5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

On This Day: லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் இந்தியா செய்த சம்பவம்.. இதே நாளில் இங்கிலாந்தை வீழ்த்தி மிரட்டிய விராட் படை..!

Indian Cricket Team: இங்கிலாந்தில் உள்ள லாட்ர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது. இந்தியா தனது 5வது மற்றும் கடைசி நாளில் 8 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணி 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி 120 ரன்களுக்குள் சுருண்டது. இதன்மூலம், வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் வெற்றியை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி படைத்தது.

On This Day: லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் இந்தியா செய்த சம்பவம்.. இதே நாளில் இங்கிலாந்தை வீழ்த்தி மிரட்டிய விராட் படை..!
இந்தியா – இங்கிலாந்து
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 16 Aug 2024 09:13 AM

இந்தியா வெற்றி: ஆகஸ்ட் 16, 2021 அன்று லார்ட்ஸில் இங்கிலாந்தை 151 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, இந்திய அணி மறக்கமுடியாத டெஸ்ட் வெற்றிகளில் ஒன்றை பதிவு செய்தது. இங்கிலாந்தில் உள்ள லாட்ர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது. இந்தியா தனது 5வது மற்றும் கடைசி நாளில் 8 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணி 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி 120 ரன்களுக்குள் சுருண்டது. இதன்மூலம், வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் வெற்றியை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி படைத்தது. அதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: IPL 2024: ஐபிஎல் 2025ல் மீண்டும் விளையாடப்போகும் தோனி! பிசிசிஐ பக்கா பிளான்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ்:

முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீசுவதாக முடிவு செய்தது. அதன் அடிப்படையில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். இருவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி முதல் விக்கெட் 126 ரன்கள் குவித்தனர். 83 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மா ஆண்டர்சன் பந்துவீச்சில் க்ளீன் போல்டாக, கே.எல். ராகுல் 129 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 42 ரன்களும், ரிஷப் பண்ட் 37 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 40 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக இந்திய முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ்:

எதிர்பார்த்ததை விட இங்கிலாந்து அணி சிறப்பாகவே செயல்பட்டது. அதிலும், இங்கிலாந்து அணியின் அப்போதைய டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் 180 ரன்கள் எடுத்து இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்திருந்தார். இவருக்கு அடுத்தபடியாக, ஜானி பேரிஸ்டோவ் 57 ரன்களும், தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் 49 ரன்களும் எடுத்திருந்தனர். இதன் காரணமாக, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 391 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து ஆட்டமிழந்தது.

இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ்:

இந்திய அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸ் சற்று தடுமாற்றத்துடனே இருந்தது. தொடக்க வீரர்கள் முதல் மிடில் பேட்ஸ்மேன்கள் வரை அடுத்தடுத்து விக்கெட்கள் இழந்தது ஏமாற்றம் அளித்தனர். அஜிங்க்யா ரஹானே மட்டும் ஒரு முனையில் போராடி அரைசதம் கடந்து 61 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தவித்த இந்திய அணிக்கு பும்ரா மற்றும் முகமது ஷமி கைக்கொடுத்தனர். முகமது ஷமி அதிரடியாக விளையாடி 56 ரன்கள் குவிக்க, மறு பக்கம் 64 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி நாள் மதிய நேரத்தின்போது இந்திய அணி 298 ரன்களுக்கு 8 விக்கெட் இழப்பிற்கு டிக்ளேர் செய்தது.

ALSO READ: IPL 2025: ஐபிஎல்லில் முக்கிய வீரரை கழட்டி விடப்போகும் மும்பை இந்தியன்ஸ்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இதன் காரணமாக, இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 120 ரன்களுக்குள் சுருண்டு ஆல் அவுட் ஆனது.

இந்தியா அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 4 விக்கெட்களும், பும்ரா 3 விக்கெட்களும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்களும் எடுத்து, இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.

Latest News