Paris Olympics 2024: ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தங்கப் பதக்கம்.. உலக சாதனை படைத்த மைக்கேல் பெல்ப்ஸ்! - Tamil News | Michael Phelps has a total of 28 medals in the olympics including 23 golds | TV9 Tamil

Paris Olympics 2024: ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தங்கப் பதக்கம்.. உலக சாதனை படைத்த மைக்கேல் பெல்ப்ஸ்!

Updated On: 

25 Jul 2024 17:59 PM

Olympic Medals: மைக்கேல் ஃபெல்ப்ஸ், ஜூன் 30, 1985ம் ஆண்டு பால்டிமோர், மேரிலாந்தில் பிறந்தார். இவரது தந்தை ஃப்ரெட் ஒரு கால்பந்து வீரர், இவரது தாயார் ஒரு நீச்சல் வீரர் ஆவார். 2016ம் ஆண்டு மைக்கேல் அமெரிக்காவின் கலிபோர்னியா அழகி நிக்கோல் ஜான்சனை மணந்தார். மைக்கேல் மற்றும் நிக்கோலுக்கு நான்கு மகன்கள் உள்ளனர்.

1 / 7பாரிஸ்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் வருகின்ற ஜூலை 26-ம் தேதி (நாளை) முதல் தொடங்குகிறது. இந்த மிகப்பெரிய விளையாட்டு போட்டியை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்தநிலையில், ஒலிம்பிக்கில் அதிக தங்கம் வென்ற தனிநபர் சாதனையை பற்றியை விவரங்களை இங்கே பார்க்கலாம்.

2 / 7

மைக்கேல் ஃபெல்ப்ஸ், ஜூன் 30, 1985 இல் பால்டிமோர், மேரிலாந்தில் பிறந்தார். இவரது தந்தை ஃப்ரெட் ஒரு கால்பந்து வீரர், இவரது தாயார் ஒரு நீச்சல் வீரர் ஆவார். 2016ம் ஆண்டு மைக்கேல் அமெரிக்காவின் கலிபோர்னியா அழகி நிக்கோல் ஜான்சனை மணந்தார். மைக்கேல் மற்றும் நிக்கோலுக்கு நான்கு மகன்கள் உள்ளனர்.

3 / 7

ஒலிம்பிக்கில் அதிக தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார் முன்னாள் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். இவர் இதுவரை ஒலிம்பிக்கில் 23 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

4 / 7

முன்னாள் அமெரிக்க நீச்சல் வீரர் பெல்ப்ஸின் இந்த சாதனையை இதுவரை எந்த வீரராலும் முறியடிக்க முடியவில்லை. 2016 ரியோ ஒலிம்பிக்கில் ஒரு வெள்ளிப் பதக்கம் உட்பட ஐந்து தங்கப் பதக்கங்களை வென்ற பெல்ப்ஸ், அதன்பிறகு தனது ஓய்வை அறிவித்தார்.

5 / 7

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கப் பதக்கங்களை வென்றார் மைக்கேல் பெல்ப்ஸ். இது ஒலிம்பிக் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. இந்த சாதனையையும் இதுவரை எந்த வீரராலும் முறியடிக்க முடியவில்லை.

6 / 7

2000 சிட்னி ஒலிம்பிக்கில் ஃபெல்ப்ஸ் முதல்முறையாக போட்டியிட்டபோது, ​​அவருக்கு 15 வயதுதான். அந்த ஒலிம்பிக்கில் ஃபெல்ப்ஸால் எந்தப் பதக்கமும் வெல்ல முடியவில்லை. ஆனால், ஆண்களுக்கான 200 மீட்டர் நீச்சல் ஸ்ட்ரோக் போட்டியில் 5வது இடத்தைப் பிடித்து தனது தடத்தை பதிவு செய்தார்.

7 / 7

2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ஆறு தங்கம் மற்றும் இரண்டு வெண்கலம் வென்றதன் மூலம், ஃபெல்ப்ஸ், தனது பதக்க வேட்டையை தொடங்கினார்.

Follow Us On
Related Stories
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version