“என் பிறந்தநாள் பரிசு இது” இந்திய அணிக்கு வாழ்த்து சொன்ன தோனி!
இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ”என் இதயத்துடிப்பு அதிகரித்தது. தன்னம்பிக்கை மற்றும் நிதானத்துடன் சிறப்பாக விளையாடினீர்கள். உலகக்கோப்பை தாயகம் கொண்டு வரும் உங்களுக்கு அனைவரின் சார்பாகவும் பெரிய நன்றிகள். எனது பிறந்தநாளுக்கு இது சிறந்த பரிசாக இருக்கும்" என்றார்.
டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் நேற்று மோதிய இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இரு அணிகளும் நடப்பு தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதிப்போட்டியில் கூட தோற்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்ததால் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பிரிட்ஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. அதிகபட்சமாக கோஹ்லி 76 ரன் விளாசினார். அக்சர் 47, துபே 27 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து, 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அந்த அணியில் அதிகபட்சமாக கிளாஸன் 52, டி காக் 39 ரன்கள் எடுத்தனர். இந்திய பந்து வீச்சில் ஹர்திக் 3, பும்ரா அர்ஷிதீப் தலா 2 எடுத்தனர். 2007ல் நடந்த முதலாவது ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது ரோகித் தலைமையில் இந்தியா 2வது முறையாக டி20 உலக கோப்பையை கைப்ற்றி அசத்தியது. இந்த நிலையில், உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
Also Read: 17 வருடங்களுக்கு பிறகு டி20 உலக கோப்பையை கைப்பற்றியது இந்தியா..!
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ”என் இதயத்துடிப்பு அதிகரித்தது. தன்னம்பிக்கை மற்றும் நிதானத்துடன் சிறப்பாக விளையாடினீர்கள். உலகக்கோப்பை தாயகம் கொண்டு வரும் உங்களுக்கு அனைவரின் சார்பாகவும் பெரிய நன்றிகள். எனது பிறந்தநாளுக்கு இது சிறந்த பரிசாக இருக்கும்” என்றார்.
முன்னதாக, பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதவில், “சாம்பியன்ஸ். நமது அணி டி20 உலகக் கோப்பையை சிறப்பாக நாட்டிற்கு கொண்டு வந்து உள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த போட்டி வரலாற்று சிறப்புமிக்கது” என குறிப்பிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதவில், “எங்கள் மென் இன் ப்ளூ அவர்களின் இரண்டாவது டி20 உலகக்கோப்பையை முழுமையான ஆதிக்கத்துடன் வென்றதற்காக கொண்டாடுவதில் மகிழ்ச்சி. நமது இந்திய அணி சவாலான சூழ்நிலைகளில் இணையற்ற திறமையை வெளிப்படுத்தி முறியடிக்க முடியாத சாதனையுடன் முடித்தது. வாழ்த்துகள் இந்திய அணி” என குறிப்பிட்டுள்ளார்.
Also Read: சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் கிங் கோலி..!