5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Olympic 2024: ஒலிம்பிக் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார் பி.வி. சிந்து..!

33ஆவது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் ஜூலை மாதம் 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. ஒலிம்பிக் தொடக்க விழாவில் பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுடன் இணைந்து இந்திய நாட்டின் மூவர்ணக் கொடியுடன் அணி வகுப்பு நடத்த உள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷா தெரிவித்துள்ளார்.

Olympic 2024: ஒலிம்பிக் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார் பி.வி. சிந்து..!
பி.வி. சிந்து
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 09 Jul 2024 14:29 PM

ஒலிம்பிக் போட்டிகள் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஒலிம்பிக் சம்மேளனத்தினால் நடத்தப்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் 26 ஆம் தேதி 33 ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் இந்திய நாட்டிலிருந்து வில்வித்தை, குத்துச்சண்டை, தடகளம், பேட்மிண்டன், கோல்ஃப், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம், ஜூடோ, ஹாக்கி என்று பல போட்டிகள் மூலமாக 66 வீரர்கள், 47 வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 113 பேர் கலந்து கொள்ளா இருக்கின்றனர்.

Also Read: Natarajan: லட்சியத்தை அடைவதற்கு ஏழ்மையை ஒரு தடையாக கருதக் கூடாது – நடராஜன்

இந்திய அணியின் தலைவர் பொறுப்பை ஏற்று 6 முறை உலக சாம்பியனும், ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவருமான முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் செயல்படுவார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. இந்திய அணியின் தலைவராக குத்துச்சண்டைவீராங்கனை மேரி கோம் அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக அப்பதவியில் இருந்து விலகுவதாக மேரிகோம் அறிவித்தார். ஆனால் இந்திய அணியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், இந்த கவுரவமிக்க பொறுப்பில் தன்னால் இருக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது என்றும் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் மேரி கோம் கடிதம் எழுதினார்.

இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தலைவராக ககன் நரங் இன்று
அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் குழுவை வழிநடத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒருவரை நான் தேடிக்கொண்டிருந்தேன். ஒலிம்பிக்கில் இந்தியாவின் பெண் கொடி ஏந்திய வீராங்கனையாக பி.வி. சிந்து டேபிள் டென்னிஸ் நட்சத்திரம் ஷரத் கமலுடன் தேசியக்கொடியை மூவர்ணக்கொடியை கையில் ஏந்தி வருவார் என்று மேலும், அறிவித்துள்ளார். பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு சிறந்த முடிவுகளை வழங்க எங்கள் விளையாட்டு வீரர்கள் நன்கு தயாராக உள்ளனர் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Aslo Read: ZIM Vs IND: அபிஷேக் சர்மா சதத்தால் பெருமைக்கொண்ட யுவராஜ்சிங்..!

அதேபோல் நான்கு முறை ஒலிம்பியனும், 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் 10 மீ ஏர் ரைபிள் வெண்கலப் பதக்கம் வென்றவருமான ககன் நரங், ஜூலை 26 ஆம் தேதி தொடங்கும் பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இந்தியக் குழுவின் தலைவராக செயல்படுவார் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

Latest News