On This Day in 2024: ஒருநாள் வரலாற்றில் அதிக ரன்கள்.. இதே நாளில் 264 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா!

Rohit Sharma: இலங்கைக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்த ரோஹித் சர்மா முதலில் 99 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 66 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்த 52வது பந்தில் அதாவது 151 பந்துகளில் இரட்டை சதத்தையும், 166 பந்துகளில் 250 ரன்களை கடந்தார். 

On This Day in 2024: ஒருநாள் வரலாற்றில் அதிக ரன்கள்.. இதே நாளில் 264 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா!

ரோஹித் சர்மா (Image: twitter)

Published: 

13 Nov 2024 12:57 PM

கிரிக்கெட் வரலாற்றில் இன்று அதாவது நவம்பர் 13ம் தேதி மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு இதே நாளில் தற்போதையை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் குவித்து புதிய வரலாறு படைத்தார். ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்த சாதனையை இன்று வரை வேறு எந்த வீரராலும் முறியடிக்க முடியவில்லை. கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.

ALSO READ: Team India: விரைவில் தந்தையாக போகும் 3 இந்திய கிரிக்கெட் வீரர்கள்.. யார் அவர்கள்?

264 ரன்கள்:

இந்த தொடரின் 4வது ஒருநாள் போட்டியானது கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி கொல்கத்தாவில் ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 404 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்க்யா ரஹானே மற்றும் ரோஹித் சர்மா சிறப்பான தொடக்கம் தந்தனர். இன்னிங்ஸின் 8வது ஓவரின் போது ரஹானே 28 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். அதன்பிறகு, விஸ்வரூபம் எடுத்த ரோஹித் சர்மா முதலில் 99 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 66 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்த 52வது பந்தில் அதாவது 151 பந்துகளில் இரட்டை சதத்தையும், 166 பந்துகளில் 250 ரன்களை கடந்தார்.

152.60 ஸ்டிரைக் ரேட்டில் பவுண்டரிகளாக தெறிக்கவிட்ட ரோஹித் சர்மா 173 பந்துகளை சந்தித்து 33 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் உதவியுடன் 264 ரன்கள் குவித்தார். ரோஹித் சர்மாவின் இந்த சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை.

அதன்பிறகு, களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிராக இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு 251 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். இதன் காரணமாக இந்தியா 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ரோஹித் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரட்டை சதம்:

கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்தார். இது ஒருநாள் ஆடவர் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இரட்டை சதமாக பதிவானது. அதன்பிறகு, இதற்கு அடுத்த வருடமே அதாவது 2011ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் 219 ரன்களை குவித்து, ஒருநாள் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார். சேவாக்கை தொடர்ந்து நவம்பர் 2ம் தேதி 2013ம் ஆண்டு பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்தார் ரோஹித் சர்மா.

தொடர்ந்து, 2024ம் ஆண்டு இதே நாளில் இலங்கை எதிராக 264 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா, கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி மொஹாலியில் இலங்கைக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 208 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

ALSO READ: India Vs Pakistan: இந்தியாவின் கோரிக்கைக்கு அடிபணிய வேண்டாம்.. சாம்பியன்ஸ் டிராபியில் தலையிட்ட பாகிஸ்தான் அரசு!

ஒருநாள் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்:

  1. ரோஹித் சர்மா (இந்தியா) – 264 ரன்கள் vs இலங்கை
  2. மார்ட்டின் கப்தில் (நியூசிலாந்து) – 237 ரன்கள் vs வெஸ்ட் இண்டீஸ்
  3. வீரேந்திர சேவாக் (இந்தியா) – 219 ரன்கள் vs வெஸ்ட் இண்டீஸ்
  4. கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்) – 215 ரன்கள் vs ஜிம்பாப்வே
  5. ஃபக்கர் ஜமான் (பாகிஸ்தான்) – 210 ரன்கள் vs ஜிம்பாப்வே
  6. பதும் நிஸாங்கா (இலங்கை ) –  210 ரன்கள் vs ஆப்கானிஸ்தான்
  7. இஷான் கிஷன் (இந்தியா) – 210 ரன்கள் vs வங்கதேசம்

 

ABC ஜூஸில் இவ்வளவு பிரச்னைகள் உள்ளதா?
பாதாம் பருப்பை எவ்வாறு உட்கொள்வது சரியானது?
தினமும் காலையில் சிறிது எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
சைத்ரா ரெட்டி வீட்டில் விசேஷம்... வைரலாகும் போட்டோ