5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Dhoni-Raina Retirement: இன்று இரு ஜாம்பவான்கள் அறிவித்த ஓய்வு.. தோனி – ரெய்னா முடிவால் அதிர்ந்த ரசிகர்கள்!

Independence Day: கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, இந்திய அணி சுதந்திர தின கொண்டாட்டத்தில் இருந்தது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வேளையில் இரவு 7.29 மணிக்கு முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது இந்திய மற்றும் தோனி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Dhoni-Raina Retirement: இன்று இரு ஜாம்பவான்கள் அறிவித்த ஓய்வு.. தோனி – ரெய்னா முடிவால் அதிர்ந்த ரசிகர்கள்!
எம்.எஸ்.தோனி – ரெய்னா
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 25 Sep 2024 09:01 AM

எம்.எஸ்.தோனி, ரெய்னா ஓய்வு: இந்திய கிரிக்கெட் அணியின் பெயர் இருக்கும் வரை எம்.எஸ்.தோனியின் பெயர் இருக்கும் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு இந்திய கிரிக்கெட் அணிக்காக தோனி செய்த சாதனைகள் பல.. மகேந்திர சிங் தோனிக்கு 2007ம் ஆண்டு முதல் முறையாக இந்திய அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட ஆண்டே இந்திய அணிக்காக இளம் படையை கொண்டு 2007ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்தார். அதை தொடர்ந்து, 2011ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை, 2013ம் ஆண்டு சாம்பியன் டிராபி என இவர் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தநிலையில், கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, இந்திய அணி சுதந்திர தின கொண்டாட்டத்தில் இருந்தது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வேளையில் இரவு 7.29 மணிக்கு முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது இந்திய மற்றும் தோனி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ALSO READ: ICC ODI Rankings: ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 2வது இடம்.. 37 வயதில் கெத்துக்காட்டிய ரோஹித் சர்மா!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து தோனி தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் ‘மெயின் பால் தோ பால் கா ஷயர் ஷூன்..’ என்ற பாடல் ஒலித்தது. தொடர்ந்து அந்த பதிவில் தோனி, “ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றி. 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இரவு 7.29 மணி முதல் நான் ஓய்வு பெற்றதாக கருத வேண்டும்” என தெரிவித்தார்.

சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு:

’தல’ தோனி ஓய்வுக்கு பிறகு, சின்ன தல என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரெய்னாவின் இந்த திடீர் ஓய்வும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தது. ஓய்வு குறித்து ரெய்னா தனது இன்ஸ்டாகிராமில், “ உங்களுடன் (தோனி) விளையாடியது மிகவும் அருமையான தருணம். முழுப் பெருமையுடன் இந்த பயணத்தில் உங்களுடன் இணைந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி இந்தியா. ஜெய் ஹிந்த்” என பதிவிட்டிருந்தார்.

எம்.எஸ். தோனி சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோனி தனது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். தோனி இதுவரை 350 ஒருநாள், 98 டி20 மற்றும் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 17,266 ரன்கள் அடித்துள்ளார். இதில், 108 அரை சதங்களும், 16 சதங்களும் அடங்கும்.

தோனி தலைமையில் இந்திய அணி இதுவரை 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் இந்திய அணி 27 வெற்றி, 18 தோல்வி, 18 போட்டிகளை டிரா செய்துள்ளது. அதேபோல், தோனி 200 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி கேப்டனாக செயல்பட்டு, 110 போட்டிகளில் வெற்றியை தேடி தந்துள்ளார். இது தவிர, 11 போட்டிகள் முடிவடையாத நிலையில், 5 போட்டிகள் டையில் முடிந்துள்ளது.

ALSO READ: 15 August: சுதந்திர தினத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ள இந்திய அணி.. இதுவரை எத்தனை முறை வென்றுள்ளது..?

இந்திய அணிக்காக 72 டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள தோனி, 42 போட்டிகளில் வெற்றியை தேடி தந்துள்ளார். தோனியின் தலைமையில் இந்திய அணி மூன்று ஐசிசி பட்டங்களையும், தோனியின் தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஐபிஎல்லில் 5 முறை சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது.

சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதத்துடன் 768 ரன்கள் எடுத்துள்ளார். தொடர்ந்து, இந்தியாவுக்காக 226 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் உட்பட 5615 ரன்களும், 78 டி20 சர்வதேச போட்டிகளில் 1604 ரன்களும் குவித்துள்ளார்.

Latest News