On This Day in 2018: வலியுடன் கடைசி வரை போராடிய கேதர் ஜாதவ்.. 6 ஆண்டுக்குமுன் இதே நாளில் இந்திய அணி ஆசிய சாம்பியன்!
Kedar Jadhav: ஆசிய கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை 8 முறை கோப்பையை வென்றுள்ளது. 2018ம் ஆண்டு 7வது ஆசிய கோப்பையை இந்தியா வென்றது இதே நாளில்தான். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இன்று (செப்டம்பர் 18ம் தேதி) துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது. இது இந்தியாவின் ஏழாவது ஆசிய கோப்பை பட்டமாகும்.
ஆசியாவின் சிறந்த அணிகளின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி எப்போதும் டாப் 1ல் தான் இருக்கும். ஆசிய கண்டத்தில் சிறந்த கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக இந்திய கிரிக்கெட் அணி வலம் வருகிறது. ஆசிய கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை 8 முறை கோப்பையை வென்றுள்ளது. 2018ம் ஆண்டு 7வது ஆசிய கோப்பையை இந்தியா வென்றது இதே நாளில்தான். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இன்று (செப்டம்பர் 18ம் தேதி) துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது.
இது இந்தியாவின் ஏழாவது ஆசிய கோப்பை பட்டமாகும். இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது கடினம் என்று தோன்றியது. அப்போது, விஸ்வரூபம் எடுத்த ஒரு இந்திய வீரர் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இந்த பேட்ஸ்மேனின் பெயர் கேதர் ஜாதவ். அந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி எப்படி வென்றது என்று இங்கே பார்க்கலாம்.
என்ன செய்தார் கேதர் ஜாதவ்..?
தொடை காயம் காரணமாக 3 மாதங்களுக்கு பிறகு கேதர் ஜாதவ் இந்திய அணியில் இடம் பிடித்தார். 2018 ஆசியக் கோப்பையை எந்த அணி வெல்ல போகிறது என்ற எதிர்பார்ப்பில் இந்தியா – வங்கதேச அணிகள் இறுதிப்போட்டியில் களமிறங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹாசன் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 20 ஓவர்கள் வரை நின்று 120 ரன்களை குவித்தது. 59 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்த மெஹித் ஹாசன் ஜாதவ் பந்துவீச்சில் அம்பத்தி ராயுடுவிடம் கேட்சானார். தொடர்ந்து கேதர் ஜாதவ் 9 ஓவர்கள் வீசி 41 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து முஷ்பிகுர் ரஹீம் விக்கெட்டையும் வீழ்த்தினார். அதே தொடர்ந்து, குல்தீப் யாதவ் மற்றும் சாஹலின் சுழலில் வங்கதேச வீரர்களின் விக்கெட்கள் விழ, மறுபுறம் தொடக்க முதலே விட்டன் தாஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது முதல் ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.
லிட்டன் தாஸ் 117 பந்துகளில் 12 பவுண்டரிகள் 121 ரன்கள் குவித்தார். மறுபுறம், மிராஸ் மற்றும் சௌமியா சர்க்கார் முறையே 32 மற்றும் 33 ரன்களை எடுத்திருந்தனர். இருப்பினும், இந்திய அணியின் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் வங்கதேச அணி 48.3 ஓவர்களில் 222 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்களும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்களும், பும்ரா மற்றும் சாஹல் தலா 1 விக்கெட்டும் எடுத்திருந்தனர்.
இந்திய அணி தடுமாற்றம்:
முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியாவுக்கு இது எளிதான இலக்கு போல் தோன்றியது. இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பான தொடக்கத்தை கொடுத்தாலும், அவரது தொடக்க ஜோடி ஷிகர் தவான் ஐந்தாவது ஓவரில் 15 ரன்களிலும், அம்பத்தி ராயுடு ஏழு பந்துகளை சந்தித்து 2 ரன்களுடனும் வெளியேறினர்.
அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ரோஹித் சர்மா தனது அரைசதத்தை இரண்டு ரன்களில் தவறவிட்டு ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி 36 ரன்களில் பெவிலியன் திரும்ப, இந்திய ரசிகர்கள் அனைவரும் கேதர் ஜாதவ் மீது நம்பிக்கை வைத்தனர். அப்போது விரைவாக ரன் எடுக்க முயற்சி செய்தபோது கேதர் ஜாதவுக்கு வலது தொடையில் வலி ஏற்பட்டது.
காயத்துடன் போராடிய போதிலும், ஜாதவ் 27 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து 38வது ஓவரில் காயம் காரணமாக வெளியேறினார். ரவீந்திர ஜடேஜா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் முறையே ரூபெல் ஹொசைன் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் பந்துகளில் அவுட்டாகினர். இதனால், இந்திய அணியின் வெற்றி கடினமாகத் தோன்றியது.
அப்போது இந்திய அணிக்கு 17 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டது. கேதர் ஜாதவ் 48வது ஓவரில் திரும்பி இந்திய அணியின் வெற்றிக்கு போராட தொடங்கினார். மறுமுனையில் குல்தீப் யாதவ் தட்டி தட்டி ஒரு ரன்களை திரட்டி கொண்டிருந்தார்.
இதனால், கடைசி ஓவரில் இந்தியாவுக்கு 3 ரன்கள் தேவை, ஜாதவுடன் குல்தீப் யாதவ் இருந்தார். முதல் பந்தில் ஒரு ரன் எடுத்த குல்தீப், அடுத்த பந்தில் ஜாதவ் ஒரு ரன் எடுத்தார். ஜாதவ் ஆறாவது பந்தில் ஒரு ரன் எடுத்து இந்திய அணிக்கு வெற்றியை தந்தார். ஜாதவ் இல்லாதிருந்தால், இந்திய அணி அந்த போட்டியில் தோற்றிருக்கலாம். கேதர் ஜாதவ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 27 பந்துகளில் 1 பவுண்டரி ஒரு சிக்ஸர் உதவியுடன் 23 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம், 2018 ஆசியக் கோப்பை வங்கதேசத்திற்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 7வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது.