On This Day In 2007: கம்பீரின் அசத்தல் பேட்டிங்.. தோனி மாஸ்டர் மைண்ட்.. 2007 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற நாள் இன்று!
T20 World Cup 2007: இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் இன்று அதாவது செப்டம்பர் 24ம் தேதி முக்கியமான நாளாகும். 17 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் 2007 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. டி20 உலகக் கோப்பை தொடங்கப்பட்ட முதல் சீசனிலேயே மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. 2007ம் ஆண்டு பயிற்சியாளர் இல்லாமலும், ஒருநாள் உலகக் கோப்பையில் வங்கதேச அணியிடம் தோல்வியும் என அப்போது இந்திய அணிக்கு போதாத காலமாக இருந்தது.
கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி எப்போதும் இதய துடிப்பை எகிற செய்யும். இரு நாடுகளுக்கு இடையேயான போட்டியானது தொடர்களாக நடப்பது இல்லை. ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டுமே இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேரடியாக மோதுகின்றன. இந்த போட்டிகளை காண இருநாட்டு ரசிகர்களும் போட்டியை காண போட்டி போட்டு டிக்கெட்களை வாங்குகின்றனர். கடைசியாக 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்ததாக, இரு அணிகளும் சாம்பியன்ஸ் டிராபி 2025ல் போட்டியில் மோத இருக்கின்றன. இருப்பினும் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்த அட்டவணை மற்றும் இடம் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் இன்று அதாவது செப்டம்பர் 24ம் தேதி முக்கியமான நாளாகும். 17 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் 2007 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. டி20 உலகக் கோப்பை தொடங்கப்பட்ட முதல் சீசனிலேயே மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. 2007ம் ஆண்டு பயிற்சியாளர் இல்லாமலும், ஒருநாள் உலகக் கோப்பையில் வங்கதேச அணியிடம் தோல்வியும் என அப்போது இந்திய அணிக்கு போதாத காலமாக இருந்தது. புதிதாக இந்திய அணிக்கு தலைமை ஏற்ற எம்.எஸ்.தோனி, இந்திய அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். இதன்மூலம், டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்திய பெற்றது.
🗓️ #OnThisDay in 2007!
The @msdhoni-led #TeamIndia created 𝙃𝙄𝙎𝙏𝙊𝙍𝙔 as they lifted the ICC World Twenty20 Trophy 🏆👏 pic.twitter.com/ICB0QmxhjP
— BCCI (@BCCI) September 24, 2024
போட்டியில் நடந்தது என்ன..?
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பார்க்கில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் 54 பந்துகளில் 75 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கம்பீரை தவிர அந்த போட்டியில் ரோஹித் சர்மா 30 ரன்களும், யூசப் பதான் 15 ரன்களும், யுவராஜ் சிங் 14 ரன்களும் எடுத்திருந்தனர்.
பதிலுக்கு பேட்டிங் பாகிஸ்தான் தொடக்க ஓவர்களிலேயே முகமது ஹபீஸை 1 ரன்களில் இழந்தது. அதன்பின் கம்ரான் அக்மல் டக் அவுட்டாகியும், இம்ரான் நசீர் 33 ரன்களுடனும், யூனிஸ் கான் 24 ரன்களுடனும் அவுட்டாகி நடையை கட்டினார். தொடர்ந்து சோயிப் மாலிக் மற்றும் அப்ரிடி விக்கெட்களை இர்பான் பதான் வெளியேற்ற, அப்போது பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
ஆனால் மிஸ்பா உல் ஹக் மட்டும் ஒரு முனையில் நின்று இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பயம் காட்டி கொண்டிருந்தார். இவருக்கு உறுதுணையாக இருந்த அராபத் 15 ரன்களும், சோஹைல் தன்வீர் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த சூழலில் கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 13 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது பாகிஸ்தான் அணியிடம் ஒரு விக்கெட் மட்டுமே மீதம் இருந்த நிலையில், கடைசி ஓவரை மகேந்திர சிங் தோனி ஜோகிந்தர் சர்மாவிடம் ஒப்படைத்தார்.
🗣 “In the air…Sreesanth takes it”
It’s been 17 years since India’s first #T20WorldCup title 🏆 #OnThisDaypic.twitter.com/rUTFklrskY
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 24, 2024
ஜோகிந்தர் முதல் பந்தை வைட் போல் வீசினார். அடுத்த பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கு 5 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த பந்தை மிஸ்பா சிக்ஸராக விரட்ட, பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட வெற்றி பெற்றதாக அனைவரும் நினைத்தனர். பாகிஸ்தானின் வெற்றி உறுதி எனத் தோன்றிய இடத்தில் மிஸ்பா உல் ஹக் தவறு செய்தார். அப்போது பாகிஸ்தானின் வெற்றிக்கு 4 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. மிஸ்பா 43 ரன்களுடன் கிரீஸில் இருந்தது மட்டுமின்றி, ஸ்ட்ரைக்கையும் வைத்திருந்தார். ஜோகிந்தர் ஷர்மா வீசிய மூன்றாவது பந்தில் மிஸ்பா உல் ஹக் ஒரு ஸ்கூப் ஆட, ஃபைன் லெக்கில் நின்றிருந்த ஸ்ரீசாந்திடம் சென்றது. அதை எளிதான பிடித்து ஸ்ரீசாந்த் சந்தோஷத்தில் தூக்கி எறிய முதல் டி20 உலகக் கோப்பையின் இந்திய அணி முதல் சாம்பியன் ஆனது.