KKR vs RR: மழையால் கைவிடப்பட்ட RR vs KKR போட்டி.. ரசிகர்கள் ஏமாற்றம்…!

Last Leak Match: நடப்பு ஐபிஎல் 2024 ஆம் ஆண்டின் லீக் தொடர்கள் முடிவடைந்தது கடைசி போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவிருந்தது ஆனால் மழையின் காரணமாக போட்டிகள் விடப்பட்டது. போட்டி கைவிடப்பட்டதால் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

KKR vs RR: மழையால் கைவிடப்பட்ட RR vs KKR போட்டி.. ரசிகர்கள் ஏமாற்றம்...!

கவுஹாத்தி மைதானம்

Updated On: 

20 May 2024 11:44 AM

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி கவுஹாத்தியில் நடைபெற இருந்தது. ஆனால் மழை குறிக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டு ஏழு ஓவராக குறைக்கப்பட்டு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற கொல்கத்தா ன்அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். எதிர்பாராத விதமாக மீண்டும் மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டது. கொல்கத்தா ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டி கடைசி போட்டியாக இருப்பதால் அதற்கு முன்னர் நடந்த பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியின் முடிவவில் சன்ரைசஸ் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

மழை காரணமாக கொல்கத்தா இராஜஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்ட நிலைகள் 17 புள்ளிகள் பெற்ற ராஜஸ்தானி ஹைதராபாத் அணியை விட ரன் ரேட் குறைவாக இருந்ததால் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

Also Read: Iran President: ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர்.. தேடுதல் வேட்டை தீவிரம்!

இதனால் குவாலிஃபயர் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. மற்றொரு வாலிபயர் போட்டிகள் ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் ஆரம்பம் முதல் நன்றாக விளையாடி வந்த இராஜஸ்தான் அணி லீத் தொடரின் பிற்பகுதிகள் மிகவும் மோசமாக விளையாடுவது என்ற விமர்சனத்தை பெற்றது. ஐபிஎல் தொடரின் முதல் ஆறு ஆட்டங்களில் தொடர் வரிசைகளைக் குறித்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த ராஜஸ்தான் அணி தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக
தற்போது எலிமினேட்டரில் விளையாட உள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மழை காரணமாக நேற்று போட்டியும் கைவிடப்பட்டதால் ராஜஸ்தான் ரசிகர்கள் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சசன் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: RCB Vs CSK: தோனியை அவமதித்த ஆர்சிபி வீரர்கள்.. நடந்தது என்ன?

ஸ்ரேயஸ் தலைமையிலான கொல்கத்தா அணியும் நடப்பாய் புயல் தொடரில் ஆரம்பம் முதலில் தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. ஒரு சில போட்டிகளில் தோல்வியை தழுவினாலும் புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதல் நான்கு இடங்களை தக்க வைத்திருந்தது. தற்போது குவாலிபையர் 1 போட்டியில் சன்ரைசர்ஸ் அணியுடன் மோதுகிறது.

மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டாலும், ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணியின் வீரர்கள் மழையை பொருட்படுத்தாது, போட்டியைக் காணவந்த தங்களது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!