சூடு காரணமாக மைதானத்தில் தொடர்ந்து சோர்வு ஏற்பட்டு சிறிய ஓய்வு எடுத்தனர்.
Coach JP Duminy fielding for South Africa against Ireland #IREvSA #JPDuminy pic.twitter.com/bEwiTSgB6m
— Dhoni Raina Team (@DhoniRainaTeam) October 7, 2024
தென்னாப்பிரிக்கா அணியில் பீல்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக, தென்னாப்பிரிக்கா அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஜே.பி.டுமினி ஒரு பீல்டராக களமிறங்கினார். இப்படியாக, கடைசி ஓவரில் மூன்று வீரர்கள் டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பீல்டிங்கில் அணிக்கு உறுதுணையாக பேட்டிங் பயிற்சியாளர் ஜே.பி.டுமினி களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின், தென்னாப்பிரிக்கா அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
பீல்டிங் செய்யும்போது சுறுசுறுப்பாக செயல்பட்ட ஜேஜே.பி.டுமினி, ஃபுல் லெந்த் பந்தை டைவ் அடித்து பவுண்டரிக்கு செல்லாமல் தடுத்தார். தற்போது டுமினியின் பீல்டிங் வீடியோ சமூக வலைதளங்களில் வருவதுடன், அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
🚨 JP DUMINY FIELDED FOR SOUTH AFRICA 🚨
coach was fielding for them due to fatigue for players due to heat.
One of the rare incidents in cricket. pic.twitter.com/iMLBm0W4ng
— Johns. (@CricCrazyJohns) October 7, 2024
யார் இந்த ஜே.பி.டுமினி..?
ஜே.பி.டுமினி ஒரு வலது கை சுழற்பந்து வீச்சாளர் மற்றும் இடது கை பேட்ஸ்மேன் ஆவார். தென்னாப்பிரிக்கா அணிக்கு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி என மூன்று வடிவங்களிலும் சிறந்த ஆல்ரவுண்டராக செயல்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்காக ஜே.பி.டுமினி இதுவரை 46 டெஸ்ட், 199 ஒருநாள் மற்றும் 81 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒட்டுமொத்தமாக 199 ஒருநாள் போட்டிகளில் 5117 ரன்களும், 46 டெஸ்டில் 2103 ரன்களும், 81 டி20 போட்டிகளில் 1934 ரன்களும் எடுத்துள்ளார். மேலும், தனது சுழற்பந்து வீச்சு மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 132 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.