On This Day in 1933: 91 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள்.. டெஸ்ட் வரலாற்றில் முதல் சதத்தை பதிவு செய்த இந்திய அணி..!
Lala Amarnath: 91 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில்தான் (டிசம்பர் 17) லாலா அமர்நாத் இத்தகைய சாதனையை படைத்தார். இதன்பிறகு, கடந்த 1936ம் ஆண்டு விஜயநகர மகாராஜாவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, லாலா அமர்நாத் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
உலகில் பல விளையாட்டு போட்டிகள் இருந்தாலும் கிரிக்கெட்டின் வரலாறு என்பது மிகவும் பழமையானது என்றே சொல்லலாம். ஆசியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது கிரிக்கெட்டானது மெல்ல மெல்ல இந்தியாவிலும் நுழைந்தது. அப்படி நுழைந்த இந்த கிரிக்கெட் விளையாட்டு இந்தியர்களின் மூச்சாக மாறும் அளவிற்கு மாறிவிட்டது. கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளில் வரலாறு மிகவும் பழமையானது. அதேநேரத்தில், ஒருநாள் போட்டிகள் என்பது கடந்த 1971ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் முதலாக விளையாடப்பட்டது. அதன்பின்னர், இதன் வளர்ச்சி பல நாடுகளிலும் விளையாடப்பட்டது.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று விதமான வடிவங்கள் விளையாடப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்திய அணியை பொறுத்தவரை கடந்த 1932ம் ஆண்டில்தான் தனது டெஸ்ட் போட்டியை விளையாடியது. அதன்பிற்கு, டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணிக்காக சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் கிடைத்தனர். ஆனால், இதற்கெல்லாம் பல வருடங்களுக்குமுன், இந்தியாவுக்காக கிரிக்கெட் வரலாற்றில் முதல் சதம் அடித்த வீரர் யார் தெரியுமா..? அதுவும் எப்போது அடித்தார் தெரியுமா..? அந்த முழு விவரத்தை இங்கே பார்ப்போம்.
இங்கிலாந்து அணி:
கடந்த 1933ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு கிரிக்கெட் விளையாடுவதற்காக முதல் முதலாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலம் அது. அப்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது மும்பையில் தொடங்கியது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக சிகே நாயுடு நியமிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 219 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. பதிலுக்கு இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் ஆடி 438 ரன்கள் குவித்தது. இதன்மூலம், இங்கிலாந்து அணி இந்தியாவை விட 219 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி சார்பில் முதல் இன்னிங்ஸில் முகமது நிசார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இந்தியாவுக்காக முதல் சதம்:
#OnThisDay in 1933: The Legendary Lala Amarnath changed the face of Indian Cricket scoring the first Test century for India, on debut against England in the first Test in Bombay (Mumbai).#LalaAmarnath #Test #Cricket pic.twitter.com/xKosUjINkP
— KolkataKnightRiders (@KKRiders) December 17, 2020
இந்திய அணி மீண்டும் தனது பேட்டிங் மூலம் 2வது இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சையத் வாசிர் அலி மற்றும் ஜனார்தன் நாவலே களமிறங்கினர். இந்திய அணி 21 ரன்கள் எடுத்திருந்தபோது இவர்கள் இருவரும் அவுட்டாக, லாலா அமர்நாத் மூன்றாவது இடத்திலும், கேப்டன் சிகே நாயுடு 4வது இடத்திலும் களமிறங்கினர். இந்த ஜோடி இரண்டாவது இன்னிங்ஸில் 186 ரன்கள் என்ற அற்புதமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த சிகே நாயுடு 67 ரன்களில் ஆட்டமிழக்க, லாலா அமர்நாத் நீண்ட நேரம் கிரீஸில் இருந்து 118 ரன்கள் எடுத்தார்.
ALSO READ: ஒரு வருடம் ஐஸ்கிரீம் சாப்பிடாத சாம்பியன் குகேஷ்.. அவரே சொன்ன காரணம்!
இதுவே இந்திய அணிக்காக அடிக்கப்பட்ட முதல் டெஸ்ட் சதமாகும். மேலும், 91 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில்தான் (டிசம்பர் 17) லாலா அமர்நாத் இத்தகைய சாதனையை படைத்தார். இதன்பிறகு, கடந்த 1936ம் ஆண்டு விஜயநகர மகாராஜாவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, லாலா அமர்நாத் அணியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு லாலா அமர்நாத் இந்திய அணிக்காக அழைக்கப்பட்டார். மேலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய அணியின் முதல் கேப்டனாகவும் லாலா அமர்நாத் நியமிக்கப்பட்டார்.