5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

On This Day 1900: ஒலிம்பிக்கில் ஒரே கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நாள்.. எந்த அணி சாம்பியன் தெரியுமா?

Olympic Cricket: ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் விளையாடியதை நீங்கள் பார்த்தது இல்லையென்றாலும், ஒரு காலத்தில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டது. அதுவும் இன்றைய நாளில் விளையாடப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடியுமா? அதை பற்றி இங்கே முழுமையாக தெரிந்து கொள்வோம். இந்த நாளில், சரியாக 124 ஆண்டுகளுக்கு முன்பு, ஒலிம்பிக்கில் முதல் மற்றும் இன்றுவரை ஒரே கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நாள் இன்றுதான்.

On This Day 1900: ஒலிம்பிக்கில் ஒரே கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நாள்.. எந்த அணி சாம்பியன் தெரியுமா?
ஒலிம்பிக் கிரிக்கெட் (Image: GETTY)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 19 Aug 2024 13:35 PM

ஒலிம்பிக் முதல் கிரிக்கெட் போட்டி: ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் எப்போது வரும் என்று ஒவ்வொரு விளையாட்டு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்தவகையில், வருகின்ற 2028 ஒலிம்பிக் போட்டியில் இருந்து கிரிக்கெட் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் விளையாடியதை நீங்கள் பார்த்தது இல்லையென்றாலும், ஒரு காலத்தில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டது. அதுவும் இன்றைய நாளில் விளையாடப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடியுமா? அதை பற்றி இங்கே முழுமையாக தெரிந்து கொள்வோம். இந்த நாளில், சரியாக 124 ஆண்டுகளுக்கு முன்பு, ஒலிம்பிக்கில் முதல் மற்றும் இன்றுவரை ஒரே கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நாள் இன்றுதான். இந்த போட்டியானது கடந்த 1900ம் ஆண்டு பிரான்ஸில் உள்ள வேலோட்ரோம் டி வின்சென்ஸ் தொடங்கி நடைபெற்றது.

ALSO READ: IPL 2024: ஐபிஎல் 2025ல் மீண்டும் விளையாடப்போகும் தோனி! பிசிசிஐ பக்கா பிளான்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

தொடக்கத்தில் இந்த ஒலிம்பிக்கில் பெல்ஜியம், நெதர்லாந்து, கிரேட் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அணிகள் விளையாட அட்டவணை பிரிக்கப்பட்டது. அதன்பிறகு பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகியவை கிரிக்கெட் அணி இல்லாததால் வெளியேறின. இறுதியில் பிரான்ஸ் மற்றும் கிரேட் பிரிட்டனுக்கும் இடையே ஒரே ஒரு கிரிக்கெட் போட்டி மட்டுமே நடைபெற்றது. அதுவும் இறுதிப்போட்டியாக அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் போட்டிகள் பெரும்பாலும் 5 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால், 1900ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்த போட்டி இரண்டு நாட்களில் முடிவடைந்தது. இதில், ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இரு அணிகளிலும் 11 வீரர்கள் இல்லாமல், 12 வீரர்களுடன் விளையாடினர். இந்த போட்டிக்கு பிரிட்டன் தனது தேசிய அணிக்கு பதிலாக கிளப் அணியை அனுப்பியிருந்தது.

போட்டியில் என்ன நடந்தது..?

முதலில் கிரேட் பிரிட்டன் அணி பேட்டிங் செய்தது. அப்போது மதிய நேரத்திற்குள் பிரான்ஸ் அணி 117 ரன்களுக்குள் கிரேட் பிட்டனை சுருட்டியது. பிரிட்டன் அணியில் அதிகபட்சமாக பிரடெரிக் கம்மிங் 38 ரன்களை எடுத்திருந்தார். பிரான்ஸ் அணி சார்பில் ஆண்டர்சன் 4 விக்கெட்களையும், அட்ரில், ஆர்தர் மற்றும் ராபின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு பேட்டிங் செய்த பிரான்ஸ் அணி 78 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. பிரிட்டன் பந்துவீச்சாளர் கிறிஸ்டியன் 7 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதனால், முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் பிரிட்டன் 39 ரன்கள் முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் இரண்டாவது நாளில், பிரிட்டன் தனது இரண்டாவது இன்னிங்ஸை 145 ரன்களுக்கு டிக்ளேர் செய்து, பிரான்ஸ் அணிக்கு 185 ரன்கள் இலக்காக கொடுத்தனர்.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பிரான்ஸ் அணி 26 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதனால், கிரேட் பிரிட்டன் 158 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ALSO READ: World Cup 2025: இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்றி உலகக் கோப்பை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

இப்போட்டியில் வெற்றி பெற்றாலும் தங்கப் பதக்கம் கிடைக்காமல் வெள்ளிப் பதக்கத்தை பிரிட்டன் பெற்றது. பிரான்சுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இந்த போட்டி 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிகளின் அதிகாரப்பூர்வ பதிவுகளில் சேர்க்கப்பட்டு, இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. மேலும் பிரான்ஸுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.

Latest News