5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Olympic 2024 : முதல் வாய்ப்பிலேயே 89.34 மீ-க்கு ஈட்டியை வீசி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா!

Neeraj Chopra | கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார். அதன்படி இந்தியாவுக்கு இரண்டாவது தங்க பதக்கம் வென்று கொடுத்த இந்திய விளையாட்டு வீரர் ஆனார் நீரஜ். அதுமட்டுமன்றி ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரரகவும் நீரஜ் சோப்ரா உருவெடுத்தார். 

Olympic 2024 : முதல் வாய்ப்பிலேயே 89.34 மீ-க்கு ஈட்டியை வீசி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா!
நீரஜ் சோப்ரா
vinalin
Vinalin Sweety | Published: 06 Aug 2024 16:52 PM

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024 : உலகப் புகழ் பெற்ற ஒலிம்பிக் போட்டி பாரிஸில் நடைபெற்று வருகிறது. கடந்த கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டி, வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் உலகம் முழுவது உள்ள ஏராளமான விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று உள்ளனர். அந்த வகையில் இந்தியாவில் இருந்தும் ஏராளமான வீரர்கள் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். ஏற்கனவே ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கி கொடுத்த நிலையில், நீரஜ் சோப்ராவின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈட்டி எறிதலில் இறுதி போட்டிக்கு முன்னேறி நீரஜ் சோப்ரா அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கருக்கு கிடைத்த அரிய மரியாதை.. என்ன தெரியுமா?

முதல் வாய்ப்பிலேயே இறுதி சுற்றுக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா

பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர்களான நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா உள்ளிட்ட 32 பேர் களமிறங்கினர். அதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே 89.34 மீ தூரம் ஈட்டி எறிந்து இறுதி போட்டிக்கு முன்னேறினார். இந்நிலையில் நீரஜ் சோப்ராவின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதி போட்டி வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், நீரஜ் சோப்ரா நிச்சயம் தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கை இந்தியர்கள் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க : Paris Olympics 2024: ஒலிம்பிக்கில் ப்ரோபோஸ்.. தங்கம் வென்ற வீராங்கனையிடம் காதலை வெளிப்படுத்திய சக வீரர்!

அதுமட்டுமன்றி, நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் இந்தியர்கள் அனைவருக்கு இலவச விசா வழங்கப்படும் என்று, ஆன்லைனில் விசா விண்ணப்பிக்கும் நிறுவனமான Atlys-ன் CEO, மோஹக் நாஹ்டா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்காக தங்கம் வென்ற முதல் தடகள வீரர் நீரஜ் சோப்ரா

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார். அதன்படி இந்தியாவுக்கு இரண்டாவது தங்க பதக்கம் வென்று கொடுத்த இந்திய விளையாட்டு வீரர் ஆனார் நீரஜ். அதுமட்டுமன்றி ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரரகவும் நீரஜ் சோப்ரா உருவெடுத்தார்.

Latest News