5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

MS Dhoni: ஐபிஎல் சம்பளம் 2 மடங்கு கட்! பல கோடியை விட்டு விளையாடுவாரா தோனி?

IPL 2025: டிசம்பர் மாதத்தில் நடைபெறும் மெகா ஏலத்திற்கு முன்பாக ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 அணிகளும் 4 வீரர்களுக்கு பதிலாக 6 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம் என்ற அணிகளின் கோரிக்கையை பிசிசிஐ ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த தகவல்கள் முழுமையாக இன்னும் தெரியவில்லை. சிலரின் கேள்வி என்னவென்றால், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவாரா இல்லையா என்பதுதான்.

MS Dhoni: ஐபிஎல் சம்பளம் 2 மடங்கு கட்! பல கோடியை விட்டு விளையாடுவாரா தோனி?
எம்.எஸ்.தோனி
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 25 Sep 2024 09:01 AM

எம்.எஸ்.தோனி: இந்தியன் பிரீமியர் லீக் 2025க்கான ஏற்பாடுகள் தற்போதே அதிவேகமாக சூடுபிடித்து வருகிறது. டிசம்பர் மாதத்தில் நடைபெறும் மெகா ஏலத்திற்கு முன்பாக ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 அணிகளும் 4 வீரர்களுக்கு பதிலாக 6 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம் என்ற அணிகளின் கோரிக்கையை பிசிசிஐ ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த தகவல்கள் முழுமையாக இன்னும் தெரியவில்லை. சிலரின் கேள்வி என்னவென்றால், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவாரா இல்லையா என்பதுதான். இந்த பதற்றத்தை குறைக்கும் வகையில் பழைய விதிகளை மீண்டும் கொண்டு வர பிசிசிஐ ஆயத்தங்களை தொடங்கியுள்ளது.

ALSO READ: On This Day in 2002: டெஸ்ட் வரலாற்றில் 19 வயதில் இரட்டை சதம்.. இங்கிலாந்தை பங்கம் செய்த மிதாலி ராஜ்!

மகேந்திர சிங் தோனி:

கடந்த 3-4 சீசன்களாகவே மகேந்திர சிங் தோனி ஐபிஎல்லில் இருந்து எப்போது ஓய்வு பெறுவார் என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும், ஒவ்வொரு முறையும் எம்.எஸ்.தோனி விளையாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். ஐபிஎல் 2024ல் தோனியின் கடைசி ஐபிஎல் இதுதான் என்ற யூகங்கள் கிளம்பின. முழங்கால் அறுவை சிகிச்சைக்கு பிறகு மகேந்திர சிங் தோனி பேட்டிங்கில் கடைசியாகவே களமிறங்கினார். கடைசி ஓவரில் களமிறங்கி 2 முதல் 6 பந்துகளை மட்டுமே சந்தித்து ரன்களை குவித்தார். முன்னதாக, சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தனது கடைசி ஆட்டத்தில் விளையாடி ஐபிஎல்-ல் இருந்து விடைபெறுவேன் என்று ஏற்கனவே தோனி கூறியிருந்தார். அது இந்தாண்டு நடக்குமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

பழைய விதி என்ன..?

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் ஆகியிருந்தால், அந்த வீரரை ஐபிஎல்-ல் கேப்டு பிளேயரில் இருந்து அன் கேப் வீரராக மாற்றலாம் என்பது விதி. 2008 முதல் அமல்படுத்தப்பட்ட இந்த விதி 2021வரை நடைமுறையில் இருந்தது. இந்த விதியை எந்த அணியும் பயன்படுத்தாததால் 2022 முதல் ரத்து செய்யப்பட்டது.

பழைய விதிகளின்படி, ஒரு அன் கேப்டு பிளேயரை ரூ. 4 கோடி வரை தக்க வைத்து கொள்ளலாம். இந்த தொகை தோனி போன்ற வீரர்களின் மதிப்பிற்கு மிக மிக குறைவு. ஏனெனில், 2022 மெகா ஏலத்தில் தோனியை 12 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்து கொண்டது. பழைய விதியின்படி, தோனி 4 கோடிக்கு தக்க வைக்கப்பட்டால் 3ல் 2 மடங்கு சம்பளத்தை இழப்பார்.

ஐபிஎல் 2025 விளையாடுவது பற்றி தோனி என்ன சொன்னார்..?

ஐபிஎல் 2025 விளையாடுவது பற்றி பேசிய தோனி, “ஐபிஎல் 2025 தொடங்க இன்னும் நிறைய மாதங்கள் இருக்கிறது. வீரர்களை தக்கவைப்பது போன்றவற்றில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முடிவுகள் எதுவும் இப்போது எங்கள் கைகளில் இல்லை. எனவே, விதிகள் மற்றும் விதிமுறைகள் முறைப்படுத்தப்பட்டவுடன், நான் ஒரு முடிவை எடுப்பேன். அதுவும் அணியின் நலனுக்காக இருக்கும்” என்றார்.

ALSO READ: Gas Cylinder Tips: கேஸ் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி? பாதுகாப்பான சமையல் குறிப்புகளும் இங்கே!

2023ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி. 2024 ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவியை ராஜினாமா செய்து, அந்த பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்தார்.

Latest News