On This Day 10 Years Ago: கிரிக்கெட்டின் கருப்பு நாள்! பந்து தாக்கி பிலிப் ஹியூஸ் மறைந்த நாள் இன்று..!
Phillip Hughes: தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அணிகளுக்கு இடையே முதல் தர போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பிலிப் ஹியூஸ் தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக முதல் இன்னிங்ஸில் விளையாடி 9 பவுண்டரிகள் உதவியுடன் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்று. இந்திய இளைஞர்கள் பெரும்பாலும் இந்த விளையாட்டை அதிக விரும்பி, விளையாடுகின்றனர். கிரிக்கெட் சிலர் பொழுதுபோக்கிற்காகவும், சிலர் வாழ்க்கையாகவும் தேர்ந்தெடுத்து விளையாடுகின்றனர். கிரிக்கெட் விளையாட்டை விளையாடுவதற்கும் பார்ப்பதற்கும் மிகவும் ஜாலியாக இருக்கலாம், ஆனால், சில சமயங்களில் கிரிக்கெட் விளையாட்டு ஆபத்திலும் முடியும். அதன்படி, 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (நவம்பர் 27ம் தேதி) ஆஸ்திரேலியாவில் ஒரு கிரிக்கெட் வீரர் பின் கழுத்தில் பந்து தாக்கி உயிரிழந்தார். அவர் வேறு யாரும் இல்லை ஆஸ்திரேலிய தொடக்க வீரர் பிலிப் ஹியூஸ்தான்.
கடந்த 2014ம் ஆண்டு ஒரு பவுன்சர் பந்து தாக்கியத்தில் ஹியூஸின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது. ஹியூஸ் மறைந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று வடிவங்களிலும் விளையாடிய பிலிப் ஹியூஸ், முதல் தர போட்டியில் விளையாடும்போது பந்து தாக்கியது.
Forever 63 not out. Forever in our hearts.
10 years on, we remember Phillip Hughes. pic.twitter.com/TxN1TWwXxM
— Cricket Australia (@CricketAus) November 26, 2024
போட்டியில் நடந்தது என்ன..?
தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அணிகளுக்கு இடையே முதல் தர போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பிலிப் ஹியூஸ் தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக முதல் இன்னிங்ஸில் விளையாடி 9 பவுண்டரிகள் உதவியுடன் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்திருந்தார். அதன்பிறகு, நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் சீன் அபோட் வீசிய பந்து பிலிப் ஹியூஸின் பின் கழுத்தில் தாக்கியது. இதனால் நிலை தடுமாறிய பிலிப் ஹியூஸ் களத்திலேயே தடுமாறி கீழே விழுந்தார்.
உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி நவம்பர் 27ம் தேதி உயிரிழந்தார். இதனால், கிரிக்கெட் வரலாற்றில் நவம்பர் 27ம் தேதி கருப்பு நாள் என்றும் அழைக்கப்படுகிறது.
27 Nov the Black day in cricket history..
Phillip Hughes Never forget — 63 not out 🤍 pic.twitter.com/4JxqInALdQ
— SK Thakur (@SKThakurTweet) November 27, 2024
பிலிப் ஹியூஸ் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
ஆஸ்திரேலிய அணிக்கா பிலிப் ஹியூஸ் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள், 7 அரை சதங்கள் உள்பட 2.65 சராசரியில் 1535 ரன்கள் எடுத்துள்ளார். இதில், பிலிப் ஹியூஸின் அதிகபட்ச ஸ்கோர் 160 ரன்கள் ஆகும்.
25 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 4 அரை சதங்களுடன் 5.91 சராசரியில் 826 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 138* ரன்கள் ஆகும். மேலும், ஒரே டி20 சர்வதேச போட்டியில் விளையாடியுள்ள ஹியூஸ் 6 ரன்கள் எடுத்துள்ளார்.
அதேசமயம், பிலிப் ஹியூஸ் தனது வாழ்க்கையில் 114 முதல் தர போட்டிகளில் 209 இன்னிங்ஸ்களில், அவர் 46.51 சராசரியில் 9023 ரன்கள் எடுத்தார். இதில், 26 சதங்கள் மற்றும் 46 அரை சதங்களும் அடங்கும்.
மௌன அஞ்சலி:
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின்போது பிலிப் ஹியூஸூக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட இருக்கிறது. இந்த போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள் என்றும், ஸ்டேடியத்தில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு பிலிப் ஹியூஸ் இறந்த பிறகு, இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடந்த அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் 13வது வீரராக சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிங்க் பால் டெஸ்ட் எப்போது..?
பார்டர் – கவாஸ்கர் டிராபியின் 2வது டெஸ்ட் பிங்க் பந்தை பயன்படுத்தி பகலிரவு ஆட்டமாக விளையாடப்பட இருக்கிறது. இந்த போட்டி வருகின்ற டிசம்பர் 6ம்தேதி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்பட்ட நிலையில், இரண்டாவது டெஸ்டிற்கு ரோஹித் சர்மா தலைமை தாங்குவார்.