IPL 2024 KKR Vs SRH : சென்னையில் இறுதிப்போட்டி.. சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்?

IPL 2024 FINAL: ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு 17 வது சீசனில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் இறுதிப்போட்டியில் களம் காண்கின்றனர். எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இன்றைய போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

IPL 2024 KKR Vs SRH : சென்னையில் இறுதிப்போட்டி.. சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்?

KKR vs SRH: சென்னையில் இறுதிப்போட்டி.. சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்?

Updated On: 

26 May 2024 11:47 AM

கடந்த 2 மாதங்களாக திருவிழா போல களைக்கட்டியிருந்த நடப்பு 2024 ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள், ப்ளே ஆஃப் சுற்றுகள் முடிவடைந்து, இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைர்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதரபாத், பஞ்சாப் கிங்ஸ். ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்ற ஐபிஎல் போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. ஐபிஎல் தொடரில் 4 அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு சென்ற நிலையில், முதல் குவாலிஃபையர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில், கொல்கத்தா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெற்றது. அடுத்து நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில், ஆர்சிபி அணியை வீழ்த்தி குவாலிஃபையர் 2-க்கு ராஜஸ்தான் அணி தகுதி பெற்றது. இந்நிலையில், குவாலிஃபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின . இந்தபோட்டியில் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி வெற்றிபெற்றது. இந்நிலையில் இன்று மே 26 ஆம் தேதி சென்னை சேப்பாக்கில் அமைந்துள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்துகின்றன.

Alos Read: IPL 2024 KKR Vs SRH : இறுதிப்போட்டிக்கு KKR – SRH வர என்ன காரணம்? – ஐபிஎல் 2024 மீள் பார்வை!

கொல்கத்தா அணியில் பேட்டிங் பலமாக இருந்தாலும், பவுலிங்கை பொறுத்த வரையில் சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல் இருவரும் சன்ரைசர்ஸ் அணிக்கு சிம்மசொப்பனமாக திகழ்வர். ஷரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் சன்ரைசர்ஸ் அணியின் முக்கிய பலமே ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தான். இன்றைய போட்டியில் கொல்கத்தாவை சைலண்ட் செய்வாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அபிஷேக் ஷர்மா, ட்ராவிஸ் ஹெட், மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கால்சன் ஆகியோரின் பேட்டிங், நட்ராஜன், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், பேட் கம்மின்ஸ், ஆகியோர் எதிரணியை வீழ்த்தும் வீரர்களாக உள்ளனர். சன்ரைசர்ஸ் அணியை பொறுத்தவரை, பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் என அனைத்திலும் பலமிக்க அணியாகவே உள்ளது.

இந்த 2 அணிகளும், இதுவரை 27 போட்டிகளில் மோதியுள்ள நிலையில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 18 போட்டியிலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 9 போட்டிகளிம் வெற்றி பெற்றுள்ளது. அதனால் எந்த அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்று, ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. குறிப்பாக சேப்பாக்கத்தில் கொரோனா காலக்கட்டத்தில், எந்த அணியும் ஹோம் கிரவுண்டில் விளையாடாத போது, கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. அதிலும் கொல்கத்தா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read: KKR Vs SRH IPL 2024 Final Live Streaming : ஐபிஎல் இறுதிப்போட்டி.. எங்கு, எப்படி பார்க்கலாம்? நேரலை தகவல்கள்!

நடப்பு சீசனில் நட்டைபெற்ற லீக் போட்டி மற்றும் குவாலிஃபையர் போட்டி என இரண்டிலும் கொல்கத்தா அணியே வெற்றிபெற்றது. கடந்த சீசனில் நடைபெற்ற போட்டிகளிலும் கொல்கத்தா அணியே வெற்றிபெற்றுள்ளது. தொடர்ந்து இரண்டு சீசன்களிலும், நடந்த 5 போட்டிகளில் கொல்கத்தா 4ல் வெற்றிபெற்றுள்ளது. இந்த வரலாற்றை மாற்றி எழுதி சன்ரைசர்ஸ் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இரண்டு அணிகளும் கோப்பையை வெல்லும் எண்ணத்துடன் இன்று களம் காணவுள்ளதால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கிரிகெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இன்றைய போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியை ஸ்டார்போர்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

 

 

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!