5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Paris Olympics 2024: ஒலிம்பிக் தொடக்க விழாவில் பயிற்சியாளர் உயிரிழப்பு.. கிளம்பிய சர்ச்சைகள்.. முற்றுப்புள்ளி வைத்த நிர்வாகம்!

Olympics : பாரிஸ் ஒலிம்பிக் 2024ல் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்க யார் செய்யப்பட்ட இடத்தில், தொடக்க விழா நாளென்று ஒரு மோசமான விஷயம் நடந்துள்ளது. அதில், குத்துச்சண்டை பயிற்சியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த பயிற்சியாளர் உயிரிழந்த செய்தி வெளியானதும் ஒலிம்பிக் நடைபெறும் நகரை சுற்றி பலவிதமான விவாதங்கள் கிளம்பியது. தற்போது இந்த மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.

Paris Olympics 2024: ஒலிம்பிக் தொடக்க விழாவில் பயிற்சியாளர் உயிரிழப்பு.. கிளம்பிய சர்ச்சைகள்.. முற்றுப்புள்ளி வைத்த நிர்வாகம்!
கோப்பு புகைப்படம்
mukesh-kannan
Mukesh Kannan | Published: 29 Jul 2024 11:18 AM

பயிற்சியாளர் மரணம்: பாரிஸ் ஒலிம்பிக் 2024 கடந்த ஜூலை 26ம் தேதி செய்ன் நதிக்கரையில் சிறப்பாக தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து 117 வீரர்கள் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளன. இந்தநிலையில் பாரிஸ் ஒலிம்பிக் 2024ல் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்க யார் செய்யப்பட்ட இடத்தில், தொடக்க விழா நாளென்று ஒரு மோசமான விஷயம் நடந்துள்ளது. அதில், குத்துச்சண்டை பயிற்சியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த பயிற்சியாளர் உயிரிழந்த செய்தி வெளியானதும் ஒலிம்பிக் நடைபெறும் நகரை சுற்றி பலவிதமான விவாதங்கள் கிளம்பியது. தற்போது இந்த மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.

Also read: Gianmarco Tamberi: ஒலிம்பிக் விழாவில் தொலைந்த திருமண மோதிரம்.. அதிர்ந்த இத்தாலி வீரர்.. மனைவி கொடுத்த ட்விஸ்ட்!

இறந்த பயிற்சியாளர் யார்..?

சமோவா நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை பயிற்சியாளர் லியோனல் அலிகா ஃபடுபைட்டோதான் இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடக்க விழா அன்று குத்துச்சண்டை பயிற்சியாளர் லியோனல் அலிகா ஃபடுபைட்டோ தனது இறுதி மூச்சை விட்டார். இவரது வயது 60 ஆகும். இவர் பாரிஸ் ஒலிம்பிக் 2024ன் முதல்நிலை ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரரும், சமோவா நாட்டை சேர்ந்த ஒரே குத்துச்சண்டை வீரருமான அடோ ப்லோட்ஜிகி ஃபோகாலிக்கு ஃபதுபைடோ பயிற்சியளித்து வந்தார்.

எப்படி இறந்தார்..?

சமோவா நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை பயிற்சியாளர் லியோனல் மரணம் குறித்து பேசிய ஒலிம்பிக் அதிகாரிகள், “ மாரடைப்பால் லியோனல் அலிகா ஃபதுபைட்டோ உயிரிழந்ததாகவும், அவரது மறைவுக்குப் பிறகு, ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு இரங்கலையும் தெரிவித்தனர். உள்ளூர் மருத்துவ குழு அவரை காப்பாற்ற எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும், பலனளிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

குத்துச்சண்டை வீரர் அடோ ப்லோட்ஜிகி என்ன சொன்னார்..?

பயிற்சியாளர் லியோனல் அலிகா ஃபதுபைட்டோ இறந்தது குறித்து வருத்தமாக பேசிய குத்துச்சண்டை வீரர் அடோ ப்லோட்ஜிகி, “நான் 15 வயதில் பயிற்சியாளர் லியோனலை முதன்முதலில் சந்தித்தேன். அப்போது முதல் இப்போது வரை எனக்கு சிறப்பான முறையில் பயிற்சியளித்தார். அவரது நேரத்தை மட்டுமல்லாது, அறிவையும் மக்களுக்கு கொடுத்து உதவினார். ஒலிம்பிக்கில் எங்களின் முதல் போட்டியில் கூட உங்களால் பங்கேற்க முடியவில்லை. நன்றாகத் திட்டமிட்டிருந்தோம். நீங்கள் அதை எப்போதும் தவறவிட்டீர்கள்” என பேசினார்.

Also read: Who is Manu Bhaker: பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் பதக்கம்.. அசத்திய இந்திய வீராங்கனை மனு பாக்கர்.. யார் இவர் ..?

இதற்கிடையில், சர்வதேச குத்துச்சண்டை சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”லியோனலின் அர்ப்பணிப்பு மற்றும் விளையாட்டின் மீதான ஆர்வம் குத்துச்சண்டை சமூகத்தில் அழியாத முத்திரையை பதித்துள்ளது. அவரது பயிற்சி முறை வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் சமோவா நாடு மற்றும் அவரது குழுவினரை சுற்றியே இருக்கும்” என தெரிவித்திருந்தது.

Latest News