5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Imane khelif: ஆய்வில் XY குரோமோசோம்! ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை ஒரு ஆணா?

Paris Olympic: பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 66 கிலோ எடைப் பிரிவில் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த இமானே காலீஃப்பும், இத்தாலிய குத்துச்சண்டை வீராங்கனை ஏஞ்சலா கரினியும் 16வது சுற்றில் மோதினர். போட்டி தொடங்கிய சில நொடிகளில் இத்தாலிய குத்துச்சண்டை வீராங்கனை ஏஞ்சலா கரினி போட்டியை கைவிட்டு அழுதபடி வெளியேறினார்.

Imane khelif: ஆய்வில் XY குரோமோசோம்! ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை ஒரு ஆணா?
இமானே காலீஃப் (Image: GETTY)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 05 Nov 2024 17:25 PM

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இமானே காலீஃப் பாலின அடையாள அறிக்கை ‘ஆண்’ என வெளியானதையடுத்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 66 கிலோ எடைப் பிரிவில் இமானே காலீஃப் தங்கம் வென்றார். இறுதிப் போட்டியில் சீனாவின் யாங் லியுவை தோற்கடித்து இமானே காலீஃப் தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். ஒலிம்பிக் போட்டியின்போது, பாலின பிரச்சனைகள் தொடர்பாக இமானே காலீஃப் பெயர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கினார். இவை அனைத்திற்கும் மத்தியில் அற்புதமாக செயல்பட்டு முதல் இடத்தை பிடித்து அசத்தினார்.

இந்தநிலையில், இமானே காலீஃப் ஒரு பெண் அல்ல, ஆண் என்று மருத்துவ அறிக்கையில் வெளியாகியுள்ளது. தற்போது இது இணையத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ALSO READ: India A vs Australia A: பந்தை சேதப்படுத்தியதாக புகார்! ஆஸ்திரேலிய தொடரில் கிளம்பிய சர்ச்சை.. என்ன நடந்தது?

மருத்துவ அறிக்கை என்ன கூறுகிறது..?

மருத்துவ அறிக்கையின்படி, “இமானே காலீஃப்க்கு உள் விரைகள் மற்றும் XY குரோமோசோம்கள் உள்ளன. (இது ஆண்களுக்கு காணப்படும் பொதுவான அறிகுறிகள் ஆகும்), இது 5 ஆல்ஃபா ரிடக்டேஸ் பற்றாக்குறை எனப்படும் ஒரு கோளாறை சுட்டிக்காட்டுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு பாரிஸில் உள்ள கிரெம்ளின்-பைசெட்ரே மருத்துவமனை மற்றும் அல்ஜியர்ஸில் உள்ள மொஹமட் லாமைன் டெபாகின் மருத்துவமனையின் நிபுணர்கள், இமானே காலீஃப் மீது நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அறிக்கையின்படி, இமான் கலீஃபாவிற்கு உள் விரைகள் இருப்பது மற்றும் கருப்பை இல்லாமை போன்ற உயிரியல் பண்புகள் உள்ளன. இமான் கலீஃபாவில் மைக்ரோபெனிஸ் இருப்பதை எம்ஆர்ஐயும் வெளிப்படுத்தியதாக Redux தெரிவிக்கிறது. இந்த ஆய்வு முடிவுகளை பிரெஞ்சு பத்திரிகையாளர் ஜாஃபர் ஐட் ஓடியாவால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ அறிக்கை கசிந்ததால் தற்போது இமானே காலீஃப் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக்கில் கிளம்பிய விவகாரம்:

பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 66 கிலோ எடைப் பிரிவில் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த இமானே காலீஃப்பும், இத்தாலிய குத்துச்சண்டை வீராங்கனை ஏஞ்சலா கரினியும் 16வது சுற்றில் மோதினர். போட்டி தொடங்கிய சில நொடிகளில் இத்தாலிய குத்துச்சண்டை வீராங்கனை ஏஞ்சலா கரினி போட்டியை கைவிட்டு அழுதபடி வெளியேறினார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஏஞ்சலா கரினி, “ ஒரு ஆண் குத்துச்சண்டை வீரருடன் என்னை சண்டை போட சொல்கிறார்கள்” என்று தெரிவித்தார். இது அப்போது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதை தொடர்ந்து காலிறுதிக்கு தகுதியான இமானே, ஹங்கேரியின் லூகா அன்னா ஹமாரியை எதிர்கொண்டு 5-0 என்ற கணக்கில் வென்றது.

அடுத்ததாக, அரையிறுதியில் தாய்லாந்தின் ஜான்ஜெம் சுவானாபெங்கை 5-0 என்ற கணக்கில் வீழ்த்திய அல்ஜீரியாவின் குத்துச்சண்டை வீராங்கனை இமானே காலீஃப், இறுதிப் போட்டியில் சீனாவின் யாங் லியுவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் பாலின சர்ச்சை கிளம்பியபோது பேசிய இமானே காலீஃப், “ நான் மற்ற பெண்களைப் போல ஒரு பெண்தான். நான் ஒரு பெண்ணாக பிறந்தேன், நான் ஒரு பெண்ணாக வளர்ந்தேன். இதன் காரணமாக, பெண் என்னும் தகுதியுடன் விளையாடுகிறேன்” என்று தெரிவித்தார்.

ALSO READ: IND vs NZ: சர்ச்சையான சிராஜ் பேட்டிங் ஆர்டர்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் நைட் வாட்ச்மேன் என்றால் என்ன..?

தடை:

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாகவே, இமானே காலீஃப் பாலினம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சர்வதேச குத்துச்சண்டை சங்கம் 2023ல் தடை விதிக்க, டெல்லியில் உள்ள குத்துச்சண்டை சங்கம் 2023ம் ஆண்டு நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இமானே காலீஃப் பங்கேற்க தடை செய்தது.

Latest News