On This Day in 2008: 16 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள்.. சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த விராட் கோலி..!
Virat Kohli Debut: தற்போதைய சிறந்த கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி பெயரை எவராலும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. இன்று, விராட் கோலி தலைசிறந்த வீரராக ஜொலித்தாலும், அவரது முதல் சர்வதேச போட்டி அவருக்கு சிறப்பாக அமையவில்லை. சரியாக 16 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், விராட் கோலி முதல் முறையாக இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் அறிமுகமானார். அதன்பிறகு, விராட் கோலி பல அணிகளுக்கு எதிராக சதங்களை குவித்து அசத்தினார்.
விராட் கோலி: இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி, தனது சிறப்பான பேட்டிங் காரணமாக உலகம் முழுவதும் பிரபலமானவர். சர்வதேச கிரிக்கெட் உலகி தனது பெயரில் பல சாதனைகளை குவித்து ஜாம்பவான் அளவிற்கு உயர்ந்துள்ளார். தற்போதைய சிறந்த கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி பெயரை எவராலும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. இன்று, விராட் கோலி தலைசிறந்த வீரராக ஜொலித்தாலும், அவரது முதல் சர்வதேச போட்டி அவருக்கு சிறப்பாக அமையவில்லை. சரியாக 16 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், விராட் கோலி முதல் முறையாக இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் அறிமுகமானார். அதன்பிறகு, விராட் கோலி பல அணிகளுக்கு எதிராக சதங்களை குவித்து அசத்தினார். அதை பற்றி முழுமையாக இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: MS Dhoni: ஐபிஎல் சம்பளம் 2 மடங்கு கட்! பல கோடியை விட்டு விளையாடுவாரா தோனி?
விராட் கோலியின் அறிமுகம்:
விராட் கோலி தனது முதல் சர்வதேச ஒருநால் போட்டியில் கடந்த 2008ம் ஆண்டு இதே நாளில் அறிமுகமானார். அதே ஆண்டுதான், விராட் கோலி தனது தலைமையின் கீழ் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி க்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். அதன்பிறகு, இலங்கை சுற்றுப்பயணத்திற்கான அணியில் தேர்வு ஆனார். இதையடுத்து, 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் தனது முதல் போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இலங்கை அணிக்கு எதிரான தனது சர்வதேச முதல் போட்டியில் விராட் கோலி 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
டி20 மற்றும் டெஸ்ட்டில் விராட் கோலி எப்போது அறிமுகம் ஆனார்..?
2008ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் அறிமுகத்திற்கு பிறகு, விராட் கோலி கடந்த 2010ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானார். கடந்த 2010ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி விராட் கோலி தனது முதல் டி20 போட்டியில் 21 பந்துகளில் 1 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் உதவியுடன் 26 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த 2011ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக அறிமுகமானார். இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 54 பந்துகளில் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்.
ALSO READ: IPL 2025: மெகா ஏலத்திற்கு முன் 3 கேப்டன்கள் விடுவிப்பு..? குட்பை சொல்லப்போகும் அணிகள்..!
விராட் கோலியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
விராட் கோலி இதுவரை இந்திய அணிக்காக 113 டெஸ்ட், 295 ஒருநாள் மற்றும் 125 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் பொறுத்தவரை விராட் கோலி 191 இன்னிங்ஸ்களில் 29 சதங்கள், 30 அரைசதங்கள் உள்பட 8848 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் இவரது அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் 254 ரன்களாகும். ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 283 இன்னிங்ஸ்களில் 50 சதங்கள் மற்றும் 72 அரை சதங்கள் உள்பட 13,906 ரன்கள் எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி 117 இன்னிங்ஸ்களில் 1 சதம் 38 அரை சதங்கள் உள்பட 4,188 ரன்கள் எடுத்துள்ளார்.