5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

KKR Vs SRH Pitch Report: சேப்பாக்கத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி.. மைதானம் யாருக்கு சாதகம்..!

Pitch Report/ Weather update:சென்னை சேப்பாக்கில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைர்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் மோதுகின்றனர். இப்போட்டியில் மழைக்குறுக்கிடாமல் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இன்று மே 26 ஆம் தேதி சென்னை சேப்பாக்கில் அமைந்துள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்துகின்றன.

KKR Vs SRH Pitch Report: சேப்பாக்கத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி.. மைதானம் யாருக்கு சாதகம்..!
ஐபிஎல்
intern
Tamil TV9 | Updated On: 26 May 2024 18:56 PM

நடப்பு 2024 ஆம் ஆண்டு, 17 வது ஐபிஎல் போட்டியில் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 3-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்றும், சன்ரைசர்ஸ் அணி 2-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இன்று களம் காண்கின்றனர். இதற்கு முன்னர்,  2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் கொல்கத்தா அணி  2 முறை இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. சன்ரைசர்ஸ் அணி ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தலைமையில், கடந்த 2016ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

Also Read: IPL 2024 KKR Vs SRH : சென்னையில் இறுதிப்போட்டி.. சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்?

சென்னையில் மழை

சென்னையில் நேற்று மாலை திடீரென்று கருமேகம் சூழ்ந்து காணப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் நகரின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்தது. நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணியின் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென மழை வந்ததை தொடர்ந்து, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளின் பயிற்சி ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இன்று நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் பெரிய அளவிலான் மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை . ஆனால், லேசான தூரல் மழை இருக்கும் என்றே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை மழை என்பதாலும், மழை நீண்ட நேரம் நீடிக்காது என்பதாலும் இறுதிப்போட்டிக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றே வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Also Read: IPL 2024 KKR Vs SRH : இறுதிப்போட்டிக்கு KKR – SRH வர என்ன காரணம்? – ஐபிஎல் 2024 மீள் பார்வை!

ஆடுகளம் யாருக்கு சாதகம்?

கடந்த போட்டியை விட இன்றைய போட்டிக்கான பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மேலும், சேப்பாக்கம் மைதானம் எப்போதும் ஸ்பின்னர்களுக்கும், பவுலர்களுக்கும் சாதகமாக இருக்கும் என்பதால் ரன்கள் குவிப்பது சற்று கடினம் தான் என்றாலும், பனிப்பொழிவு அதிகம் இருந்தால், பவுலிங்கை கைவிட்டு பேட்டிங்கை தேர்வு செய்வார்கள் என்றே எதிர்பாக்கப்படுகிறது. சேப்பாக் மைதானத்தை பொறுத்தவரை, பேட்டிங், பீல்டிங் என இரண்டுமே சில நேரங்களில் கடினமானதாக அமையும், இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் டாஸை வென்றால், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யும் என்றே கூறப்படுகிறது. ஆனால், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ரன்களை குவிக்க முடியாமல் திணறியதை நாம் பார்த்தோம். ஆனால், சேப்பாக் மைதானத்தில் 50% சதவீதத்திற்கும் மேலாக, முதலில் பேட்டிங் செய்த அணியே போட்டியை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அணியின் ஸ்கோர் இன்று ஆடுகளத்தில பயன்படுத்தப்படும் மண்ணை பொறுத்தே ரன்களின் இலக்கு நிர்ணயிக்கப்படும். 200 மேலாக அமைந்தால், முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே இன்றைய போட்டி சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News