5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Triple Centuries: டெஸ்டில் அதிவேக டிரிபிள் சதம் அடித்த டாப் 5 வீரர்கள்.. இந்த பட்டியலில் 2 இந்தியர்களும் சாதனை படைப்பு!

Test Cricket: டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடிப்பது எந்த பேட்ஸ்மேனுக்கும் சிறப்பான ஒரு விஷயமாகும். அதிலும், யாராவது இரட்டை சதம் அடித்தாலோ, டிரிபிள் சதம் அடித்தாலோ அது அந்த பேட்ஸ்மேன் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாக அமையும். அந்தவகையில், டிரிபிள் சதம் அடிப்பது ஒவ்வொரு பேட்ஸ்மேனின் கனவாக இருந்தாலும், ஒரு சில பேட்ஸ்மேன்கள் மட்டுமே இந்த கனவை நிறைவேற்றியுள்ளனர். டெஸ்ட் வடிவத்தில் பேட்ஸ்மேன்கள் ரன்களை அடிக்க அதிக ரன்கள் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், இங்கு சில வீரர்கள் குறைந்த பந்துகளிலேயே 300 ரன்கள் அடித்த வரலாறு உண்டு.

Triple Centuries: டெஸ்டில் அதிவேக டிரிபிள் சதம் அடித்த டாப் 5 வீரர்கள்.. இந்த பட்டியலில் 2 இந்தியர்களும் சாதனை படைப்பு!
சேவாக் – கருண் நாயர் – வார்னர்
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 16 Sep 2024 18:48 PM

அதிவேகமாக டிரிபிள் சதம் அடித்த வீரர்கள்: ஒருநாள், டி20 கிரிக்கெட் என எத்தனை வடிவங்கள் வந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஆர்வம் இன்னும் குறைந்ததாக தெரியவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடிப்பது எந்த பேட்ஸ்மேனுக்கும் சிறப்பான ஒரு விஷயமாகும். அதிலும், யாராவது இரட்டை சதம் அடித்தாலோ, டிரிபிள் சதம் அடித்தாலோ அது அந்த பேட்ஸ்மேன் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாக அமையும். அந்தவகையில், டிரிபிள் சதம் அடிப்பது ஒவ்வொரு பேட்ஸ்மேனின் கனவாக இருந்தாலும், ஒரு சில பேட்ஸ்மேன்கள் மட்டுமே இந்த கனவை நிறைவேற்றியுள்ளனர். டெஸ்ட் வடிவத்தில் பேட்ஸ்மேன்கள் ரன்களை அடிக்க அதிக ரன்கள் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், இங்கு சில வீரர்கள் குறைந்த பந்துகளிலேயே 300 ரன்கள் அடித்த வரலாறு உண்டு. விரைவில் இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக ரன்களை குவித்து டிரிபிள் சதம் அடித்த 5 வீரர்களை பார்க்கலாம். இந்த பட்டியலில் 2 இந்திய வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: IPL 2025: தோனி ஓய்வா? ரிஷப் பண்ட் மீது கண் வைத்த சிஎஸ்கே.. கெய்க்வாட் கேப்டன் இல்லையா?

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக டிரிபிள் சதம் அடித்த டாப் 5 பேட்ஸ்மேன்கள் பட்டியல்:

வீரேந்திர சேவாக் (இந்தியா)

வீரேந்திர சேவாக் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆவார். இவர் களமிறங்கிய காலத்தில் மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேனாக வலம் வந்தார். 2011 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலும் சரி, பல போட்டிகளிலும் சரி முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து தனி அடையாளத்தை பெற்றவர். அந்தவகையில் உலகிலேயே அதிவேகமாக டிரிபிள் சதம் அடுத்த வீரர் வீரேந்திர சேவாக்தான். கடந்த 2008ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் 278 பந்துகளில் 300 ரன்களை கடந்து டெஸ்ட் வரலாற்றில் அதிவேகமாக டிரிபிள் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அந்த போட்டியில் சேவாக் 304 பந்துகளில் 42 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உதவியுடன் 319 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.

மேத்யூ ஹைடன் (ஆஸ்திரேலியா)

ஒரு காலத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தூணாக இருந்தவர் மேத்யூ ஹைடன். இவர் கிரீஸில் இருந்தவரை எதிரணி அணியின் பந்துவீச்சாளர்கள் திணறுவார்கள். மேத்யூ ஹைடன் வேகமாக ரன்களை குவிப்பதில் பெயர் பெற்றவர். 2003ல் ஜிம்பாப்வேக்கு எதிராக பெர்த் டெஸ்டில் 362 பந்துகளில் டிரிபிள் சதம் அடித்துள்ளார். அந்த போட்டியில் 437 பந்துகளில் 38 பவுண்டரிகள், 11 சிக்ஸர்கள் உதவியுடன் 380 ரன்கள் ஹெய்டனின் பேட்டிங்கில் இருந்து வந்தவை.

வீரேந்திர சேவாக் (இந்தியா)

வீரேந்திர சேவாக் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 2 மூன்று சதங்களை அடித்துள்ளார். இதன்மூலம், இந்த சாதனையை படைத்த இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பேட்ஸ்மேன் இவர்தான். முல்தானின் பாகிஸ்தானுக்கு எதிராக 364 பந்துகளில் டிரிபிள் சதம் அடித்தார். சேவாக் 295 ரன்களில் இருந்தபோது பாகிஸ்தான் ஜாம்பவான் பந்துவீச்சாளர் சக்லைன் முஷ்டாக்கின் பந்தில் சிக்சர் அடித்து 300 ரன்களை கடந்தார். இந்த போட்டியை பார்த்தவர்கள் தங்கள் வாழ்நாளில் இதை என்றும் மறக்க மாட்டார்கள். இந்த போட்டியில் சேவாக் 375 பந்துகளில் 309 ரன்கள் குவித்து அசத்தினார்.

கருண் நாயர் (இந்தியா)

கருண் நாயர் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடவில்லை என்றாலும், இந்திய அணிக்காக டிரிபிள் சதம் அடித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் 381 பந்துகளில் டிரிபிள் சதம் அடித்திருந்தார். 5-வது இடத்தில் பேட் செய்த கருண் நாயர் ஆட்டமிழக்காமல் 32 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உட்பட 303 ரன்கள் குவித்து அசத்தினார்.

ALSO READ: Robin Singh Birthday: இந்திய கிரிக்கெட் அணியில் கலக்கிய வெளிநாட்டவர்.. யார் இந்த ராபின் சிங்..?

டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேனும், உலகின் ஆபத்தான பேட்ஸ்மேன்களில் இருவருமான டேவிட் வார்னர் தனது டெஸ்ட் வாழ்க்கையில் டிரிபிள் சதம் அடித்துள்ளார். 2019ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்டில் 389 பந்துகளில் டிரிபிள் சதம் அடித்தார். அந்த போட்டியில் டேவிட் வார்னர் 418 பந்துகளில் 39 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உதவியுடன் 335 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Latest News