Paris Olympic Day 6 Highlights: ஒலிம்பிக் 6ம் நாளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்.. சொதப்பிய பிவி சிந்து, சாத்விக் – சிராக் ஜோடி!

Olympic Games: ஆண்கள் மற்றும் பெண்கள் பந்தய நடைப் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை. வில்வித்தையின் முதல் சுற்றிலேயே பிரவீன் ஜாதவ் 0-6 என தோல்வியடைந்து வெளியேறினார். அதே நேரம், பெல்ஜியம் அணியிடம் இந்திய ஹாக்கி அணி படுதோல்வியை சந்தித்து அதிர்ச்சி அளித்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை பிவி சிந்து, ஒலிம்பிக்கில் மூன்றாவது முறையாக பதக்கம் வெல்லும் சாதனையை தவறவிட்டார். இந்தநிலையில் ஒலிம்பிக்கின் ஆறாவது நாளான நேற்று இந்திய வீரர்கள் எப்படி செயல்பட்டனர் என்பதை இங்கே பார்க்கலாம்.

Paris Olympic Day 6 Highlights: ஒலிம்பிக் 6ம் நாளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்.. சொதப்பிய பிவி சிந்து, சாத்விக் - சிராக் ஜோடி!

பிவி சிந்து - ஸ்வப்னில் குசலே

Published: 

02 Aug 2024 10:41 AM

பாரிஸ் ஒலிம்பிக் 2024: பாரிஸ் ஒலிம்பிக்கின் 6வது நாளில் இந்தியாவுக்கு சிறப்பானதாகவே அமைந்தது. ஒருபுறம், துப்பாக்கிச் சுடுதலில் ஸ்வப்னில் குசலே வெண்கலம் வென்று அசத்தினார். மறுபுறம் பேட்மிண்டன் மற்றும் குத்துச்சண்டையில் பதக்கம் வெல்லும் நிலையில் இருந்து வீரர்கள், வீராங்கனைகள் தோற்று வெளியேறினர். ஆண்கள் மற்றும் பெண்கள் பந்தய நடைப் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை. வில்வித்தையின் முதல் சுற்றிலேயே பிரவீன் ஜாதவ் 0-6 என தோல்வியடைந்து வெளியேறினார். அதே நேரம், பெல்ஜியம் அணியிடம் இந்திய ஹாக்கி அணி படுதோல்வியை சந்தித்து அதிர்ச்சி அளித்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை பிவி சிந்து, ஒலிம்பிக்கில் மூன்றாவது முறையாக பதக்கம் வெல்லும் சாதனையை தவறவிட்டார். இந்தநிலையில் ஒலிம்பிக்கின் ஆறாவது நாளான நேற்று இந்திய வீரர்கள் எப்படி செயல்பட்டனர் என்பதை இங்கே பார்க்கலாம்.

ALSO READ: Paris Olympics: வாள்வீச்சில் 7 மாத கர்ப்பிணி… பாரிஸ் ஒலிம்பிக்கில் சுவாரஸ்யம்..!

வெண்கல பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசலே:

பாரிஸ் ஒலிம்பிக்கில் வியாழக்கிழமையான நேற்று ஆண்களுக்கான 50 மீட்டர் 3ம் நிலை போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் வென்ற முதல் தடகள வீரர் இவர்தான். தகுதி சுற்றில் ஏழாவது இடத்தை பிடித்த குசலே, இறுதிப் போட்டியில் அசத்தி மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலம் பதக்கம் வென்றார். குசேலேவுடன், மற்றொரு இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர் தகுதிச் சுற்றில் 589 புள்ளிகளுடன் 11வது இடத்தைப் பிடித்தார். பெண்கள் பிரிவில் அஞ்சும் மௌத்கில் மற்றும் சிஃபாத் கவுர் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை.

பிவி சிந்து:

உலகின் 6ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஹீ பிங் ஜியாவோ, பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நேர் கேம்களில் தோல்வியடைந்து பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலிருந்து வெளியேறினார் பிவி சிந்து. ரியோ டி ஜெனிரோ மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற சிந்து, குழுவில் முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தார்.

காலிறுதியில் வெளியேறிய சாத்விக் – சிராக்:

உலக தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ள லக்ஷ்யா சென், 13-வது இடத்தில் உள்ள பிரணோயை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். அதே நேரத்தில், ஆண்கள் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, காலிறுதி ஆட்டத்தில் மலேசியாவின் ஆரோன் சியா மற்றும் யிக் வுய் சோவிடம் 21-13, 14-21, 16-21 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்து வெளியேறியது.

குத்துச்சண்டை:

ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சீனாவின் வூ யுவிடம் இரண்டு முறை உலக சாம்பியனான நிகத் ஜரீன் 0-5 என தோல்வியை சந்தித்தார். இதன்மூலம், இந்தியாவுக்கு மேலும் ஒரு ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் கனவு தகர்ந்தது.

ஹாக்கி:

குருப் பி போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து பெல்ஜியம் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் தோற்கடிக்க முடியாத பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. பெல்ஜியத்துக்கு எதிரான போட்டிக்கு முன் இந்திய அணி எந்த போட்டியிலும் தோல்வி அடையவில்லை. நியூசிலாந்து மற்றும் அயர்லாந்திற்கு எதிராக வென்ற இந்திய அணி அர்ஜென்டினாவுக்கு எதிராக 1-1 என டிராவில் முடித்தது. நல்லவேளையாக இந்திய ஆடவர் ஹாக்கி அணி, ஏற்கனவே காலிறுதிக்கு முன்னேறி விட்டது.

ALSO READ: Paris Olympics 2024: ஒலிம்பிக் தொடக்க விழாவில் பயிற்சியாளர் உயிரிழப்பு.. கிளம்பிய சர்ச்சைகள்.. முற்றுப்புள்ளி வைத்த நிர்வாகம்!

20 கிமீ நடைபயணம்:

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 20 கி.மீ. ஆண்கள் பிரிவில், விகாஸ் சிங் மற்றும் பரம்ஜீத் சிங் முறையே 30 மற்றும் 37-வது இடத்தை பிடித்தனர். தேசிய சாதனை படைத்த அக்ஷ்தீப் சிங் ஆறு கி.மீ. பெண்கள் பிரிவில் தேசிய சாதனை வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி 41வது இடம் பிடித்தார்.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?