World Cup 2025: இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்றி உலகக் கோப்பை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
U19 Women T20 World Cup 2025: 19 வயதுக்குட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2025ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் குரூப் ஸ்டேஜில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே எந்த போட்டியும் இல்லை. ஐசிசி ஒரு அணிகளையும் வெவ்வேறு குழுவில் இடம்பெற்றுள்ளது. இதை இரு நாட்டு ரசிகர்களாலும் ஏற்றுகொள்ள முடியவில்லை. ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போட்டி நடந்து வருகிறது.
19 வயதுக்குட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை: சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் அதிகம் பேசப்பட்டது இந்தியா – பாகிஸ்தான் போட்டிதான். இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளை பொறுத்தவரை ஐசிசி நடத்தும் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறது. அந்தவகையில் 19 வயதுக்குட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2025ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் குரூப் ஸ்டேஜில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே எந்த போட்டியும் இல்லை. ஐசிசி ஒரு அணிகளையும் வெவ்வேறு குழுவில் இடம்பெற்றுள்ளது. இதை இரு நாட்டு ரசிகர்களாலும் ஏற்றுகொள்ள முடியவில்லை. ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போட்டி நடந்து வருகிறது. எப்போதுமே இரு அணிகளும் ஒரே குழுவில் இடம்பெற்று மோதி கொள்ளும். இம்முறை அது நடக்காது.
16 அணிகள் களம்:
19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜனவரி 18, 2025 முதல் தொடங்குகிறது. இந்த மாபெரும் போட்டியை மலேசியா நடத்துகிறது. 2023ஆம் ஆண்டைப் போலவே இம்முறையும் 16 அணிகள் பங்கேற்கின்றன. ஜனவரி 18ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டியில் மொத்தம் 41 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் இறுதிப் போட்டி பிப்ரவரி 2ம் தேதி நடைபெறவுள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் வருகின்ற ஜனவரி 13 முதல் 16 வரை பயிற்சி ஆட்டங்களில் விளையாட இருக்கின்றன. அனைத்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்களையும் ஆச்சர்யப்படுத்தும் விதமாக சமோவா என்ற நாட்டை சேர்ந்த அணி முதன்முறையாக ஐசிசி போட்டிகளில் களமிறங்குகிறது. சமோவா கிரிக்கெட் அணி இதுவரை எந்தவொரு ஐசிசி போட்டிகளிலும் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி எந்த குழுவில் இடம்..?
19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் 16 அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு குழுவிலும் 4 அணிகள் உள்ளன. நடப்பு சாம்பியனான இந்திய அணி குரூப்-ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நிலையில், இதே குழுவில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் போட்டியை நடத்தும் மலேசியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
கடந்த முறை நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், குரூப்-பியில் இடம்பிடித்துள்ளது. இந்த குழுவில் இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் அமெரிக்கா அணிகளும் உள்ளன. குரூப் சியில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, சமோவா மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து தகுதி பெறும் ஒரு அணியும், குரூப் டியில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஸ்காட்லாந்து மற்றும் ஆசியாவில் தகுதி பெறும் ஒரு அணியும் களமிறங்குகின்றன.
போட்டி எங்கெங்கு நடைபெறுகிறது..?
19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை நடத்தும் மலேசியாவில் 4 ஸ்டேடியங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து குரூப் ஏ போட்டிகளும் சிலாங்கூரில் உள்ள புமாஸ் ஓவல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. மேலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப்போட்டியும் இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. குரூப் பி அணிகள் டாக்டர் ஹர்ஜீத் சிங் ஜோஹர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாடுகின்றன.
அரையிறுதி, இறுதிப்போட்டி எப்போது..?
நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் போட்டியில் வருகின்ற ஜனவரி 19ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியை சந்திக்கிறது.
19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டிகள் ஜனவரி 31ம் தேதியும், இறுதிப்போட்டி பிப்ரவரி 2ம் தேதியும் நடைபெற உள்ளது. அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு ரிசர்வ் நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.