On This Day 2005: இலங்கைக்கு எதிராக ருத்ர தாண்டவம்.. 183 ரன்கள் அடித்து மிரட்டிய எம்.எஸ்.தோனி! - Tamil News | On This Day 2005: ms Dhoni smashed 183 against SL, this is the highest individual score by a WK batsman in ODIs. | TV9 Tamil

On This Day 2005: இலங்கைக்கு எதிராக ருத்ர தாண்டவம்.. 183 ரன்கள் அடித்து மிரட்டிய எம்.எஸ்.தோனி!

MS Dhoni: 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் இடையே மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயிண்டன் டி காக் (174 ரன்கள்) எடுத்து தோனியின் இந்த சாதனையை முறியடிக்க மிக அருகில் வந்தார்.

On This Day 2005: இலங்கைக்கு எதிராக ருத்ர தாண்டவம்.. 183 ரன்கள் அடித்து மிரட்டிய எம்.எஸ்.தோனி!

எம்.எஸ்.தோனி

Published: 

31 Oct 2024 10:53 AM

சரியாக 19 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஆட்டம் ஒருநாள் கிரிக்கெட்டில் தோனி சிறந்த ஸ்கோராகவும், ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாகவும் அமைந்தது. கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட இருந்தது. இதற்கு ஒருநாள் முன்பு இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க சிறப்பாக அமையவில்லை. அப்போதைய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக் 39 ரன்களுடன் ஏமாற்றம் அளித்தார். இந்திய கேப்டன் ராகுல் டிராவிட், மகேந்திர சிங் தோனியை மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய சொன்னார்.

ALSO READ: Virat Kohli: இன்னும் ஒரு இன்னிங்ஸ்.. புதிய உலக சாதனை படைக்கவிருக்கும் விராட் கோலி!

3வது இடத்தில் களமிறங்கிய தோனி:

அன்றைய போட்டியில் எப்போதும் 5வது அல்லது 6வது இடத்தில் களமிறங்கும் மகேந்திர சிங் தோனிக்கு முன்னே செல்ல வேண்டிய வாய்ப்பு அமைந்தது. 3வது இடத்தில் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் டிராவிட் மற்றும் யுவராஜ் சிங் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும், ஒரு முனையில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக பறக்கவிட்டு கொண்டிருந்தார்.

சமிந்த வாஸ், முத்தையா முரளிதரன் போன்ற அபாயகரமான பந்துவீச்சாளர்களை அற்புதமாக எதிர்கொண்டு, ஹெலிகாப்டர் ஷாட்டின் மேஜிக்கை நிகழ்த்தினார். தோனி இவ்வளவு ஆக்ரோஷமான இன்னிங்ஸ் ஆடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 40 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்த தோனி, அதே நேரத்தில் 85 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அந்த இன்னிங்ஸில் மட்டும் தோனி 15 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக, தோனி 145 பந்துகளில் 183 ரன்கள் குவித்து, இந்திய அணியை 46.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 299 ரன்களை விரட்டி வெற்றி பெற்றது. மகேந்திர சிங் தோனிக்கு உறுதுணையாக வேணுகோபால் ராவ் 39 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஒருநாள் போட்டியில் மகேந்திர சிங் தோனியின் இந்த 183 ரன்கள் மூலம் கில்கிறிஸ்டின் சாதனையை முறியடித்தார். அதாவது, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அதிக ரன்கள் எடுத்திருந்த கில்கிறிஸ்டின் (172 ரன்கள்) என்ற சாதனையை முறியடித்தார். இப்போது இந்த சாதனை தோனியின் பெயரில் அப்படியே உள்ளது. இதுவே உலகின் எந்த ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் ஒருநாள் போட்டியில் அடித்த அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும்.

இன்றும் முறியடிக்கப்படவில்லை:

2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் இடையே மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயிண்டன் டி காக் (174 ரன்கள்) எடுத்து தோனியின் இந்த சாதனையை முறியடிக்க மிக அருகில் வந்தார். இதனை தொடர்ந்து, வங்கதேச விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ், 2020ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 176 ரன்களும், அமெரிக்காவின் விக்கெட் கீப்பர் ஜஸ்கரன் மக்ஹோத்ரா 2021ம் ஆண்டு பப்புவா நியூ கினியா அணிக்கு எதிராக 173 ரன்களும் விளாசி இருந்தனர்.

ALSO READ: IND vs AUS: இந்தியாவில் அதிக டெஸ்ட் தொடரை வென்ற அணி எது..? முழு பட்டியல் இதோ!

குமார் சங்கக்கார சதம்:

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் அதிகபட்சமாக குமார் சங்கக்கார 147 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் உதவியுடன் 138 ரன்கள் குவித்தார். இவரை தவிர, மஹேலா ஜெயவர்த்தனே 70 பந்துகளில் 71 ரன்களும், பர்வேஸ் மஹரூப் 16 பந்துகளில் 33 ரன்களும் எடுத்திருந்தனர்.

இந்திய அணி சார்பில் அஜித் அகர்கர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளும், ஜெய்பிரகாஷ் யாதவ், வீரேந்திர சேவாக் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்திருந்தனர்.

அதிகம் இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்!
தீபாவளி நாளில் செய்யக்கூடாத விஷயங்கள்..!
எண்ணெய் அதிகம் இழுக்காமல் வடை சுடுவது எப்படி?
உங்கள் மொபைல் போனை எப்போது மாற்ற வேண்டும் - தெரிஞ்சிக்கோங்க!