Watch Video: ராம்ப் வாக்கில் ’வாவ்’ சொல்ல வைத்த மனு பாக்கர்.. மாடலிங்கில் மற்றொரு அவதாரம்!
Manu Bhaker: மனு பாக்கரை தெரியாதவர்கள் யாரேனும் ராம்ப் வாக்கில் மனு பாக்கரை பாத்திருந்தால், யாரும் துப்பாக்கி சுடும் வீராங்கனை என்று சொல்ல மாட்டார்கள். உண்மையான, மாடலிங் அழகி என்று சொல்லி இருப்பார்கள். அந்த அளவிற்கு மனு பாக்கரின் ஸ்டைலும், நடையும் நேர்த்தியாக இருந்தது. துப்பாக்கி சுடுதல் போட்டியை மட்டுமின்றி, அவரது ஸ்டைலையும் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024ல் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மனு பாக்கர், மாடலிங் செய்தும் தற்போது அனைவரது மனதை கவர்ந்துள்ளார். நட்சத்திர துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்காக பிரபலமானவர். மேலும், அவரது அழகுக்காகவும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனார். முன்னதாக, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர் ஒரு ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர், பின்னர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் இரண்டாவது வெண்கல பதக்கம் வென்றார். இதன்மூலம், இந்தியா முழுவதும் தனது பெயரை பரவ செய்தார்.
மாடலிங்:
கடந்த அக்டோபர் 11ம் தேதி டெல்லியில் நடைபெற்ற லாக்மே ஃபேஷன் வீக்கில் மனு பாக்கர் ராம்ப் வாக் செய்து அனைவரின் மனதையும் வென்றார். இந்த நிகழ்ச்சிக்காக மனு பாக்கருக்கு பிரத்யேகமான ஆடை வடிவமைக்கப்பட்டிருந்தது. அதன்படி கறுப்பு நிற லெதர் ஆடை அணிந்து, அதன் மேல் பச்சை நிறை ஜாக்கெட்டை அணிந்திருந்தார். இந்த லாக்மே ஃபேஷன் வீக்கில் மனு பாக்கரின் கிளாமர் ஸ்டைலை பார்த்து அனைவரும் திகைத்தனர். அந்த ராம்ப் வாக்கில் வெறும் நடை மட்டுமல்லாமல் சில போஸ்களும் கொடுத்தும் மிரட்டினார்.
மனு பாக்கரை தெரியாதவர்கள் யாரேனும் ராம்ப் வாக்கில் மனு பாக்கரை பாத்திருந்தால், யாரும் துப்பாக்கி சுடும் வீராங்கனை என்று சொல்ல மாட்டார்கள். உண்மையான, மாடலிங் அழகி என்று சொல்லி இருப்பார்கள். அந்த அளவிற்கு மனு பாக்கரின் ஸ்டைலும், நடையும் நேர்த்தியாக இருந்தது. துப்பாக்கி சுடுதல் போட்டியை மட்டுமின்றி, அவரது ஸ்டைலையும் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
#WATCH | Delhi | Olympic medallist shooter Manu Bhaker walks the ramp at Lakme Fashion Week pic.twitter.com/ozfPv0JJUT
— ANI (@ANI) October 11, 2024
வீடியோ வைரல்:
டெல்லி ராம்ப் வாக் செய்த இந்த வீடியோவை மனு பாக்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மனு பாக்கரின் இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில், சமூக ஊடக பயனர்கள் தொடர்ந்து தங்களது கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
யார் இந்த மனு பாக்கர்..?
ஹரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் பிறந்த மனு பாக்கர், அவரது பள்ளி நாட்களில் டென்னிஸ், ஸ்கேட்டிங் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று விளையாடினார். இதுதவிர, தான் தா என்ற தற்காப்பு கலைகளிலும் தேசிய அளவில் பதக்கம் வென்றார். குத்துச்சண்டையின்போது மனுவுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு, குண்டைச்சண்டையில் பங்கேற்கவில்லை. இதையடுத்து, தனது 14 வயதில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆர்வம் வந்து, துப்பாக்கியை கையில் தூக்கினார்.
கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஹீனா சித்துவடை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் மனு பாக்கர். இதை தொடர்ந்து, 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். 2018 யூத் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று, யூத் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் மனு பாக்கர் பெற்றார்.
மத்திய அரசு செய்த கௌரவம்:
மத்திய அரசு சமீபத்தில் மனு பாக்கரை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் பிராண்ட் தூதராக நியமித்துள்ளது. மனு பாக்கரின் தந்தை ராம் கிஷன் பாக்கர் இந்திய கடற்படையில் வணிக பிரிவில் தலைமை பொறியாளராக உள்ளார்.