5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Paris Olympics Day 3 Highlights: ஒலிம்பிக்கில் மீண்டும் மனு பாக்கர் முத்திரை.. கால் இறுதியில் பேட்மிண்டன் இந்திய ஜோடி.. 3ம் நாள் ஹைலைட்ஸ் இதோ!

Paris Olympic: மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோர் வெண்கல பதக்கத்திற்காக விளையாட இருக்கின்றனர். இதில், வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கல பதக்கம் கிடைக்கும். ஒலிம்பிக்கின் மூன்றாவது நாளான நேற்று இந்தியா மூண்டும் வில்வித்தையில் ஏமாற்றம் அளிக்க, அதே நேரத்தில் ஹாக்கி அணி தோல்வி விளிம்பில் இருந்து தப்பித்தது. இந்த நிலையில் ஒலிம்பிக்கின் மூன்றாம் நாளான நேற்று என்னென்ன நடந்தது என்பதை இங்கே காணலாம்.

Paris Olympics Day 3 Highlights: ஒலிம்பிக்கில் மீண்டும் மனு பாக்கர் முத்திரை.. கால் இறுதியில் பேட்மிண்டன் இந்திய ஜோடி.. 3ம் நாள் ஹைலைட்ஸ் இதோ!
கோப்பு புகைப்படம்
mukesh-kannan
Mukesh Kannan | Published: 30 Jul 2024 10:22 AM

ஒலிம்பிக் 3ம் நாள் ஹைலைட்ஸ்: கடந்த ஜூலை 26ம் தேதி பாரிஸில் பிரமாண்டமாக தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இதுவரை ஒரே ஒரு பதக்கத்தை மட்டுமே வென்றிருந்தாலும், நேற்று துப்பாக்கிச் சுடுதலில் தனது இரண்டாவது பதக்கத்தை சிறிய வித்தியாசத்தில் தவறவிட்டு ஏமாற்றம் அளித்தார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் நான்காவது இடம் பிடித்து அர்ஜூன் பாபவுடா வெண்கல பதக்கத்தை தவறவிட்டார். எனினும், மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோர் வெண்கல பதக்கத்திற்காக விளையாட இருக்கின்றனர். இதில், வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கல பதக்கம் கிடைக்கும். ஒலிம்பிக்கின் மூன்றாவது நாளான நேற்று இந்தியா மூண்டும் வில்வித்தையில் ஏமாற்றம் அளிக்க, அதே நேரத்தில் ஹாக்கி அணி தோல்வி விளிம்பில் இருந்து தப்பித்தது. இந்த நிலையில் ஒலிம்பிக்கின் மூன்றாம் நாளான நேற்று என்னென்ன நடந்தது என்பதை இங்கே காணலாம்.

Also read: Paris Olympics 2024: ஒலிம்பிக் தொடக்க விழாவில் பயிற்சியாளர் உயிரிழப்பு.. கிளம்பிய சர்ச்சைகள்.. முற்றுப்புள்ளி வைத்த நிர்வாகம்!

துப்பாக்கி சுடுதல்:

  • மனு பாக்கர் தனது 2வது பதக்கத்தை நோக்கி முன்னேறி, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் சரஜோத் சிங்குடன் வெண்கலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த ஜோடி இன்று கொரியாவின் ஓ யி ஜின் மற்றும் லீ வோன்ஹோவை எதிர்கொள்கிறது.
  • 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணியில் இந்தியாவை சேர்ந்த ரிதம் சங்வான் மற்றும் அர்ஜூன் சிங் சீமா ஜோதி 576 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தை பிடித்தனர்.
  • 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அர்ஜுன் பாபவுடா 4வது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டார்.
  • பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் ரமிதா ஜிண்டால் ஏழாவது இடத்தைப் பிடித்தார்.

ஹாக்கி:

ரியோ ஒலிம்பிக் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற அர்ஜெண்டினாவுக்கு எதிராக குரூப் பி போட்டியில், இந்தியா அணி 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. முன்னதாக, கடந்த 27ம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்றிருந்தது.

பேட்மிண்டன்:

  • பேட்மிண்டனில் இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி கால் இறுதிக்குள் நுழைந்துள்ளனர். ஜெர்மனியின் மார்க் லாம்ஸ்ஃபஸ் மற்றும் மெர்வின் சீடல் காயம் காரணமாக வெளியேறியதால் இந்திய ஜோடி நேரடியாக காலிறுதிக்குள் நுழைந்தது. இந்த இந்திய ஜோடி இன்று இந்தோனேசியாவின் ரியான் அர்டினாடோ மற்றும் ஃபஜர் அல்ஃபியனை எதிர்கொள்கிறார்கள்.
  • பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் பிரிவில் அஷ்வினி பொன்னப்பா மற்றும் தனிஷா க்ராஸ்டோ ஜோடி, ஜப்பானின் நமி மட்சுயாமா மற்றும் சிஹாரு ஷிடாவிடம் தோல்வியடைந்தனர். முன்னதாக, நேற்று நடந்த சி பிரிவில் இந்திய ஜோடி 18-21 10-21 என்ற கணக்கில் தென் கொரிய ஜோடியான கிம் சோ யோங் மற்றும் காங் ஹீ யோங்கிடம் தோல்வியடைந்தது. இதனால் ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறும் அபாயத்தில் உள்ளனர்.

வில்வித்தை போட்டி:

மகளிர் வீராங்கனைகளை தொடர்ந்து ஆடவர் வில்வித்தை வீரர்களும் கால் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து, பதக்க போட்டியில் இருந்து வெளியேறினர். நான்காவது ஒலிம்பிக்கில் விளையாடும் தருண்தீப் ராய், பி தீரஜ் மற்றும் பிரவீன் ஜாதவ் மூவரும் காலிறுதியில் துர்கியேவிடம் 2-6 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தனர்.

Also read: School Leave: தொடரும் கனமழை.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. எங்கு தெரியுமா?

டேபிள் டென்னிஸ்:

பாரிஸ் ஒலிம்பிக்கில் 4-0 என்ற கணக்கில் பிரான்ஸின் ப்ரீத்திகாவை தோற்கடித்து 16-வது சுற்றுக்குள் நுழைந்தார் மணிகா பத்ரா. இந்த வெற்றியின் மூலம், ஒலிம்பிக்கில் 16-வது சுற்றுக்கு முன்னேறிய இந்தியாவின் முதல் பெண் டேபிள் டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையை மணிகா பத்ரா பெற்றுள்ளார். இவர் அடுத்ததாக, 16-வது சுற்றில் மியு ஹிரானோ அல்லது செங்சு ஜுவை எதிர்கொள்ள இருக்கிறார்.

 

Latest News