On This Day in 1990: 34 ஆண்டுகளுக்கு முன்பு.. இதேநாளில் முதல் சதம்.. செஞ்சுரி கணக்கை தொடங்கிய சச்சின்..
Sachin Tendulkar: சச்சின் டெண்டுல்கர், இந்த நாளில் அதாவது 14 ஆகஸ்ட் 1990ம் ஆண்டு தனது முதல் சதத்தை அடுத்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 119 ரன்கள் எடுத்து, தனது சகாப்தத்தை தொடங்கினார். இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர் அடுத்த சதம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. இதன் பிறகு சச்சின் டெண்டுல்கரின் பேட் நிற்காமல், 100 சதங்களை தொட்டது.
சச்சின் டெண்டுல்கர்: சர்வதேச கிரிக்கெட்டில் நூறு சதங்கள் அடித்த இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்த நாளில் அதாவது 14 ஆகஸ்ட் 1990ம் ஆண்டு தனது முதல் சதத்தை அடுத்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 119 ரன்கள் எடுத்து, தனது சகாப்தத்தை தொடங்கினார். இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர் அடுத்த சதம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. இதன் பிறகு சச்சின் டெண்டுல்கரின் பேட் நிற்காமல், 100 சதங்களை தொட்டது. தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் பல கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட்டின் கடவுள் என்ற பெயரை பெற்றார்.
சச்சின் டெண்டுல்கரின் முதல் சதம்:
கடந்த 1990ம் ஆண்டு முகமது அசாருதின் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சென்று 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுக்கருக்கு இந்த போட்டி மறக்க முடியாததாக மாறியது. சச்சின் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் சதம் அடித்ததும் இதே போட்டியில்தான். கடைசி நாளில் அவரது சதம் இந்தியாவை தோல்வியில் இருந்து காப்பாற்றியது.
ALSO READ: IPL 2024: ஐபிஎல் 2025ல் மீண்டும் விளையாடப்போகும் தோனி! பிசிசிஐ பக்கா பிளான்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஓல்ட் இராஃபோர்ட் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 9 முதல் 14 வரை நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்தது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கிரஹாம் கூச் மற்றும் மைக் அதர்டன் ஆகியோர் சதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தனர். அதன்பிறகு கூச் 116 ரன்களிலும், எர்த்டன் 131 ரன்களிலும் ஆட்டமிழக்க, அதன்பிறகு இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 519 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் நரேந்திர ஹிர்வானி 4 விக்கெட்டுகளையும், அனில் கும்ப்ளே 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
#OnThisDay in 1990: @sachin_rt, aged 17, scored his first international 💯 as #TeamIndia took on England in Manchester. 👏 👏
The rest, as they say, is history! 🙌 🙌 pic.twitter.com/rAKD3Zfc6Q
— BCCI (@BCCI) August 14, 2021
இந்திய அணியின் தொடக்க வீரர்களக களமிறங்கிய நவ்ஜோத் சிங் சித்து 13 ரன்களிலும், ரவி சாஸ்திரி 25 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதையடுத்து, இந்திய அணியின் மிடில் ஆர்டரில் மஞ்ச்ரேக்கர் 93 ரன்களும், அசார் 179 ரன்களும் எடுத்தனர். இதன் போது, ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த சச்சின் இன்னிங்ஸ் 68 ரன்கள் எடுக்க, இந்தியா தனது முதல் இன்னிங்சில் 432 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அங்கஸ் பிரேசர் அதிகபட்சமாக 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸ்:
இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக செயல்பட்டு, 4 விக்கெட்கள் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஆலன் லாம்ப் 109 ரன்களும், மைக் அதர்டன் ஆட்டமிழக்காமல் 74 ரன்களும் எடுத்திருந்தனர்.
இதன் மூலம் இந்தியாவுக்கு டெஸ்ட் போட்டியில் 408 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. 408 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்கம் மிகவும் மோசமாக இருந்ததால் முதல் விக்கெட் 4 ரன்களுக்குள் சரிய, டில் ஆர்டரில் சஞ்சய் மஞ்ச்ரேகரும், திலீப் வெங்சர்க்கரும் சிறிது நேரம் போராடினர். மஞ்ச்ரேக்கர் 50 ரன்களிலும், வெங்சர்க்கார் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அசாருதீன் 11 ரன்களில் ஆட்டமிழக்க, சச்சின் டெண்டுல்கர் ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார்.
கபில்தேவுடன் இணைந்து இந்திய இன்னிங்ஸை வழிநடத்திய நிலையில், கபில் தேவ் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சச்சினுடன் இணைந்த மனோஜ் பிரபாகர் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதற்கிடையில், சச்சின் டெண்டுல்கர் தனது இன்னிங்சில் 189 பந்துகளை எதிர்கொண்டு 119 ரன்கள் எடுத்து வரலாறு படைத்தார். இது அவரது சர்வதேச வாழ்க்கையில் முதல் சதம். இவரது சிறப்பான பேட்டிங்கால் இந்தியா இந்தப் போட்டியை டிரா செய்தார்.
அப்போது தொடங்கிய சச்சினின் டெஸ்ட் வேட்டை அதன்பிறகு நிற்கவே இல்லை. இன்றுவரை டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக சதங்கள் மற்றும் அதிக போட்டிகளில் விளையாடிய சாதனைகளை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார்.