On This Day in 2023: இதே நாளில் உடைந்த இந்தியர்களின் மனம்! இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியனான நாள்!
19th November, IND vs AUS: 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் முதல் அரையிறுதி போட்டி வரை ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. லீக் சுற்றுகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பலமிக்க அணிகளை ஓடவிட்டது.
கடந்த ஆண்டு அதாவது 2023ம் ஆண்டு இதே நாளில் (நவம்பர் 19) ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. இதனால் 140 கோடி இந்தியர்களின் மனம் சுக்குசுக்காய் உடைந்தது. இந்த தோல்விக்கு பிறகு இன்று வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை இந்திய ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டிக்கு முன்புவரை தொடர்ந்து 9 லீக் போட்டிகளில் வெற்றி பெற்றது. பின்னர், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தொடர்ந்து 10வது போட்டியிலும் வெற்றி பெற்றது.
அரையிறுதியில் நியூசிலாந்து போன்ற பலம் வாய்ந்த அணியை வீழ்த்திய இந்திய அணி, இறுதிப் போட்டியில் எளிதான வென்று ஒருநாள் உலகக் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. நவம்பர் 19, 2023ம் தேதி அன்று, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஒரு போட்டியில் கூட தோல்வி இல்லை:
2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் முதல் அரையிறுதி போட்டி வரை ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. லீக் சுற்றுகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பலமிக்க அணிகளை ஓடவிட்டது. அதேபோல் 2023 உலகக் கோப்பை போட்டிகள் அனைத்திலும் இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பாகவே செயல்பட்டனர்.
on this day #IndvsAusfinal 😢 pic.twitter.com/7301tNMPTd
— Owais (@techsport_0014) November 19, 2024
உலகக் கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 765 ரன்களும், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அதிரடியாக பேட்டிங் செய்த கேப்டன் ரோஹித் சர்மா 597 ரன்கள் எடுத்திருந்தனர். அதேபோல், முகமது ஷமி 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்காரணமாக, இந்திய அணி 2011க்கு பிறகு சொந்த மண்ணில் உலகக் கோப்பை வெல்லும் என காத்திருந்தனர். ஆனால், டிராவிஸ் ஹெட்டின் சதத்தால் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. தோல்விக்கு பிறகு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி என அனைவரும் அழுதது இன்றும் மறக்க முடியாது.
போட்டியில் நடந்தது என்ன..?
முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீசுவதாக தெரிவித்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித் சர்மாவுடன் விராட் கோலியும் ரன் எண்ணிக்கையை தொடங்கினார். அந்த உலகக் கோப்பை முழுவதும் போலவே, இறுதிப் போட்டியிலும் ரோஹித் சர்மா அற்புதமாக பேட்டிங் செய்து 31 பந்துகளில் 46 ரன்கள் குவித்து அவுட்டானார். இதன்பிறகு, விராட் கோலி 63 பந்துகளில் 54 ரன்களும், கே.எல்.ராகுல் 107 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 240 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Exactly a year ago 😭#IndvsAusfinal pic.twitter.com/mnOCgVlBQm
— Harsh (@freakin229) November 18, 2024
241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்து, சாம்பியன் பட்டத்தை வென்றது. டிராவிஸ் ஹெட் 137 ரன்களும், மார்னஸ் லாபுசாக்னே 58 ரன்களும் எடுத்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு உதவினர்.
137 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய டிராவிஸ் ஹெட், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு, 2024 டி20 உலகக் கோப்பையிலும் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை இறுதிப்போட்டியில் வீழ்த்தி கோப்பையை வென்றது.