விராட் கோலி, ரோகித் சர்மா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது – கபில்தேவ்
விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து விராட் கோலியும், ரோகித் சர்மாவும் டி20 இனி விளையாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை வெகுவாகப் பாராட்டியுள்ளார். ஒருநாள் உலகக் கோப்பை பட்டத்தை வென்ற முதல் இந்திய கேப்டன் ரோஹித் மற்றும் விராட் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சேவகர்கள், மேலும் விளையாட்டின் எந்த வடிவத்திலும் அவர்களை யாராலும் மாற்ற முடியாது. விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து விராட் கோலியும், ரோகித் சர்மாவும் டி20 இனி விளையாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
ஒரு நாள் கிரிக்கெட்டிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தங்களுடைய இறுதி கட்டத்தை எட்டி விட்டதாக தெரிகிறது. இந்த சூழலில் அடுத்த இளம் படையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. கோலி – ரோகித் சர்மாவிற்கும் மாற்று என்பதே கிடையாது கபில்தேவ் புகழாரம் இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடங்கள் யாராலும் ஈடுசெய்ய முடியாதவை என்று கபில்தேவ் புகழாரம் சூட்டியுள்ளார்.
Aslo Read: Basundi Sweet: பால் மட்டும் போதும் நாவில் கரையும் பாசுந்து ஸ்வீட் ரெடி..!
2007ம் ஆண்டுக்கு பிறகு டி20 உலகக்கோப்பையை வெல்லவே முடியாமல் தடுமாறி வந்த இந்திய அணி, 2024 டி20 உலகக் கோப்பையை 17 வருடங்கள் கழித்து வென்றதற்கு பிறகு கோப்பையின் வறட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது. இந்திய அணியில் எந்த வடிவத்திலும் விராட் மற்றும் ரோஹித்தின் இடத்தை யாராலும் எடுக்க முடியாது. அவர்கள் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சேவகர்களாக இருந்துள்ளனர். அது அவர்களுக்கு மகிழ்ச்சியான பிரியாவிடையாக அமைந்ததுள்ளது. அனைத்து வடிவங்களிலும் விராட் தன்னை உருவாக்கிகொண்டார். விராட், ரோகித் இருவரும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்எஸ் தோனி போன்றவர்கள் என்று புகழாரம் தெரிவித்துள்ளார். இந்திய அணியை டாப் ஆர்டர்களாக முன்னின்று வழிநடத்திய மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் டி20 உலகக்கோப்பை வென்றபிறகு, டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்
2025 சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா குறித்து பேசியிருக்கும் முன்னாள் உலகக்கோப்பை கேப்டன் கபில்தேவ் இருவரும் இல்லாதது டி20 கிரிக்கெட்டுக்கு பாதகமானது தான் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கபில் தேவ், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் இடத்தை இந்திய அணியில் நிரப்புவது என்பது யாராலும் முடியாத காரியம். டி20 மட்டுமல்ல எந்த கிரிக்கெட் வடிவமாக இருந்தாலும் சரி. இந்த வீரர்களுக்கு மாற்று வீரர்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இந்திய கிரிக்கெட்டுக்காக மிகப்பெரிய சேவகர்களாக இவ்விருவரும் இருந்திருக்கிறார்கள். டி20 யை பொருத்தவரை அவர்களுக்கு சிறந்த ஒரு வழியனுப்பு தருணம் கிடைத்திருக்கிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தங்களது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பது போல் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளதாக புகழாரம் தெரிவித்துள்ளார்.
Also Read: Hardik pandya divorce: மனைவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஹர்திக் பாண்டியா..!