On This Day in 2002: டெஸ்ட் வரலாற்றில் 19 வயதில் இரட்டை சதம்.. இங்கிலாந்தை பங்கம் செய்த மிதாலி ராஜ்!
Mithali Raj: சச்சின் டெண்டுல்கர் தனது 16வது வயதில் கிரிக்கெட் உலகில் தனது பெயரை பதித்தது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், 19 வயதில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீராங்கனைதான் மிதாலி ராஜ். இந்த இரட்டை சதமும் அவரது மூன்றாவது டெஸ்ட் போட்டியில். அதுவும் இங்கிலாந்து போன்ற வலுவான கிரிக்கெட் அணிக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில். மிதாலி ராஜூக்கு 19 வயதாக இருந்தபோது இந்த சாதனை குவிக்கப்பட்டது. அப்படி என்ன சாதனை மிதாலி ராஜ் படைத்தார் என்பதை இங்கே பார்க்கலாம்.
உலகின் தலைசிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனையும், முன்னாள் இந்திய மகளிர் அணியின் கேப்டனுமான மிதாலி ராஜ், சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது 16வது வயதில் கிரிக்கெட் உலகில் தனது பெயரை பதித்தது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், 19 வயதில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீராங்கனைதான் மிதாலி ராஜ். இந்த இரட்டை சதமும் அவரது மூன்றாவது டெஸ்ட் போட்டியில். அதுவும் இங்கிலாந்து போன்ற வலுவான கிரிக்கெட் அணிக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில். மிதாலி ராஜூக்கு 19 வயதாக இருந்தபோது இந்த சாதனை குவிக்கப்பட்டது. அப்படி என்ன சாதனை மிதாலி ராஜ் படைத்தார் என்பதை இங்கே பார்க்கலாம்.
ALSO READ: IPL 2024: ஐபிஎல் 2025ல் மீண்டும் விளையாடப்போகும் தோனி! பிசிசிஐ பக்கா பிளான்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
இரட்டை சதம்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த டெஸ்ட் போட்டு 2002ம் ஆண்டு ஆகஸ்ட் 14 முதல் 17 வரை இங்கிலாந்தில் உள்ள டவுண்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் 214 ரன்கள் குவித்து சாதனை படைத்த மிதாலியின் வாழ்க்கையில் இது மூன்றாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீச இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழந்து 147 ரன்களில் தடுமாறி கொண்டிருந்தது. அதன்பிறகு, சி.ஜே.கானர் மற்றும் எல்.கே நியூட்டன் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்து அணி 300 ரன்களை கடக்க உதவி செய்தனர். நியூட்டன் 98 ரன்களும், கானார் 48 ரன்களும் எடுத்திருந்தனர். இதன் காரணமாக, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 329 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் நீது டேவிட் 4 விக்கெட்களையும், ஜூலன் கோஸ்வாமி 3 விக்கெட்களையும் எடுத்திருந்தனர்.
அசத்திய மிதாலி ராஜ்:
பதிலுக்கு பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி தனது முதல் இன்னிங்ஸில் 467 ரன்கள் குவித்தது. மிதாலி ராஜ் 407 பந்துகளில் 19 பவுண்டரிகள் உதவியுடன் 214 ரன்கள் குவித்தார். இவருக்கு உறுதுணையாக ஹேம்லஹா கலா மற்றும் ஜூலன் கோஸ்வாமி தலா 62 ரன்களும், கேப்டன் அஞ்சும் சோப்ரா 52 ரன்களும் எடுத்திருந்தனர். இதனையடுத்து 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணி சார்பில் சார்லட் எட்வர்ட்ஸ் 56 ஓட்டங்களையும், கிளாரி கானர் 46 ஓட்டங்களையும் பெற்றதோடு, லாரா நியூட்டன் 33 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய தரப்பில் நீது டேவிட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் போட்டி டிராவில் முடிந்தது.
மிதாலி ராஜ் சாதனை முறியடிப்பு:
சர்வதேச டெஸ்ட் மகளிர் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த மிதாலி ராஜ் படைத்த இந்த சாதனை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முறியடிக்கப்பட்டது. அதாவது 2004 ம் ஆண்டில் பாகிஸ்தானின் கிரண் பலோச், கராச்சியில் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக 242 ரன்கள் எடுத்து மிதாலி ராஜ் சாதனை முறியடித்தார். கிரண் பலோச் செய்த அந்த சாதனை இன்னும் முறியடிக்க படாமல் உள்ளது.
19 வயது 254 நாட்களில் இரட்டை சதம்:
மிதாலி ராஜ் தனது வாழ்க்கையில் 12 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதில், இவரது அதிகபட்ச ஸ்கோர் 214 ரன்கள் ஆகும். 19 ஆண்டுகள் 254 நாட்களில் இரட்டை சதம் அடித்ததன்மூலம், பெண் வீராங்கனை இருவர் அடித்த இளைய இரட்டை சதம் இதுவாகும். இது இன்று வரை தொடங்கியது. சர்வதேச ஆடவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரார் ஜாவெத் மியாண்டத் 19 ஆண்டுகளில் 140 நாட்களில் இரட்டை சதம் அடித்துள்ளார்.