5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Irfan Pathan Birthday: சுல்தான் ஆஃப் ஸ்விங்.. காயத்தால் கரைந்த கனவு.. இர்பான் பதானின் பாதை!

Irfan Pathan: கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அப்போது, இந்திய அணிக்காக முதல் ஓவரை வீசிய இர்பான் பதான் தனது முதல் ஓவரிலேயே யூனிஸ் கான், சல்மான் பட் மற்றும் முகமது ஆகியோரை அடுத்தடுத்த பந்தில் வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

Irfan Pathan Birthday: சுல்தான் ஆஃப் ஸ்விங்.. காயத்தால் கரைந்த கனவு.. இர்பான் பதானின் பாதை!
இர்பான் பதான் (Image: twitter)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 27 Oct 2024 15:20 PM

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி இர்பான் பதான் குஜராத்தின் வதோதராவில் பிறந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இர்பான் பதான், இப்போது லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக் உள்ளிட்ட சில உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார், அதுமட்டுமின்றி, இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கும் வர்ணனை செய்து வருகிறார். இந்திய அணிக்காக பல போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை தேடி தந்துள்ளார்.

மேலும், இர்பான் பதான் பந்துவீச்சு ஸ்விங் அவருக்கு பல பாராட்டுகளையும் பெற்று தந்துள்ளது. பந்தை இருபுறமும் ஸ்விங் செய்து, எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

ALSO READ: Diwali Sweet: தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. பாதுஷா, ஜாங்கிரி செய்வது எப்படி..?

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்:

கடந்த 2003-04 ஆம் ஆண்டில் இர்பான் பதான் வெறும் 19 வயதில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அந்த போட்டியிலேயே ஆஸ்திரேலியாவின் தலை சிறந்த பேட்மேன்களான ஸ்டீவ் வாக், மேத்யூ ஹைடன், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங் விக்கெட்களை வீழ்த்தி பெவிலியனுக்கு அனுப்பினார். தனது ஸ்விங் பந்துவீச்சால் மிக விரைவாகவே சுல்தான் ஆஃப் ஸ்விங் என்ற பட்டத்தை பெற்றார். தொடர்ந்து பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இர்பான் பதானின் அற்புத பந்துவீச்சு மூலம் இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் வெற்றிபெற்றது.

கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அப்போது, இந்திய அணிக்காக முதல் ஓவரை வீசிய இர்பான் பதான் தனது முதல் ஓவரிலேயே யூனிஸ் கான், சல்மான் பட் மற்றும் முகமது ஆகியோரை அடுத்தடுத்த பந்தில் வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை இர்பான் பதான் படைத்தார்.

கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் பந்துவீசிய இர்பான் பதான் 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார். அவரது சிறப்பான ஆட்டத்திற்காக இர்பான் பதானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

கபில் தேவ்-க்கு பிறகு இந்திய அணியில் தலைசிறந்த ஆல்ரவுண்டராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இர்பான் பதான், காயம் மற்றும் மோசமான பார்ம் காரணமாக இந்திய அணிக்கு உள்ளேயும், வெளியேயும் வருவதும் போவதுமாக இருந்தார். பின்னர், கடந்த 2012ம் ஆண்டு கடைசியாக இந்தியாவுக்காக விளையாடினார். கடந்த 2023ம் ஆண்டு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தார். ஆனால், அந்த போட்டி முழுவதும் விளையாடவில்லை.

19 வயதில் அறிமுகமான இர்பான் பதான், தனது 28வது வயதில் இந்திய அணிக்காக கடைசியாக விளையாடினார்.

சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

இர்பான் பதான் தனது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 டிசம்பர் 2003ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமானர். இதுவரை 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்களுடன், 1105 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 1 சதம் மற்றும் 6 அரை சதங்களும் அடங்கும்.

ALSO READ: MS Dhoni: மீண்டும் வரும் எம்.எஸ்.தோனி.. தக்கவைப்பு பட்டியல் தயார்.. குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்..!

மேலும், இர்பான் பதான் 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 173 விக்கெட்டுகளுடன், 1544 ரன்களும், 24 டி20 சர்வதேச போட்டிகளில் 28 விக்கெட்களுடன், 172 ரன்களும் எடுத்துள்ளார்.

Latest News