Watch Video: மலைவாழ் மக்களுடன் நடனமாடிய தோனி.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!

Dhoni Dance Video: எம்.எஸ்.தோனி கடந்த 2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்

Watch Video: மலைவாழ் மக்களுடன் நடனமாடிய தோனி.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!

எம்.எஸ்.தோனி டான்ஸ் வீடியோ (Image: twitter and GETTY)

Published: 

04 Dec 2024 12:45 PM

ஐபிஎல் சீசன் 2025க்கான சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இனி வரும் சீசன்களில் விளையாட இருக்கிறார். இதன்மூலம், சில ஆண்டுகாலம் விளையாடுவார் என அவரது ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர். இதையடுத்து, அடுத்த ஐபிஎல் சீசன் எப்போது தொடங்கும் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், வரவிருக்கும் சீசனுக்கு முன்பு, எம்.எஸ். தோனி அவரது மனைவியும் மலைப்பகுதியில் மலைவாழ் மக்களுடன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ: Watch Video: சச்சினை கண்டதும் சந்தோஷம்.. உடல்நிலை சரியில்லாத போதும் நாற்காலியில் துள்ளிய காம்ப்ளி..!

வைரல் வீடியோ:

மலைவாழ் மக்களுடன் தோனியும், சாக்‌ஷியும் ‘குலாபி ஷராரா’ பாடலுக்கு நடனமாடிக்கொண்டிருந்தனர். இந்த வீடியோவை சமூக ஊடக தளமான ட்விட்டரில் பயனர் ஒருவர் பார்த்துள்ளார். தோனி மற்றும் சாக்‌ஷியின் மூதாதையர் வீடு உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ளது. தோனி பிறந்தது ராஞ்சியில் இருந்தாலும், அவரது சொந்த ஊர் உத்தரகாண்ட் தான். தோனியின் குடும்பம் உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தை சேர்ந்தது.

தற்போது எம்.எஸ்.தோனி தனது குடும்பத்துடன் உத்தரகாண்ட் மாநிலத்தில் நேரத்தை செலவழித்து வருகிறார். மலைவாழ் மக்களுடன் இணைந்து தோனி மற்றும் சாக்‌ஷியும் சாதாரண உடையில் நடனமாடிய வீடியோ, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்த வீடியோ, தோனியை சுற்றி சில ஆண்களும், பெண்களும் சூழ்ந்து கொண்டு பஹாரி பாடல்கள் பாடுகின்றனர். அதில், தோனியும் அவரது மனைவியும் சாக்‌ஷியும் உடனிருந்தார். தோனி நடனமாடுவது அரிதாகவே காணப்படுகிறது.

தோனி – 2025 ஐபிஎல்:

எம்.எஸ்.தோனி கடந்த 2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரூ. 4 கோடிக்கு தக்கவைத்துள்ள தோனி, மீண்டும் இதுபோன்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2024க்கு முன்னதாக, சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் தோனி ஒப்படைத்தார். இருப்பினும், ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல தவறியது.

இந்தியன் பிரீமியர் லீக்கில் தற்போது 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை தோனி தலைமையில் 5 முறை சாப்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதாவது 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றது. மகேந்திர சிங் தோனி அணிக்கு இவ்வளவு பெரிய வெற்றியை பெற்று தந்து, தலை சிறந்த கேப்டன் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 12 முறை பிளேஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.

ALSO READ: IND vs AUS Pink Ball test: பிங்க் பால் டெஸ்ட் என்றால் என்ன? பிங்க் பந்தில் மட்டும் விளையாட காரணம் என்ன..?

இதுமட்டுமின்றி, மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி 2010 மற்றும் 2014ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டத்தை வென்றது. எம்.எஸ்.தோனி ஐபிஎல் வாழ்க்கையில் இதுவரை 264 போட்டிகளில் விளையாடி 2,243 ரன்கள் எடுத்துள்ளார். இதி, 54 அரைசதங்களும் அடங்கும். ஐபிஎல்லில் தோனியின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் 84 நாட் அவுட்டாகும்.

மகேந்திர சிங் தோனியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

எம்.எஸ்.தோனி இதுவரை 350 ஒருநாள் போட்டிகளில் 297 இன்னிங்ஸ்களில் 50.57 சராசரியில் 10 சதங்கள், 73 அரை சதங்களுடன் 10,773 ரன்கள் எடுத்துள்ளார். இதில், இவரது அதிகபட்ச ஸ்கோர் 183 ரன்கள் ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி 90 போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் மற்றும் 33 அரை சதங்களுடன் 4876 ரன்கள் எடுத்துள்ளார். 98 டி20 போட்டிகளில் 85 இன்னிங்ஸ்கலில் 37.60 சராசரியில் ஒரு அரை சதத்துடன் 1617 ரன்கள் எடுத்துள்ளார்.

உடலுக்கு சுறுசுறுப்பு தரும் 7 சூப்பர் உணவுகள் - லிஸ்ட் இதோ!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றை பின்பற்றுங்கள்!
புஷ்பா 2 படத்திற்காக வித்யாசமான புரமோஷன் செய்த ராஷ்மிகா
கீர்த்தியை பெண் கேட்ட பிரபல நடிகரின் குடும்பம்.. யார் தெரியுமா?